Monday, February 27, 2012

இஸ்லாத்தில் நேரத்தின் முக்கியத்துவம்

    அல்லாஹ் குர்ஆனில் பல இடங்களில் நேரத்தின் மீதும் காலத்தின் மீதும் சத்தியம் செய்துள்ளான்.
    வல் அஸ்;ர்
    வல் லைல்
    வந் நஹார்
    வழ் ழுஹா

    நேரத்தை வலியுறுத்தி பல ஹதீஸ்கள் வந்துள்ளன.
    யாருடைய நேற்று இன்றுபோல் இருக்கின்றதோ அவன் ஏமாளியாவான்..

    நேரத்தைத் திட்டமிட்டுப் பயன்படுத்துமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
    அறிவுடையவன் தன் நேரத்தை நான்கு பகுதிகளாக வகுத்துக்கொள்வான். ஒரு பகுதி நேரத்தில் தன் இரட்சகனை வணங்குவான். அடுத்த பகுதியில் தன்னை சுயவிசாரணை செய்வான். மூன்றாம் பகுதியில் அல்லாஹ்வின் படைப்புக்கள் பற்றி சிந்திப்பான். நான்காம் பகுதியில் தன் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வான். (ஹதீஸ்)

    இஸ்லாமியக் கடமைகள் பல நேரம் அல்லது காலம் வரையறுக்கப்பட்டதாகவே அமைந்துள்ளன.
    தொழுகை, நோன்பு, ஹஜ்..

    ஒருவன் தன் காலத்தை எப்படிக்கழித்தான் என்பது மறுமையில் கேட்கப்படும் முக்கிய கேள்வி

    உலகத்தில் திருப்பிப் பெறமுடியாத செல்வம், அருள் நேரம். இது ஒரு அமானிதம் ஆகும்.

    நேரத்தை வீணடித்தல் அல்லாஹ்வின் அருட்கொடையைப் புறக்கணித்தல் ஆகும்.

    நேரத்தின் முக்கியம் பற்றி பல இஸ்லாமிய அறிஞர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்
    நேரம் கூரிய வால் போன்றது. அதை நீ வெட்டாவிட்டால் அது உன்னை வெட்டிவிடும்.
        நேரத்தைவிடக் கடமைகள் அதிகமானது. (ஹஸன் அல்-பன்னா ரஹ்.)
    மனிதா நீ நாட்களால் உருவானவன். ஒவ்வொரு நாளும் கழியும் போது உன்னில் xரு பகுதி அழிந்துவிடுகின்றது. (ஹஸனுல் பஸரீ ரஹ்.)
    நான் ஒரு கூட்டத்தினரைச் சந்தித்தேன். அவர்கள் தங்கள் செல்வத்தில் காட்டும் அக்கரையை விட நேரத்தைப் பயன்படுத்துவதில் அக்கரை காட்டுகின்றார்கள். (ஹஸனுல் பஸரீ ரஹ்.)

    முஹாஸபா எனும் சுயவிசாரனையில் ஒருவர் தினமும் ஈடுபடுவதன் மூலம் நேரத்தைச் சிறப்பாகப் பயன்படுத்த இஸ்லாம் தூண்டுகின்றது.


Sunday, February 26, 2012

பரிணாமத்தின் அபத்தம்!

 எம்.ஆர். ஹிஷாம் முஹம்மத்

பரிணாமம் என்ற பெயரில்…

உலகில் வாழும் உயிரினங்கள் அனைத்தையும் அவற்றிற்குரிய சிறப்பான பண்புகளைக் கொடுத்து  மாபெரும் சக்தி கொண்டவனான அல்லாஹ் படைத்தான் என நாம் விசுவாசிக்கின்றோம். இது எமது விசுவாசம் மட்டுமல்ல. எமது பகுத்தறிவுக்கு உடன்பாடானதும் எமது இயல்புக்கு ஒத்ததுமான விடயமுமாகும். எம்மை அழகாகப் படைத்து  எம்மைச் சுற்றி உள்ள அனைத்தையும் எமக்கென வசப்படுத்தித் தந்த அந்த ஏக இறைவனை ஏற்றுள்ளோம். அவனுக்கு நன்றி செலுத்தி  வழிப்பட்டு நடப்பது எமது தலையாய பொறுப்பு எனவும் நாம் அறிகின்றௌம்.

     இது இவ்வாறிருக்க படைத்த இறைவனை விட்டும் மக்களை அந்நியப்படுத்தி அவர்களை வெறும் சுயநலமிகளாக மாற்றுவதற்காக திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு பயங்கரமான கொள்கையே கூர்ப்புக் கொள்கை ஆகும். ஆரம்பத்தில் எளிமையான அங்கிகள் தோன்றி பின்னர் அவை விகாரமடைந்து தற்போதுள்ள நிலையைப் பெற்றன என்றும் இச்செயற்பாடுகள் அனைத்தும் தாமாகவே எந்தவொரு சக்தியின் உதவியுமின்றி நடந்தேறின என்றும் இந்த வாதம் குறிப்பிடுகின்றது. இந்தக் கொள்கை நாம் விசுவாசிக்கும் அல்-குர்ஆன், அஸ்-ஸுன்னா என்பவற்றுக் முற்றிலும் முரணானது. அதுமட்டுமன்றி எமது பகுத்தறிவுக்கும் மாற்றமானது. ஆயினும் படைத்தல் கொள்கையை விட இந்தக் கூர்ப்புக் கொள்கைக்கே அதிக சான்றுகள் உள்ளன என்று கூறி இன்றைய வி(அ)ஞ்ஞானம் மக்களிடத்தல்  திணிக்க முற்படுகின்றது. இக் கொள்கைத் திணிப்பு எமது நாட்டில் உள்ள பாடத்திட்டத்தில்  கூட பெரும் பங்கு வகிக்கிறது. (உதாரணம்:  கூர்ப்பு- தரம் 11 விஞ்ஞானமும் தொழிநுட்பமும்) பாடப்புத்தகங்களில் இக் கூர்ப்புக் கொள்கையின் ஒரு பக்க வாதங்கள் மட்டுமே முன்வைக்கப்படுகின்றமைதான் இங்கு மிகவும் வருந்துதற்குரியது. எனவே இவற்றைப் படிக்கும் போது இக்கொள்கை பற்றிய நடுநிலையான கண்ணோட்டத்தை அறியாததால் அதன் போலித் தன்மையைப் புரியாததால் தம்மை அறியாமலேயே சிலபோது மாணவர்கள் இக்கொள்கையை உள்வாங்கிக்கொள்ள நேரிடும். அந்நியப் படைகளால் ஒரு சமூகம் ஆக்கிரமிக்கப்படுவதைவிட அபத்தமான சிந்தனைகளால் ஆக்கிரமிக்கப்படுவது மிகவும் கொடியது. ஏனெனில் அதிலிருந்து விடுபடுவது மிகவும் இலகுவான காரியம் அன்று. எனவே இப்படியான நச்சுக் கருத்துக்கள் எமது இளைய தலைமுறையில் ஆதிக்கம் செலுத்துவதை நாம் அனுமதிக்காமல் அவர்களது நம்பிக்கையை (அகீதா) பாதுகாப்பது ஒரு சமூகப் பொறுப்பாகும். அவர்களுக்குக் கூர்ப்புக் கொள்கையைச் சொல்லிக்கொடுப்பதில் தவறில்லை. ஆனால் அதனை நடுநிலையாக நின்று அதற்கான விமர்சனங்களையும் அல்-குர்ஆன், அஸ்-ஸுன்னா மற்றும் அறிவியல் ரீதியாக முன்வைத்து அதன் போலித்தன்மையை விளக்கவேண்டும். இதனை எமது பாடத் திட்டத்தினூடாக நுழைப்பது அசாத்தியமாயினும் அதற்கு வெளியே நின்று பல வழிகள் ஊடாக இதனைச் செய்ய முடியும். அப்படியான ஒரு சிறு முயற்சியே இக் கட்டுரை. இங்கு பரிணாம வாதத்துக்கான ஒரு சில மறுப்புக்கள் மாத்திரம் மிக எளிமையான முறையில் விளக்கப்படுகின்றது.

“கூர்ப்புக் கொள்கை”என்றால் என்ன?

