பரிணாமத்தின் அபத்தம்!
எம்.ஆர். ஹிஷாம் முஹம்மத்
பரிணாமம் என்ற பெயரில்…
உலகில் வாழும் உயிரினங்கள் அனைத்தையும் அவற்றிற்குரிய சிறப்பான பண்புகளைக் கொடுத்து மாபெரும் சக்தி கொண்டவனான அல்லாஹ் படைத்தான் என நாம் விசுவாசிக்கின்றோம். இது எமது விசுவாசம் மட்டுமல்ல. எமது பகுத்தறிவுக்கு உடன்பாடானதும் எமது இயல்புக்கு ஒத்ததுமான விடயமுமாகும். எம்மை அழகாகப் படைத்து எம்மைச் சுற்றி உள்ள அனைத்தையும் எமக்கென வசப்படுத்தித் தந்த அந்த ஏக இறைவனை ஏற்றுள்ளோம். அவனுக்கு நன்றி செலுத்தி வழிப்பட்டு நடப்பது எமது தலையாய பொறுப்பு எனவும் நாம் அறிகின்றௌம்.
இது இவ்வாறிருக்க படைத்த இறைவனை விட்டும் மக்களை அந்நியப்படுத்தி அவர்களை வெறும் சுயநலமிகளாக மாற்றுவதற்காக திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு பயங்கரமான கொள்கையே கூர்ப்புக் கொள்கை ஆகும். ஆரம்பத்தில் எளிமையான அங்கிகள் தோன்றி பின்னர் அவை விகாரமடைந்து தற்போதுள்ள நிலையைப் பெற்றன என்றும் இச்செயற்பாடுகள் அனைத்தும் தாமாகவே எந்தவொரு சக்தியின் உதவியுமின்றி நடந்தேறின என்றும் இந்த வாதம் குறிப்பிடுகின்றது. இந்தக் கொள்கை நாம் விசுவாசிக்கும் அல்-குர்ஆன், அஸ்-ஸுன்னா என்பவற்றுக் முற்றிலும் முரணானது. அதுமட்டுமன்றி எமது பகுத்தறிவுக்கும் மாற்றமானது. ஆயினும் படைத்தல் கொள்கையை விட இந்தக் கூர்ப்புக் கொள்கைக்கே அதிக சான்றுகள் உள்ளன என்று கூறி இன்றைய வி(அ)ஞ்ஞானம் மக்களிடத்தல் திணிக்க முற்படுகின்றது. இக் கொள்கைத் திணிப்பு எமது நாட்டில் உள்ள பாடத்திட்டத்தில் கூட பெரும் பங்கு வகிக்கிறது. (உதாரணம்: கூர்ப்பு- தரம் 11 விஞ்ஞானமும் தொழிநுட்பமும்) பாடப்புத்தகங்களில் இக் கூர்ப்புக் கொள்கையின் ஒரு பக்க வாதங்கள் மட்டுமே முன்வைக்கப்படுகின்றமைதான் இங்கு மிகவும் வருந்துதற்குரியது. எனவே இவற்றைப் படிக்கும் போது இக்கொள்கை பற்றிய நடுநிலையான கண்ணோட்டத்தை அறியாததால் அதன் போலித் தன்மையைப் புரியாததால் தம்மை அறியாமலேயே சிலபோது மாணவர்கள் இக்கொள்கையை உள்வாங்கிக்கொள்ள நேரிடும். அந்நியப் படைகளால் ஒரு சமூகம் ஆக்கிரமிக்கப்படுவதைவிட அபத்தமான சிந்தனைகளால் ஆக்கிரமிக்கப்படுவது மிகவும் கொடியது. ஏனெனில் அதிலிருந்து விடுபடுவது மிகவும் இலகுவான காரியம் அன்று. எனவே இப்படியான நச்சுக் கருத்துக்கள் எமது இளைய தலைமுறையில் ஆதிக்கம் செலுத்துவதை நாம் அனுமதிக்காமல் அவர்களது நம்பிக்கையை (அகீதா) பாதுகாப்பது ஒரு சமூகப் பொறுப்பாகும். அவர்களுக்குக் கூர்ப்புக் கொள்கையைச் சொல்லிக்கொடுப்பதில் தவறில்லை. ஆனால் அதனை நடுநிலையாக நின்று அதற்கான விமர்சனங்களையும் அல்-குர்ஆன், அஸ்-ஸுன்னா மற்றும் அறிவியல் ரீதியாக முன்வைத்து அதன் போலித்தன்மையை விளக்கவேண்டும். இதனை எமது பாடத் திட்டத்தினூடாக நுழைப்பது அசாத்தியமாயினும் அதற்கு வெளியே நின்று பல வழிகள் ஊடாக இதனைச் செய்ய முடியும். அப்படியான ஒரு சிறு முயற்சியே இக் கட்டுரை. இங்கு பரிணாம வாதத்துக்கான ஒரு சில மறுப்புக்கள் மாத்திரம் மிக எளிமையான முறையில் விளக்கப்படுகின்றது.
“கூர்ப்புக் கொள்கை”என்றால் என்ன?