     இறைவன் இருக்கின்றான் என்பதை விசுவாசிக்காதவர்களால் முன்வைக்கப்பட்ட ஒரு தவறான கருத்தே கூர்ப்புக் கொள்கையாகும். இக்கொள்கை சுமார் 150 வருடங்களுக்கு முன்னர் சார்ள்ஸ் டார்வின் என்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இயற்கை விஞ்ஞானியால்; முன்வைக்கப்பட்டது. இவரது பகுத்தறிவுக்கெட்டாத கொள்கையின் படி உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் தற்செயலாகத் திடீரெனத் தோன்றியவையாம். உதாரணமாக மீன்கள் திடீரென ஒரு நாள் ஊர்வன என்ற இனப்பரிமானத்தைப் பெற்றது. இன்னொரு நாள் அந்த ஊர்வன பறக்கத் தொடங்கிப் பறவைகளாயின. அதே போன்று குரங்குகள் மனிதர்களாக மாறின. இந்த வாதத்தில் எவ்வித உண்மையும் கிடையாது. ஒரே ஒரு உண்மை என்னவெனில் இந்த உலகத்தையும் அதில் உள்ள அனைத்து உயிரினங்களையும் படைத்தவன் அல்லாஹ் ஒருவனே. இவ்விடயத்தில் டார்வினும் அவரது சகாக்களும் ஒரு அப்பட்டமான பொய்யையே உலகறியச் செய்திருக்கிறார்கள். இதனை நவீன விஞ்ஞானமும் தலைமேல் தூக்கி வைத்து ஆராதித்து வருகின்றமைமாதான் வினோதமானது.

     உயிருள்ள உயிரற்ற அனைத்து பொருட்களினதும் மிகச் சிறிய பகுதி அணு எனப்படுகின்றது. அதாவது நாமும் எம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் பல மில்லியன் அணுக்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றௌம். பரிணாமவாதிகள்.  வெவ்வேறாக இருந்த அணுக்கள் தாமாகவே தீர்மானித்து ஒன்று சேர்ந்து உயிரினங்கள் தோற்றம் பெற்றன என்கின்றனர். ஒரு நாள் திடீரென்று ஏற்பட்ட பலத்த காற்று அல்லது புயல் இந்த அணுக்கள் ஒன்று சேரக் காரணமாக இருந்தது என இந்த மூடத்தனமான வாதம் சொல்கிறது.

     டார்வினின் கருத்துப்படி இந்த அணுக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கலங்கள் உருவாயின. எல்லா உயிரினங்களும் கலங்களால் ஆனவை என்பது நாம் அறிந்ததே. இந்தக் கலங்கள் ஒன்றிணைந்துதான் எமது உடம்பில் உள்ள கண்கள்,செவிகள்,இதயம்,  இரத்தம் என அனைத்தும் உருவாக்கப்பட்டுள்ளன.

     கலங்கள் மிகவும் சிக்கலான தொகுதிகள். ஒவ்வொரு கலமும் பல புன்னங்கங்களைக் கொண்டது. ஒரு கலத்தை நாம் ஒரு பாரிய தொழிற்சாலைக்கு ஒப்பிடலாம். அந்த வகையில் ஒரு கலத்தில் உற்பத்தியாளர்கள், பொருட்களை எடுத்துச் செல்வோர், நுளைவாயில், வெளியேறும் வாயில், உற்பத்தி நிலையம், தகவல் கொண்டுசெல்வோர் சக்திக் கட்டுப்பாட்டாளர் எனப் பலர் காணப்படுவர். இப்படியான ஒரு சிக்கலானதொரு தொழிற்சாலை எப்படித் தானாக உருவாக முடியும்? கற்கள், மண், சீமெந்து, நீர் என்பவையெல்லாம் சேர்ந்து திடீரென ஏற்பட்ட ஒரு புயலினால் ஒன்றிணைந்து ஒரு அங்க சம்பூரணமான தொழிற்சாலையாக மாறுவது எப்படி சாத்தியமாகும்? இது ஒருபோதும் முடியாது. இல்லை. இது சாத்தியம் என்று சொல்பவரை நாம் என்ன பெயர் கொண்டழைப்போம்? இதுபோன்றுதான் “கலங்கள் தற்செயலாக உருவாகின” என்று கூறுவோரின் நிலையும். இவர்கள் கூறும் வாதத்திற்;கு ஆதாரமாக ஏன் ஒரு சிறு பரிசோதனையைக் கூட இன்றைய பரிணாமவாதிகளால் நிகழ்த்திக் காட்ட முடியாது? உயிரில்லாத அணுக்கள் ஒன்று சேர்ந்தவுடன் உயிருள்ள ஒரு விலங்கு எப்படி உருவானது? இந்த வினாக்களுக்கு முன்னால் இந்த கூர்ப்பு வாதிகள் வாயடைத்துப் போகிறார்கள்.

கூர்ப்பு எப்படி நடைபெறுகிறதாம்?

    அல்லாஹ் எல்லா அங்கிகளையும் தனித்தனியே படைத்தான். ஒன்றிலிருந்து இன்னொன்றை அவன் கூர்ப்படையச் செய்யவில்லை. ஒவ்வொரு உயிரினமும் அவற்றிற்குரிய தனியான குணாதியசங்களோடு இருக்க வேண்டும் என்பதற்காகவே அவன் அப்படிச் செய்தான்.

     உயிரினங்கள் காலத்துக்குக் காலம் மாற்றமடைகின்றன. வளர்ச்சி பெறுகின்றன. இன்னுமோர் உயிரினமாகக் கூடக் கூர்ப்டைகின்றன என்கிறது பரிணாம வாதம். நாம் இன்று காணும் ஆமைகள், பல்லிகள் பாம்புகள் எல்லாம் பறவைகளாகக் கூர்ப்படைந்தன என இவர்கள் வாதிடுகின்றனர். இந்த மாறுதல்கள்களுக்கான காரணங்களை அவர்கள் இப்படி விளக்குகிறார்கள்.

1)  இயற்கைத் தேர்வு விதி
அதனை எளிதாக நாம் விளக்குவதாக இருந்தால் சூழலுக்குப் பொருத்தமான (இயைபாக்கம் அடையக் கூடிய) உயிரினங்கள் பிழைத்துக்கொள்ளும். இவை தவிர்ந்த பலவீனமான உயிரினங்கள் அழிந்துபோகும் என்று நாம் சொல்லலாம். உதாரணமாக ஒரு மான் கூட்டத்தை எடுத்துக் கொள்வோம். அவை அடிக்கடி வேட்டையாடும் விலங்குகளால் தாக்கப்படுகின்றன. இச்செயல் தொடந்து நடக்கும் போது மான்கள் வேகமாக ஓடத் தொடங்கும். அப்போது மிக வேகமாக ஓடத்தக்க மான்கள் மாத்திரம் பிழைத்துக் கொள்ளும். படிப்படியாகப் பலவீனமான மெதுவாக ஓடும் மான்கள் வேட்டையாடப்பட்டு முற்றாக அழிந்துபோய்விடும். நல்ல ஆரோக்கியமான பலமான மான்கள் மட்டும் எஞ்சும். எனவே காலப்போக்கில் இயைபாக்கம் அடையக் கூடிய மான்கள் மட்டும் உயிர்வாழும். இது வரை நாம் இங்கே சொன்னது  உண்மைதான். ஆனால் இதற்கும் கூர்ப்புக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. இதற்கு மாற்றமாக பரிணாமவாதம் இந்த மான் இனம் இன்னும் படிப்படியாக வளர்ச்சியுற்று இன்னோர் உயிரினமாக- உதாரணமாக ஒட்டகச் சிவிங்கியாக-  மாறிவிடும் என்கிறது. இது எவ்வளவு தவறானது என்பதை நாம் இலகுவில் விளங்கிக்கொள்ளலாம். மான்கள் எவ்வளவு வேகமாக ஓடினாலும் அதன் கழுத்து எவ்வளவு நீண்டாலும் பரவாயில்லை. ஆனால் அது எப்படி சிங்கமாக சிவிங்கியாக இன்னொரு உயிரினமாக மாற்றமடையும்? இப்படியான சம்பவங்களை நாம் மாயா ஜாலக் கதைகளிலேதான் காணலாம். அங்கே ஒரு தவளை அழகிய இளவரசனாக மாறும். இந்தக் கதையெல்லாம் நடைமுறையில் நிகழுமா?

2)  விகாரம்
விகாரம் என்பது உயிரினங்களின் உடம்பில் ஏற்படும் பயங்கரமான மாற்றத்தைக் குறிக்கும். இந்த விகாரத்துக்குக் காரணம் கதிர்வீச்சு  இரசாயனப் பதார்த்தங்கள் என்பனவாம். உண்மையில் கதிர்வீச்சு இரசாயனப் பதார்த்தங்கள் என்பன அனேகமாக உயிரினங்களுக்குத் தீங்கையே விளைவிக்கின்றன. 60 வருடங்களுக்கு முன்னர் நடந்த இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஜப்பானில் ஹிரோஷிமா நகரில் அணுக்குண்டு வீசப்பட்டது. இந்த அணுக்குண்டு வெளியிட்ட கதிர் வீச்சுக்கள் சுற்றியுள்ள பகுதியில் பரவியதால் மக்களுக்கு மிகவும் கொடூரமான பாதிப்புக்கள் ஏற்பட்டன. இக் கதிர்வீச்சுக் காரணமாக பல்வேறு உயிரிழப்புக்கள் கடும் காயங்கள் உருக்குலைவுகள் எனப் பல பாதிப்புக்கள் நேர்ந்தன.

     இப்படித்தான் ஒரு நாள் ஒரு மீன் விகாரத்துக்கு உட்படுகின்றது. அது ஹிரோஷிமா மக்கள் எதிர்கொண்ட ஒரு கதிர்வீச்சு போன்றது. இந்த விகாரத்தின் காரணமாக மீனின் உடம்பில் சில மாற்றங்கள் ஏற்பட்டு அது ஒரு முதளையாக மாறிவிடுகின்றது. அதாவது மீனின் உடம்பில் உள்ள கலங்களில் அமைந்திருக்கும் நிறமூர்த்தங்களில் ஏற்படும் மாற்றம் காரணமாக அடுத்துவரும் சந்ததிகளில் விதவிதமான விகாரங்கள் ஏற்பட்டு இறுதியில் முற்றிலும் வித்தியாசமான இன்னோர் உயிரியாக அது மாறிவிடுகின்றது. இது எவ்வளவு அபத்தமான வாதம்! நாம் ஏற்கனவே பார்த்தது போன்று விகாரம் என்பது எப்போதும் உயிரனங்களுக்கு தீங்கு விளைவி;ப்பதாகவே இருந்துவந்துள்ளது. இதன் மூலம் ஒன்றில் உயிரினங்கள் அழந்துபோகவோ முடமாகவோஇ பலவீனமாகவோ மாறிவிடும்.

     இந்தப் பரிணாமவாதிகளின் வாதத்தைப் பின்வரும் உதாரணத்துக்கு ஒப்பிடலாம். நாம் ஒரு கோடாரியை எடுத்து கறுப்பு வெள்ளைத் தொலைக் காட்சிப் பெட்டி ஒன்றைத் தகர்க்கின்றௌம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அது அப்போது ஒரு வர்ணத் தொலைக்காட்சியாக மாறிவிடுமா? ஒரு போதும் இல்லை. நிச்சயமாக அது உடைந்து தகர்ந்து போய்விடும். இப்படித்தான் திடீரென நிகழும் விகாரம் ஒருபோதும் உயிரினத்துக்கு நன்மை பயக்காது.

நிலைமாறும் வடிவம் என்றால் என்ன?

 பரினாமவாதிகள் கண்டுபிடித்த இன்னுமோர் பொய்தான் “நிலைமாறும் வடிவம்”. இது சிலபோது “இடைக் கடப்பு வடிவம்” என்றும் இவர்களால் அழைக்கப்படுவதுண்டு.

     உயிரினங்கள் எல்லாம் இன்னொன்றில் இருந்து கூர்ப்பு அடைந்தன முதல் உயிரினம் தற்செயலாகத் தோற்றம் பெற்றது என்றும் அதிலிருந்து இன்னொரு உயிரினமும் அதிலிருந்து பிரிதொரு உயிரினமும் வளர்ச்சி கண்டது என்றெல்லாம் நம்புமாறு பரினாமவாதிகள் எங்களைக் கேட்கின்றனர். உதாரணமாக மீன் இனம் நட்சத்திர மீன் வகையிலிருந்து கூர்ப்படைந்தது என்கின்றனர் இவர்கள். இதன் கருத்து ஒருநாள் திடீரென ஏற்பட்ட விகாரத்தினால் நட்சத்திர மீனின் ஒரு கையை அது இழந்தது. பின்னர் அடுத்து வந்த மில்லியன் கணக்கான வருடங்களில் அதன் ஏனைய கால்களையும் படிப்படியாக இழந்து அவ்விடத்தில் செட்டைகள் தாமாகவே முளைக்கத் தொடங்கின. இதே கால கட்டத்தில் ஒரு மீனுக்கு எவை எவையெல்லாம் அவசியமோ அந்த மாற்றங்கள் எல்லாம் ஏற்பட்டன. இப்படி ஒரு நட்சத்திர மீன் சாதாரண மீன் வடிவைப் பெற்றது என்றால் இது ஒரு அதீத கற்பனையாகத் தெரியவில்லையா?

     இந்த நிலைமாறும் பருவத்தில் வாழ்ந்த கற்பனை ஜீவிகள் கூர்ப்புப் படிமுறையில் “இடை அங்கிகள்” (ஐவெநசஅநனயைவந ளுpநஉநைள) எனப்படுகின்றன. உதாரணமாக நட்சத்திர மீனுக்கும் சாதாரண மீனுக்கும் இடைப்பட்ட பருவம். அல்லது குரங்குக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட பருவம். இந்தப் பரினாமவாதத்தின்படிஉயிரினங்கள் எல்லாம் பதாங்கத்துக்குரிய (எநளவபையைட) அல்லது முழுமைபெறாத அரைகுறையான ஒரு கட்டத்தைத் தாண்டியிருக்க வேண்டும். இப்படி விகாரமான முழுமைபெறாத அரைகுறை உயிரிகள் பற்றி இதுவரை எந்தத் தடயமும் கிடைக்கப்பெறவில்லை. இவர்கள் கூறும் “இடை அங்கிகள்” இன் உயிர்ச்சுவட்டு ஆதாரங்கள் உலகின் எப்பாகத்திலும் இதுவரை கண்டெடுக்கப்படவில்லை.

குரங்கிலிருந்து மனிதனா?

     மனிதன் அல்லாஹ்வின் மிக உன்னதமான சிருஷ்டி. அந்த மனிதனைக் குரங்குகளின் வழித்தோன்றல் என்பது நம்மையே நாம் தாழ்த்திக்கொள்வதாகவல்லவா இருக்கும்? இந்தப் பரிணாமவாதிகள் யூத எனப்படும் வால் இல்லாக் குரங்களிலிருந்து மனிதன் தோன்றினான் என்கிறார்கள். இவ்வாறு இவர்கள் கூறுவதற்கு சிறுபிள்ளைத் தனமான காரணங்கள் சில உள்ளன.

     ஒன்று குரங்குகள் மனதனை உருவத்தில் ஒத்ததாக இருப்பது. அப்படியாயின் மனதனைப் போல் கிளி பேசுகிறது. மனிதனது கண்களை ஒத்த கண்கள் ஒக்டோபஸ்களுக்கு உள்ளன. நாய், பூனை என்பன மனிதனைப் போல் கட்டளைகளைப் பின்பற்றுகின்றன. இதற்காக மனிதன் நாயிலிருந்து, பூனையிலிருந்து, கிளியிலிருந்து,  ஒக்டோபஸிலிருந்து தோன்றினான் என்று கூற முடியுமா?

     அடுத்து இவர்கள் இக்கருத்தை நிறுவுவதற்காக முன்வைக்கும் உயிர்ச்சுவட்டு ஆதராங்களைப் பார்ப்போம். இவர்கள் மனிதனது பரணாம வளர்ச்சிக் கட்டங்களாகக் காட்டும் படங்களும் போலியானவையே. உலகில் பல வித்தியாசமான இனங்கள் வெவ்வேறு பகுதிகளில் வாழ்கின்றனர். இவ்வினத்தவர்கள் ஒருவருக்கொருவர் தோற்றத்திலும் நிறத்திலும் மிகவும் வித்தியாசமானவர்கள். உதாரணமாக எஸ்கிமோக்கள் ஆபிரிக்கர்கள், சீனர்கள்,அபோரிஜீன்ஸ்கள் எனப் பல்வேறு இனங்கள் உலகில் உள்ளனர். இவர்களில் எஸ்கிமோக்கள் மிகவும் சிறியவர்கள். அபோரிஜீன்ஸ்களுடைய மண்டையோடு ஒப்பீட்டளவில் சிறியது. இப்படி வித்தியாசமான இனங்களின் சுவடுகளின் மண்டையோடுகளை வைத்துக்கொண்டு இவை மனிதன் குரங்கிலிருந்து மாறும் நிலைப் பருவத்துக்குச் சொந்தமானது என்று கூறி  உலகை ஏமாற்றமுனைகின்றனர் இந்தப் பரிணாமவாதிகள். இதுவரை இவர்களால்  அரைகுறை மனிதக் குரங்கின் தடயங்களை உலகின் எந்த மூலைமுடுக்கிலாவது கண்டெடுக்கமுடியவில்லை.

உண்மை தெளிவானது!

     இப்படிப் பரினாமவாதிகள் சோடித்துக் கூறும் இந்தக் “கதை”களை எல்லாம் அறிவு பூர்வமாகவும் தர்க்க ரீதியாகவும் இலகுவாகத் தகர்த்தெறிந்துவிடமுடியும். இவை எல்லாவற்றுக்கும் மேலாகஇ இந்த டார்வினின் போலிவாதங்களை  எல்லாம் அல்-குர்ஆன் முழுமையாக மறுக்கின்றது. அல்லாஹ் இருக்கின்றான் என்பதற்காக அல்குர்ஆன் முன்வைக்கும் ஆதாரங்கள்இ அத்தாட்சிகள் முன் இந்தப் பொய்கள் எல்லாம் எப்பெறுமானமும் அற்றுப் போய்விடுகின்றன.

     ஆகவேஇ உயிரினங்கள் ஒருபோதும் இன்னொன்றிலிருந்து வளர்ச்சி பெறவில்லை. உயிரினங்கள் ஒவ்வொன்றையும்  அல்லாஹ் அதற்கே  உரிய தனிப் பண்புகளோடு படைத்தான். அவை ஒரு போதும் அரைகுறை வளர்ச்சிக் கட்டத்தைத் தாண்டி வரவில்லை. அல்லாஹ் எதனையும் ப+ரணமாகப் படைப்பவன். அவனது படைப்பில் எவ்விதக் குறைபாடும்இ குளறுபடியும் நிகழ்வதில்லை. ஓர் உயிரினத்தில் இருந்துதான் இன்னொரு உயிரினத்தைப் படைக்க வேண்டும் என்ற வறுமையும் அவனுக்கு இல்லை. அவன் இல்லாமையில் இருந்து படைப்பவன். அவன் எந்தவொன்றையும் படைக்க நாடினால் ஒரு வார்த்தையே போதுமானது. அவன் தான் வானங்கள் பூமி உயிரினங்கள் அனைத்தையும் நுணுக்கமான திட்டமிடலுடன் படைத்துக் காப்பவன். எனவே இந்தத் தெளிவான உண்மையை விட்டும் மக்களைத் திசைதிருப்ப முயலும் கூர்ப்புக் கொள்கை போன்ற நச்சுக் கருத்துக்களிலிருந்து நாமும் விடுபட்டு எம் சமூகத்தையும் பாதுகாப்போம்.

“வானங்கள் பூமி அனைத்தையும் படைத்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்” (ஸூறா பாதிர்)

நன்றி : ஹாரூன் யஹ்யா

ஸீறா தொடர்பான வினாக்கள்
01)    நபி (ஸல்) அவர்கள் எங்கே பிறந்தார்கள்?
02)    நபி (ஸல்) அவர்கள் எந்தக் கோத்திரத்தில் பிறந்தார்கள்?
03)    நபி (ஸல்) அவர்களின் தாய், தந்தை யாவர்?
04)    நபி (ஸல்) அவர்கள் பிறந்த வருடம் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
05)    நபி (ஸல்) அவர்கள் பிறந்த மாதம்  தினம் என்ன?
06)    நபி (ஸல்) அவர்களுக்குப் பாலூட்டிய செவிலித்தாய்மார்கள் யாவர்? .
07)    தாயின் மரணத்தின் பின் நபி (ஸல்) அவர்கள் யாரிடம் வளர்ந்தார்கள்? 
08)    பாட்டன் அப்துல் முத்தலிப் மரணித்ததின் பின் நபி (ஸல்) அவர்கள் யாரிடம் ஒப்படைக்கப்பட்டார்கள்?
09)    நபி (ஸல்) அவர்கள் சிறுவயதில் எந்தத் தொழிலில் ஈடுபட்டார்கள்? 
10)    நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் தஆலா சிறுவயதிலிருந்தே வீணான கேளிக்கைகளில் இருந்து பாதுகாத்தான் என்பதற்கு ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுக.
நபி (ஸல்) அவர்கள் இளைஞராக இருந்தபோது திருமண வைபவம் ஒன்று நடந்தது. இங்கே ஒரு பாடல் இசைக்கப்பட்டது. இதனைச் செவிமடுக்கவும் பார்க்கவும் நபி (ஸல்) அவர்கள் விரும்பினார்கள். ஆயினும் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு அதனைக் கேட்கவிடாமல் தூக்கத்தை ஏற்படுத்தினான்.
11)    நபி (ஸல்) அவர்களுக்கு நபிப்பட்டம் கிடைக்கும் முன்னரே சமூகத்தில் கௌரவமும் மதிப்பும் காணப்பட்டது என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுக.
கஃபாவைப் புனர்நிருமாணம் செய்ய முற்பட்டபோது ஹஜருல் அஸ்வத் கல்லை யார் வைப்பது என்பது சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சினையை மிகவும் கவனமாகத் தீர்த்து வைத்தார்கள். ஒரு துணி மீது ஹஜருல் அஸ்வத் கல்லை வைத்து கோத்திரத் தலைவர்களைத் தூக்க வைத்து பின்னர் அதனை நபி (ஸல்) அவர்கள் உரிய இடத்தில் வைத்தார்கள்.
12)    நபி (ஸல்) அவர்களின் இளமைக்காலத்திலேயே அவர்களுக்கு மக்காவாசிகள் வைத்த சிறப்புப் பெயர்கள் யாவை?
ஸாதிக் அமீன்
13)    நபி (ஸல்) அவர்கள் ஆடுமேய்த்ததைத் தொடர்ந்து என்ன தொழிலில் ஈடுபட்டார்கள்?
வியாபாரம் - ஆரம்பத்தில் அபூ தாலிபுடன் ஈடுபட்டார்கள். பின்னர் கதீஜா நாயகியின் வியாபாரத்தில் ஈடுபட்டார்கள்.
14)    நபி (ஸல்) அவர்கள் நபியாகத் தெரிவுசெய்யப்பட முன்னர் நடந்த அற்புதங்களில் ஒன்றைக் குறிப்பிடுக.
கதீஜா நாயகியின் வியாபாரத்தில் செல்லும் போது நபி (ஸல்) அவர்களைத் தொடர்ந்து மேகக் கூட்டம் வந்தமை.
15)    நபி (ஸல்) அவர்கள் தனது 25 ஆம் வயதில் முதன் முதலாக யாரைத் திருமணம் முடித்தார்கள்?
கதீஜா (ரழி) அவர்கள் (40 வயது)

16)    நபி (ஸல்) அவர்களுக்கு முதல் வஹி எப்போது இறங்கியது? தனது 40ஆம் வயதில்.
17)    நபி (ஸல்) அவர்களுக்கு எங்கே வைத்து வஹி இறங்கியது? ஹிறா குகையில்
18)    நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து வஹியை எடுத்துவந்தவர் யார்? ஜிப்றீல் (அலை)
19)    நபி (ஸல்) அவர்களுக்கு முதல் வஹி இறங்கிய சந்தர்ப்பத்தைக் குறிப்பிடுக.
நபி (ஸல்) அவர்கள் ஹிறாக் குகையில் இருந்த போது ஜிப்றீல் (அலை) அவர்கள் வந்து நபி (ஸல்) அவர்களை இறுக அணைத்து ஓதுவீராக ஓதுவீராக ஓதுவீராக என மூன்று முறை கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் மூன்று முறையும் எனக்கு ஓதத் தெரியாது என்றே குறிப்பிட்டார்கள். பின்னர் ஜிப்றீல் (அலை) அவர்கள் ஸூறா அலக் இன் முதல் ஐந்து வசனங்களையும் ஓதிக் காட்டி ஓதுமாறு குறிப்பிட்டார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களும் ஓதினார்கள். பின்னர் பதற்றத்தோடு வீடு சென்றார்கள். நபியவர்களை கதீஜா (ரழி) அவர்கள் ஆறுதல்படுத்தினார்கள்.
20)    முதன் முதலாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர் யார்? கதீஜா (ரழி)
21)    கதீஜா நாயகியின் பின்னர் இஸ்லாத்தை ஏற்றவர் யார்? அலி (ரழி)
22)    நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை இரகசியமாகப் பரப்புவதற்கு யாருடைய வீட்டைப் பயன்படுத்தினார்கள்? அர்கம் இப்னு அபில் அர்கம்
23)    நபி (ஸல்) அவர்கள் முதன் முதலாகப் பகிரங்கமான பிரச்சாரத்தை எங்கே இருந்து செய்தார்கள்? அச்சம்பவத்தைக் குறிப்பிடுக.
ஸபா மலையில் இருந்து. ஸபா மலையில் ஏறி குறைசிக் காபிர்களை நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். அவர்களை இஸ்லாத்தின் பால் அழைத்தார்கள். அப்போது அபூ லஹப் நபிகளாரைத் தூற்றினான். இவனை எதிர்த்து அல்லாஹ் ஸூறா லஹபை இறக்கிவைத்தான்.
24)    குறைசியரின் தொல்லைகள் அதிகரித்தபோது நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களில் சிலரை எங்கே ஹிஜ்றத் செல்லுமாறு பணித்தார்கள்? ஹபசா
25)    ஆமுல் ஹுஸ்ன் (துக்க ஆண்டு) என அழைக்கப்படுவது எது? நபி (ஸல்) அவர்களுடைய சிறிய தந்தை அபூ தாலிப் மனைவி கதீஜா (ரழி) ஆகியோர் மரணித்த வருடம்.
26)    நபி (ஸல்) அவர்கள் முதன் முதலாக எங்கே ஹிஜ்றத் செய்தார்கள்? தாஇப்
27)    உமர் (ரழி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற சம்பவத்தைச் சுருக்கமாகக் குறிப்பிடுக.
தங்கை பாத்திமா (ரழி) அவர்கள் குர்ஆன் ஓதக் கேட்டு இஸ்லாத்துக்கு வந்தமை.
28)    இஸ்றா,  மிஃறாஜ் ஆகியவை யாவை?
இஸ்றா என்பது நபி (ஸல்) அவர்கள் மக்காவில் கஃபாவிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு இரவுப் பயணம் மேற்கொண்டமை. மிஃறாஜ் என்பது மஸ்ஜிதுல் அக்ஸாவிலிருந்து விண்ணுலக யாத்திரை மேற்கொண்டமை.
29)    மிஃறாஜின் போது இடம்பெற்ற முக்கியமான நிகழ்வு எது? தொழுகை கடமையாக்கப்பட்டமை.
30)    மிஃறாஜ் எப்போது நடைபெற்றது? நுபுவ்வத் 10ஆம் வருடம்
31)    நபி (ஸல்) அவர்கள் மக்காவில் வைத்து மதீனாவாசிகளுடன் செய்துகொண்ட உடன்படிக்கைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? அகபா உடன்படிக்கைகள். (இரண்டு)
32)    மதீனாவின் பழைய பெயர் என்ன? யத்ரிப்
33)    நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்றத் சென்ற இரவு அவர்களின் படுக்கையில் உறங்கிய ஸஹாபி யார்? அலி (ரழி)
34)    நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்றத் செய்வதற்காகத் தெரிவுசெய்த நபித் தோழர் யார்? அபூ பக்ர் (ரழி)
35)    நபி (ஸல்) அவர்கள்; ஹிஜ்றத் செய்யும் வழியில் தங்கியிருந்த குகை எது? ஸவ்ர் குகை. (சம்பவத்தைக் குறிப்பிடுக)
36)    நபி (ஸல்) அவர்கள் தனது எத்தனையாவது வயதில் ஹிஜ்றத் செய்தார்கள்? 53ஆம் வயதில்
37)    ஹிஜ்றத்தின் போது நபி (ஸல்) அவர்களுக்கும் அபூ பக்ர் (ரழி) அவர்களுக்கும் தேவையான பயணப்பொதிகளைத் தயார்படுத்திக் கொடுத்த இரு ஸஹாபிப் பெண்களும் யாவர்? ஆயிசா (ரழி) அஸ்மா (ரழி)
38)    மதீனா சேர்ந்த நபியவர்களை மதீனத்துவாசிகள் எப்பாடலைப் பாடி வரவேற்றார்கள்? தலஅல் பத்ரு அலைனா…
39)    இஸ்லாமிய வரலாற்றில் நபி (ஸல்) அவர்களின் வருகையின் பின்னர் முதன் முதல் கட்டப்பட்ட பள்ளிவாசல் எது? மஸ்ஜிது குபா
40)    நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் கட்டிய பள்ளிவாசல் எவ்வாறு அழைக்கப்படுகின்றது? மஸ்ஜிதுன் நபவி
41)    முஸ்லிம்களின் முதலாவது கிப்லாவாக அமைந்தது எது? பைதுல் மக்திஸ்
42)    முஸ்லிம்களின் இரண்டாவது கிப்லா எது? கஃபா
43)    இஸ்லாமிய வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட முதல் போர் எது? பத்ர் யுத்தம் - ஹிஜ்றி 2 இல்
44)    பத்ர் யுத்தத்தில் கலந்துகொண்ட முஸ்லிம்கள், காபிர்கள் எத்தனை பேர்? 313 முஸ்லிம்கள், 1000 காபிர்கள்.
45)    உஹத் யுத்தம் எப்போது நடைபெற்றது? ஹிஜ்றி 3 இல்
46)    உஹத் யுத்தத்தில் கலந்து கொண்ட முஸ்லிம்கள்,  காபிர்கள் எத்தனைபேர்? 1000 முஸ்லிம்கள்,  3000 காபிர்கள்
47)    உஹத் யுத்தத்தில் முஸ்லிம்கள் பின்னடைவதற்குக் காரணமான விடயம் என்ன? முஸ்லிம்களில் சிலர் தலைதை;துவத்துக்குக் கட்டுப்படாமை.
48)    அஹ்ஸாப் யுத்தம் எப்போது நடைபெற்றது? ஹிஜ்றி 5ஆம் ஆண்டு.
49)    அஹ்ஸாப் யுத்தத்தில் பங்குகொண்ட முஸ்லிம்கள், காபிர்கள் எத்தனை பேர்? 3000 முஸ்லிம்கள்,  10000 காபிர்கள்
50)    அஹ்ஸாப் யுத்தத்தில் அகழி தோண்டுமாறு ஆலோசனை கூறிய ஸஹாபி யார்? ஸல்மானுல் பாரிஸி (ரழி)
51)    ஹுதைபிய்யா உடன்படிக்கை எப்போது நடைபெற்றது? ஹிஜ்றி 6 இல்
52)    ஹுதைபிய்யா உடன்படிக்கை யார் யாருக்கிடையில் நடைபெற்றது? முஸ்லிம்களுக்கும் குறைசிக் காபிர்களுக்கும் இடையில்
53)    ஹுதைபிய்யா உடன்படிக்கை மூலம் எத்தனை வருடப் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது? 10 வருடங்கள்
54)    மக்கா வெற்றி எப்போது நிகழ்ந்தது? ஹிஜ்றி 08 இல்
55)    மக்கா வெற்றியின் போது இஸ்லாத்தை ஏற்ற பலருள் இஸ்லாத்தின் முக்கிய எதிரியாகத் திகழ்ந்தவர் யார்? அபூ சுபியான்
56)    யூதர்களின் அட்டூழியங்களை ஒடுக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட யுத்தங்கள் இரண்டைத் தருக.
கைபர் யுத்தம்,  தபூக் யுத்தம்
57)    இறுதி ஹஜ் உபதேசம் எப்போது நடைபெற்றது? ஹிஜ்றி 10
58)    இறுதி ஹஜ் பேருரை எங்கு நடைபெற்றது? அறபா மைதானம் ஜபலுர் ரஹ்மா மலையடிவாரம்
59)    இறுதி ஹஜ் எவ்வாறு அழைக்கப்படுகின்றது? ஹஜ்ஜதுல் விதாஃ
60)    இறுதி ஹஜ்ஜில் நபி (ஸல்) அவர்கள் வலியூறுத்திய முக்கிய விடயங்கள் யாவை?
அனைவரது உரிமையூம் பாதுகாக்கப்படவேண்டும். வட்டி கூடாது. தொழுகையை நிலைநாட்டுங்கள்இ குர்ஆன்இ ஸஷுன்னாவைப் பின்பற்றுங்கள்.
61)    நபி (ஸல்) அவர்கள் எப்போது வபாத்தானார்கள்?
தனது 63ம் வயதில் மதீனாவில். 

Tuesday, July 26, 2011

உங்கள் சிந்தனைக்கு

சிந்தனைகள்
1. புகழும் போது பகிரங்கமாகப் புகழ். தூற்றும் பொழுது தனியே தூற்று. ஒருவர் நல்லதொரு செயல் செய்துவிட்டால் பலர் பேர் முன்னிலையில் மனந்திறந்து பாராட்டவேண்டும். அதேநேரம் ஒருவர் தவறு செய்துவிட்டால் அதனை எல்லோர் முன்னிலையிலும் பகிரங்கப்படுத்தி அவரை அவமானப்படுத்தாமல் தனியே சுட்டிக்காட்ட வேண்டும். ஒருவரது குறையை பல பேர் முன்னிலையில் எடுத்துச்சொல்வதால் அவர் திருந்தமாட்டார். அவர் அதனால் பாதிக்கப்பட்டு மென்மேலும் தவறுசெய்ய முற்படுவார். அதேபோன்று நாம் மற்றவர்களது சாதனைகளை, வெற்றிகளை மனந்திறந்து பாராட்ட வேண்டும். பொறாமைப்படக் கூடாது. இது பெரிய,  பண்பட்ட  உள்ளங்களால் மட்டுமே முடியும்.

2. நேற்று என்பது காலாவதியான காசோலையாகும்.
நாளை என்பது திகதியிடப்பட்ட காசோலையாகும்.
இன்று என்பது கையிலுள்ள காசாகும். அதனை நீ பயன்படுத்திக்கொள்.
நேற்றை நினைத்துக் கவலைப்படுவதும் நாளை நடக்கப்போவதை நினைத்து அவதிப்படுவதும் புத்திசாலித்தனமாகாது. இன்றைய நாட்களை ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுத்தி வெற்றிபெற முயற்சிக்க வேண்டும். நேற்று என்பது மரணித்துவிட்ட ஒன்று . நாளை என்பது இன்னமும் பிறக்காத ஒன்று. இன்று மட்டுமே எங்கள் கைவசம் உள்ளது. அதனைத் திட்டமிட்டுக் கழிப்பதால்தான் விமோசனம் கிடைக்கும்.

3. நாம் எவ்வளவு காலம் வாழ்வது என்பது முக்கியமல்ல. எப்படி வாழ்கின்றௌம் என்பது தான் முக்கியம்.
ஒருவர் எத்தனை வருடங்கள் வாழ்ந்தார் என்பது சாதனையல்ல. தன் வாழ்நாளில் எதனையெல்லாம் சாதித்தார் என்பதுதான் சாதனையாகும். நாம் பிறருக்காக வாழும்போது ஒரு கொள்கைக்காக வாழும் போதுதான் எமது வாழ்வு அர்த்தமுள்ளதாகின்றது. எமக்காகவும் எமது குடும்பத்துக்காகவும் மட்டும் வாழ்ந்தவர்களை வரலாறு வாழ்ந்தவர்கள் என்று வரவு வைப்பதில்லை. எனவே நாம் வாழ்ந்ததற்கு அடையாளமாக எதையேனும் உலகில் சாதித்துவிட்டுச் செல்ல வேண்டும்.

4. மதம் என்பது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல. அது நடத்தையாகும்.
மதம் என்பது வெறும் நம்பிக்கைகள் மட்டுமல்ல. அது எமது வாழ்வில் ஒவ்வொரு அம்சத்திலும் பிரதிபளிக்க வேண்டும். செயற்பாடுகளில் மதப் போதனைகள் வெளிப்படவேண்டும். இல்லாதபோது மதம் என்பது கோசமாக மட்டுமே அமையும். நல்ல நடத்தைகளோ முன்மாதிரியான பழக்கவழக்கங்களோ இல்லாதவரிடத்தில் மதம் என்பது போலியாகவே இருக்கும்.

5. தேவைகள் குறைந்தவன்தான் செல்வந்தனாவான்.
அதிக பணத்தை சம்பாதிப்பவன் செல்வந்தன் அல்லன். பணக்காரன் கூட தேவைகள் அதிகரிக்கும்போது ஏழையாகின்றான். அதேவேளை ஓர் ஏழை கூட தேவைகளைக் குறைத்துக்கொள்ளும் போது செல்வந்தன் ஆகின்றான். ஆகவே ஆசைகளைக் குறைத்துக்கொள்ளும் போது மனிதன் செல்வந்தனாகின்றான் நிம்மதி பெறுகின்றான். இதனால் தான் உளத்திருப்திதான் ஒருவனிடமுள்ள உண்மையான செல்வம் என பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

6. அறிவில் மிகச் சிறந்தது உன்னை நீ அறிந்துகொள்வதே.
ஒவ்வொருவரும் தான் யார்  தனக்குள்ள ஆற்றல்கள் என்ன, திறமைகள் என்ன, பலவீனங்கள் என்ன என்பதைப் புரிந்துகொள்வதே மிக மிக முக்கியமானதாகும். மற்றவர்களைப் பற்றி அறிவதை விட தன்னைப் பற்றிச் சரியாக அறிவதுதான் மிகக் கடினமானது என்பார்கள். தன்னை அறிந்தவனால் தான் பல விடயங்களை இலகுவில் சாதிக்க முடியும்.  வெற்றிபெறவும் முடியும்.

7. தற்புகழ்ச்சி என்பது ஒருவனுக்கான பரிந்துரை ஆகாது.
ஒருவர் தன்னைப் பற்றிப் புகழ்ந்துரைப்பதை யாரும் நம்பமாட்டார்கள். இது நாகரிகமான செயல் அல்ல. புகழ் என்பது மற்றவர்கள் மூலம் பரப்பப்படவேண்டும். பூக்களின் வாசனையைக் காற்றுதான் பரப்புகின்றது. பூக்கள் ஒருபோதும் பரப்புவதில்லை என்கிறார் கவிஞர் வைரமுத்து.  தன்னைப் பற்றி அதிகம் புகழ்பவர்கள் மற்றவர்களால் வெறுக்கப்படுகிறார்கள். விற்காத பொருளுக்குத்தான் விளம்பரம் செய்வார்கள். இதுபோன்றுதான் சமூகத்தில் எடுபடாதவர்கள் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டு தமக்கெனதொரு இடத்தைத் தேட முயற்சிப்பார்கள். தற்புகழ்ச்சி பாடுபவர்களை இறைவன் கூட வெறுக்கின்றான்.

8. வெற்றி என்பது பல தோல்விகளின் பின் வருவதாகும்.
முதல் முயற்சி எப்போதும் வெற்றியைத் தருவதில்லை. ஒரு வெற்றிக்குப் பின்னால் பல தோல்விகள் இருந்துள்ளதை நாம் வரலாற்றிலே கற்றுக்கொள்கின்றௌம். எனவே நாம் தோல்விகளைக் கண்டு துவண்டுவிடக் கூடாது. ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கான பாடமும் படிப்பினையுமாகும். தோல்விகளால் கிடைக்கும் அனுபவங்களைக் கொண்டு வெற்றியை நோக்கித் தளர்வடையாமல் பயணிப்பவனே புத்திசாளியாவான்.
9. நான் வாழ்வதற்கு என் தந்தைக்குக் கடமைப்பட்டுள்ளேன். நான் நன்றாக வாழ்வதற்கு எனது ஆசிரியருக்குக் கடமைப்பட்டுள்ளேன்.
இது உலகின் பல பகுதிகளை ஆட்சிசெய்த மாமன்னன் மகா அலக்ஸாண்டருடைய வாக்கு. ஒவ்வொரு மனிதனுடைய எதிர்கால வெற்றியிலும் ஆசிரியர்கள் பங்கெடுக்கின்றார்கள். ஆசிரியர்களின் வழிகாட்டலும்,  அர்ப்பணிப்பும் தாம் நல்ல தலைவர்களையும் சாதனையாளர்களையும் உருவாக்குகின்றன. இதனை யாரும் மறந்துவிடக் கூடாது. தமக்கு ஏணியாக நின்ற ஆசிரியர்களை எப்போதும் கண்ணியப்படுத்த வேண்டும். இதனால் தான் கலீபா அலி (ரழி) அவர்கள், எனக்கு ஒரே ஒரு எழுத்தைச் சொல்லித் தந்தாலும் அவருக்கு நாம் அடிமைபோல் இருப்பேன் என்றார்கள்.

10. உண்மை பொய்யை விட விசித்தரமானது.
பொய் சொல்வதை விட உண்மையைக் கூறும்போதுதான் மக்கள் புதுமையாகவும் ஆச்சரியமாகவும் பார்ப்பார்கள். அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள முன்வர மாட்டார்கள். அதனைச் சிலபோது கடுமையாக எதிர்ப்பார்கள். பொய் அதிக முழக்கத்துடன் ஒலிப்பதால் அது உண்மையாகாது. உண்மை மெதுவாக ஒலிப்பதால் அது பொய்யாகவும் மாட்டாது. நாம் உணர்ச்சிவசப்படாமல் அறிவைப் பயன்படுத்தி நிதானமாக நின்று எது உண்மை எது பொய் என்பதைத் தெரிந்து செயற்படல் வேண்டும்.


Monday, July 25, 2011

Useful Websites

Children’s websites



1.     www. appukids. com
2.     www. babygear. com
3.     www. cyberkids. com
4.     www. childuniya. com
5.     www. childsearch. org
6.     www. childquest. org
7.     www. Childsupport. org
8.     www. discoverykids. com
9.     www. gameproworld. com
10.                        www. ibaby . com
11.                        www. kidscom. com
12.                        www. kidpub. com
13.                        www. kidslovemystory. com
14.                        www. extremekids. com
15.                        www. tweentimes. com
16.                        www. wordcentral. com
17.                        www. wiped4kids. com
18.                        www. kidsmahal. com
19.                        www. youngeronline. com
20.                        www. kidsites. Com





Tamil websites


1.     www.tamilcyber.com
2.     www.tamilpages.com
3.     www.kamban.com
4.     www.ambalam.com
5.     www.tamilsongs.net
6.     www.kalanchiyam.com
7.     www.vikatan.com
8.     www.tamilossai.com
9.     www.thamila.com
10.                        www.tamilboard.com
11.                        www.tamilforum.com
12.                        www.tamil.com.
13.                        www.tamilcyber.com
14.                        www.tamil.net
15.                        www.tamileuropean.com
16.                        www.tamilworld.com
17.                        www.kanithamizh.org
18.                        www.tamilnews.org
19.                        www.tamilsoftware.org
20.                        www.tamizh.com
21.                        www.tamilmusic.com
22.                        www.murasu.com
23.                        www.tamilkalam.com
24.                        www.mukil.com
25.                        www.tamilcinema.com
26.                        www.vanavil.com





Websites on Books

1.     www.amazon.com
2.     www.authorsshop.com
3.     www.book-online.com
4.     www.booxop.com
5.     www.bibilomania.com
6.     www.esmarts.com
7.     www.fabmart.com
8.     www.powells.com
9.     www.shandgroup.com

Websites on Comics

2.     www.dragonfire.com
3.     www.disney.com
4.     www.comics.com
5.     www.fantasticon.com
6.     www.joecartoon.com
7.     www.shockwave.com
8.     www.superosity.com
9.     www.toonscape.com

Islamic Websites


1.     www.islamonline.com
2.     www.islam.com
3.     www.haroonyahya.com
4.     www.aljazeera.com
5.     www.tamilislam.com
6.     www.sydneymuslimyouth.com
7.     www.wamylanka.org
8.     www.impactintl.com
9.     www.almujtama.com
10.                        www.arabnews.com




Websites Of S.L & Indian Newspapers.

1.     www.ccom.lk/ virakesari
2.     www.thinakkural.com
3.     www.uthayan.com
4.     www.meelparvai.com
5.     www.suntimes.com
6.     www.island.com
7.     www.lakehouse.com
8.     www.geocities.com (India – Thinamalar)
9.     www.dinakaran.com (India)
10.                        www.thinaboomi.com (India)


Websites on Music

1.     www.yousufislam.com
2.     www.samiyousuf.com
3.     www.southindiamusic.com
4.     www.amused.com
5.     www.bollywoodmusic.com
6.     www.carnaticmusic.com
7.     www.musicworld4u.com
8.     www.sangeetham.com
9.     www.t.series.com
10.                        www.mtv.com
11.                        www.mp3.com

நிலாக் கவிதை

நிலவே நானும் உனைப் பாடுகிறேன்
நிலவோடு நடந்துகொண்டு
நிலவொளியில் நனைந்துகொண்டு
நிலவையே ரசித்துக்கொண்டு
நிலவுக்குத் தூதுவிட்டேன்
நிலவே
நீ எப்படி பெண்ணானாய்?
கவிதைக்குக் கருவானாய்?
பெண்மைக்கு ஒப்பானாய்?
அழகுக்கு நிகரானாய்?
பெண்ணாக உருவகிப்போர்
உனைப் பற்றித் தெரியவில்லை
அழகுக்கு அர்த்தம்சொல்வோர்
உனை ஒன்றும் அறியவில்லை.
உனது அழகெல்லாம்
தூரத்தில் இருப்பவர்க்கே
உனதருகில் வந்துவிட்டால்
காவேரியும் கதிகலங்கும்
உன் முகத்தின் குழிகளையோ
ஈரமில்லா நெஞ்சத்தையோ
சுவாசமில்லா இதயத்தையோ
பெண்மையென்று சொல்லலாமோ?
உந்தன் வெளிச்சம் ஒன்றும்
உன்னால் வந்ததல்ல
கதிரவனின் தயவால்
கடன்வாங்கிய எழிலன்றௌ?
உனைப் பற்றிக் கவிசொல்வோர்
உனை ஒன்றும் மெச்சவில்லை
உன் பெயரை சிலேடையாக்கி
உருவகிப்பர் வேறெதையோ.
உனைப்பார்த்து எனக்கொன்றும்
கிஞ்சிற்றும் பொறாமையில்லை
உனைப்பாட வந்தவர் பலர்
உருப்படியாய் சொல்லவில்லை.
நீ எமக்கு விளக்கானாய்
காலத்தின் கருவியானாய்
நம்பூமிக்கு துணையானாய்
மலர்களுக்கு நட்பானாய்.
கடலுக்கு எழுச்சியானாய்
அண்ணலுக்கு அற்புதமானாய்
இரவில் திரியும் உயிர்களுக்கு
இலவசமின் குமிழானாய்
நிலவே
உனைக் காணும் போதெல்லாம்
உனைப்படைத்த வல்லமையை
துதிக்காமல் இருப்பதற்கு
இறக்கவில்லை இதயமின்னும்.

ஹிசாம் ராஸிக்

கஹட்டோவிட்ட வரலாறு

கஹட்டோவிட்ட வரலாறு
மேல் மாகாணத்தில் கம்பஹா மாவட்டத்தில் அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள கிராமமே கஹட்டோவிட்ட. இது நிட்டம்புவ - வல்கம்முல்ல ஊடான கிரிந்திவல பாதையில் நிட்டம்புவ நகரில் இருந்து 8 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. கஹட்டோவிட்ட ஊடாக அத்தனகலு ஓயா ஓடுவது இதன் அழகுக்கும் பசுமைக்கும் இன்னும் வலிமை சேர்க்கின்றது. இலங்கையில் உள்ள முஸ்லிம்களை மாத்திரம் உள்ளடக்கிய வெகுசில ஊர்களில் இதுவும் ஒன்று. நாடளாவிய ரீதியில் கல்வி  உயர்அரச பதவிகள்  மார்க்க அனுஷ்டானங்கள், அரசியல் போன்ற பல்வேறு காரணிகளால் மிகவும் பிரபல்யமடைந்த ஊராக கஹட்டோவிட்ட காணப்படுகின்றது.
 கஹட்டோவிட்ட என்ற பெயர் எவ்வாறு வந்தது என்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் அவற்றில் மிகவும் பொருத்தமானதாக இதனைக் குறிப்பிடலாம். இந்த ஊரின் ஊடாகச் செல்லும் ஆற்றங்கரையில் அக்காலம் தேயிலைச் செடிகள் காணப்பட்டன. ஆற்றௌரம் என்பதற்கு சிங்களத்தில் ஒயிட்டி என்றும் தேயிலைக்கு கஹட்ட என்றும் வழங்குவதன் காரணமாகவே கஹட்டோவிட்ட என்ற பெயர் பெற்றதாகக் குறிப்பிடப்படுகின்றது. அண்மைக்காலம் வரை இவ்வூரின் சில பகுதிகளில் தேயிலைச் செடிகள் இருந்ததற்கான தக்க சான்றுகள் உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கஹட்டோவிட்ட சுமார் 400 வருட வரலாற்றைத் தன்னகத்தே கொண்ட ஒரு புராதன கிராமம். கஹட்டோவிட்ட கிராமத்துக்கு முஸ்லிம்கள் எவ்வாறு எங்கிருந்து வந்தார்கள் என்பதற்கு இரு வகையான காரணங்கள் கூறப்படுகின்றன.
கிறிஸ்துக்கு முன்னரே அறேபியர் வர்த்தக நோக்கில் இலங்கைக்கு வந்துபோனதாக நிறைய சான்றுகள் உள்ளன. அத்துடன் கி.பி. 8ம் நூற்றாண்டுகளில் அறேபிய வம்சாவழியிலான முஸ்லிம் குடியேற்றங்கள் பேருவலை, காலி, அட்டுலுகம போன்றகரையோரப் பிரதேசங்களில் காணப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. இலங்கைக்கு ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்னர் கரையோரங்களில் குடியேறிய முஸ்லிம்கள்  இலங்கையின் வர்த்தகத்தில் தனியான இடத்தைப் பெற்றிருந்தனர். ஆயினும் போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்தபோது முஸ்லிம்களின் வர்த்தகத்தைத் திட்டமிட்டு அழித்து அவர்களை விரட்டிவிட்டு வர்த்தக மேலாதிக்கத்தை தாம் பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டனர். சீதாவக்கை இராச்சியத்தை ஆண்ட மாயாதுன்ன அரசன்  முஸ்லிம்களுக்கு உதவிபுரியமுன்வந்தாலும் கோட்டை இராச்சியத்தை ஆண்ட 7ம் புவனேகபாகு போர்த்துக்கேயரின் வேண்டுகோளின் படி முஸ்லிம்களைத் கரையோரங்களில் இருந்து துரத்தினான். ஈற்றில் போர்த்துக்கேயரின் இந்நடவடிக்கையால் நீர்நிலைகளை அண்டிய நாட்டின் உட்பகுதிக்குச் சென்று முஸ்லிம்கள் குடியமர்ந்தனர். இதன் காரணமாகவே இன்றும் முஸ்லிம்கள் நாடளாவிய ரீதியில் சிதறி வாழ்கின்றார்கள்.
போர்த்துக்கேயர் ஆட்சிக்காலத்தில் அவர்களின் பிரதான ஒரு இடமாக மல்வானை காணப்பட்டது. இலங்கையின் கரையோரப்பிரதேசங்களை போர்த்துக்கேயரிடம் கையளிப்பதற்கான அல்லது எமது நாடு இன்னொரு நாட்டின் ஆளுகைக்கு உட்படுவதற்கான முதலாவது ஒப்பந்தம் மல்வானையிலேயே நடந்தது. இதனால் இவ்வொப்பந்தம் மல்வானை ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகின்றது.
போர்த்துக்கேயரை இலங்கையிலிருந்து துரத்துவதற்கு சீதாவக்கை மன்னன் மாயாதுன்ன தன் மகன் இராஜசிங்கனின் தலைமையில் முல்லேரியா போரை நடத்தினான். 1562 இப்போரில் மல்வானை பகுதியில் இருந்த முஸ்லிம்கள் இராஜசிங்கனுக்கு உதவியதால் அங்கிருந்த முஸ்லிம்களைப் போர்த்துக்கேயர்கள் இம்சைப்படுத்தினர். இதனால் அப்பிரதேசத்தை விட்டு பல முஸ்லிம்கள் களனி ஆற்று வழியே  ஹங்வெல்ல,  பூகொட பிரதேசங்களுக்கு வந்து பின்னர் கஹட்டோவிட்ட, திஹாரிய போன்ற இடங்களில் வந்து குடியேரியனர். இது கம்பஹா மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு என்ற ஆய்வு நூலில் இடம்பெற்றுள்ளது.
கஹட்டோவிட்டாவுக்கு முஸ்லிம்களின் வருகை பற்றிய அடுத்த தகவல் இவ்வாறு அமைந்துள்ளது.
அத்தனகல்லை பண்டாரஓவிட்ட என்ற இடத்துக்கு வந்திருந்த மலையாளத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்த ஷேக் அப்துல் காதர் மற்றும் அவரது தோழர்களை சந்திக்க அட்டுலுகம இலிருந்து முஹம்மத் காஸிம் என்பவர் அடிக்கடி வந்துள்ளார். இச்சந்தர்ப்;பத்தில் முஹம்மத் காஸிம் என்பவரை அவ்வழியே வந்த சிங்கள மன்னன் ஒருவன் இவரது திறமைகளைக் கண்டு இப்பிரதேசத்தை அன்பளிப்பாக வழங்கியதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இந்நிகழ்வின் பின்னர் கஹட்டோவிட்ட பிரதேசம் முஸ்லிம்களின் குடியிருப்பாக மாறி பல்வேறு இடங்களிலிருந்தும் இங்கு வந்து குடியமர்ந்தனர்.
கஹட்டோவிட்டாவின் மார்க்க எழுச்சி வரலாறு பற்றிக் குறிப்பிடும் போது இருவரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.
கஹட்டோவிட்டாவுக்கு அறபு நாடுகளிலிருந்து மார்க்க போதனைக்காக இருவர் வந்துள்ளனர். 1700 களின் பிற்பகுதியில் ஷெய்க் பாதிப் மவ்லானா (யமனி) ஷெய்க் முபாரக் மவ்லானா அவர்களும் வருகை தந்து ஊரின் மார்க்க எழுச்சியில் பெரிதும் பங்காற்றியுள்ளனர். ஷெய்க் முபாரக் மவ்லானா இங்கு நீண்டகாலம் தங்கிருக்காவிட்டாலும் ஷெயக் பாதிப் மவ்லானா அவர்கள் தாம் மரணிக்கும் வரை இங்கு தங்கியிருந்து மதப்பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் இருவரினதும் போதனைகளை நடைமுறைப்படுத்த இவ்விரு தக்கியாக்கள் கட்டப்பட்டன.
இதன் பின்னர் 1792 இல் இப்பிரதேசத்தின் முதல் பள்ளிவாயல் கஹட்டோவிட்டாவுக்கும் உடுகொடைக்கும் இடையிலிருந்த கொடல்ல எனும் இடத்தில் கட்டப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது. இது மோதரான அப்பா அவர்களின் காணியில் சின்ன லெப்பை சுலைமான் லெப்பபை அவர்களின் தலைமையில் கட்டப்பட்டது.
தற்போதுள்ள பெரிய பள்ளிவாசல் கறுத்த ஆலிம் அப்பா அவர்களின் வழிகாட்டலில் 1795 இல் அத்தனகல்லையிலிருந்து குடியேறிய அஹமது லெப்பையால் வழங்கப்பட்ட காணியில் கட்டப்பட்டது. இவரே இப்பள்ளியின் முதல் கதீபும் ஆவார். 1970 இல் கஹட்டோவிட்ட ஜும்ஆ மஸ்ஜித் என்றழைக்கப்பட்ட இப்பள்ளிவாசல் முஹியுத்தீன் ஜும்ஆ மஸ்ஜித் எனப் பெயர் பெற்றது.
இதன் பின்னர் இரண்டாவது பள்ளிவாசலாக 1974 இல் மஸஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்மானிக்கப்பட்டது. தற்போது ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ பள்ளி அடங்கலாக மொத்தம் மூன்று ஜும்ஆ பள்ளிவாசல்கள் கஹட்டோவிட்ட கிராமத்தில் உள்ளன.
ஆரம்பத்தில் கல்வி நடவடிக்கைகள் பள்ளிவாசல்களை தளமாகக் கொண்டு இயங்கிவந்தன. பின்னர் 1920 இல் அரசினர் பாடசாலையாக இது மாற்றம் பெற்றது. தற்போது அல்பத்ரியா ம.வி. என்ற பெயரில் இது இயங்கிவருகின்றது.
அடுத்து பெண்களுக்கான தனியான பாடசாலை 1946 இல் ஆரம்பிக்கப்பட்டது. இன்று ஒரு தனியார் சர்வதேசப் பாடசாலை அடங்கலாக மொத்தம் 3 பாடசாலைகள் செயற்பட்டுவருகின்றன.
கஹட்டோவிட்ட சுற்றியுள்ள முஸ்லிம் கிராமங்களோடு ஒப்பிடும் போது கல்விமட்டத்தில் மிகச் சிறந்த நிலையில் அன்றும் இன்றும் இருவருகின்றது. உதவித் தேர்தல் ஆணையாளார், உதவிப் பரீட்சை ஆணையாளர் போன்ற உயர் அரச பதவிகளிலும் மற்றும் மருத்துவம், பொறியியல், சட்டம் ,  ஊடகத்துறை  போன்ற பல்வேறு துறைகளிலும் அதிகமானோர் பங்காற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மர்ஹூம் மஸ்ஊத் ஆலிம் முதல் இன்று வரை மார்க்கத் துறையிலும் பலர் பல்வேறு இயக்கங்களில் இருந்து பல ஆலிம்கள் தொண்டாற்றி வருகின்றனர்.
இவை தவிற 1959 ஆம் ஆண்டிலே கஹட்டோவிட்டாவுக்கான தனியான உபதபாற்கந்தோர் திறந்துவைக்கப்பட்டது. இங்கு 1980 இல் மின்சார இணைப்பும் வழங்கப்பட்டது. இவ்வாறு பல்வேறு துறைகளிலும் முன்னேற்றம் கண்ட ஒரு தனித்துவ அடையாளத்தைப் பிரதிபளிக்கும், கட்டுக்கோப்பான சமுக அமைப்பைக் கொண்ட ஒரு ஊராக கஹட்டோவிட்ட திகழ்ந்து வருகின்றது.

தொகுப்பு ஹிஷாம் றாஸிக்