இறைவன் இருக்கின்றான் என்பதை விசுவாசிக்காதவர்களால் முன்வைக்கப்பட்ட ஒரு தவறான கருத்தே கூர்ப்புக் கொள்கையாகும். இக்கொள்கை சுமார் 150 வருடங்களுக்கு முன்னர் சார்ள்ஸ் டார்வின் என்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இயற்கை விஞ்ஞானியால்; முன்வைக்கப்பட்டது. இவரது பகுத்தறிவுக்கெட்டாத கொள்கையின் படி உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் தற்செயலாகத் திடீரெனத் தோன்றியவையாம். உதாரணமாக மீன்கள் திடீரென ஒரு நாள் ஊர்வன என்ற இனப்பரிமானத்தைப் பெற்றது. இன்னொரு நாள் அந்த ஊர்வன பறக்கத் தொடங்கிப் பறவைகளாயின. அதே போன்று குரங்குகள் மனிதர்களாக மாறின. இந்த வாதத்தில் எவ்வித உண்மையும் கிடையாது. ஒரே ஒரு உண்மை என்னவெனில் இந்த உலகத்தையும் அதில் உள்ள அனைத்து உயிரினங்களையும் படைத்தவன் அல்லாஹ் ஒருவனே. இவ்விடயத்தில் டார்வினும் அவரது சகாக்களும் ஒரு அப்பட்டமான பொய்யையே உலகறியச் செய்திருக்கிறார்கள். இதனை நவீன விஞ்ஞானமும் தலைமேல் தூக்கி வைத்து ஆராதித்து வருகின்றமைமாதான் வினோதமானது.
உயிருள்ள உயிரற்ற அனைத்து பொருட்களினதும் மிகச் சிறிய பகுதி அணு எனப்படுகின்றது. அதாவது நாமும் எம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் பல மில்லியன் அணுக்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றௌம். பரிணாமவாதிகள். வெவ்வேறாக இருந்த அணுக்கள் தாமாகவே தீர்மானித்து ஒன்று சேர்ந்து உயிரினங்கள் தோற்றம் பெற்றன என்கின்றனர். ஒரு நாள் திடீரென்று ஏற்பட்ட பலத்த காற்று அல்லது புயல் இந்த அணுக்கள் ஒன்று சேரக் காரணமாக இருந்தது என இந்த மூடத்தனமான வாதம் சொல்கிறது.
டார்வினின் கருத்துப்படி இந்த அணுக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கலங்கள் உருவாயின. எல்லா உயிரினங்களும் கலங்களால் ஆனவை என்பது நாம் அறிந்ததே. இந்தக் கலங்கள் ஒன்றிணைந்துதான் எமது உடம்பில் உள்ள கண்கள்,செவிகள்,இதயம், இரத்தம் என அனைத்தும் உருவாக்கப்பட்டுள்ளன.
கலங்கள் மிகவும் சிக்கலான தொகுதிகள். ஒவ்வொரு கலமும் பல புன்னங்கங்களைக் கொண்டது. ஒரு கலத்தை நாம் ஒரு பாரிய தொழிற்சாலைக்கு ஒப்பிடலாம். அந்த வகையில் ஒரு கலத்தில் உற்பத்தியாளர்கள், பொருட்களை எடுத்துச் செல்வோர், நுளைவாயில், வெளியேறும் வாயில், உற்பத்தி நிலையம், தகவல் கொண்டுசெல்வோர் சக்திக் கட்டுப்பாட்டாளர் எனப் பலர் காணப்படுவர். இப்படியான ஒரு சிக்கலானதொரு தொழிற்சாலை எப்படித் தானாக உருவாக முடியும்? கற்கள், மண், சீமெந்து, நீர் என்பவையெல்லாம் சேர்ந்து திடீரென ஏற்பட்ட ஒரு புயலினால் ஒன்றிணைந்து ஒரு அங்க சம்பூரணமான தொழிற்சாலையாக மாறுவது எப்படி சாத்தியமாகும்? இது ஒருபோதும் முடியாது. இல்லை. இது சாத்தியம் என்று சொல்பவரை நாம் என்ன பெயர் கொண்டழைப்போம்? இதுபோன்றுதான் “கலங்கள் தற்செயலாக உருவாகின” என்று கூறுவோரின் நிலையும். இவர்கள் கூறும் வாதத்திற்;கு ஆதாரமாக ஏன் ஒரு சிறு பரிசோதனையைக் கூட இன்றைய பரிணாமவாதிகளால் நிகழ்த்திக் காட்ட முடியாது? உயிரில்லாத அணுக்கள் ஒன்று சேர்ந்தவுடன் உயிருள்ள ஒரு விலங்கு எப்படி உருவானது? இந்த வினாக்களுக்கு முன்னால் இந்த கூர்ப்பு வாதிகள் வாயடைத்துப் போகிறார்கள்.
கூர்ப்பு எப்படி நடைபெறுகிறதாம்?
அல்லாஹ் எல்லா அங்கிகளையும் தனித்தனியே படைத்தான். ஒன்றிலிருந்து இன்னொன்றை அவன் கூர்ப்படையச் செய்யவில்லை. ஒவ்வொரு உயிரினமும் அவற்றிற்குரிய தனியான குணாதியசங்களோடு இருக்க வேண்டும் என்பதற்காகவே அவன் அப்படிச் செய்தான்.
உயிரினங்கள் காலத்துக்குக் காலம் மாற்றமடைகின்றன. வளர்ச்சி பெறுகின்றன. இன்னுமோர் உயிரினமாகக் கூடக் கூர்ப்டைகின்றன என்கிறது பரிணாம வாதம். நாம் இன்று காணும் ஆமைகள், பல்லிகள் பாம்புகள் எல்லாம் பறவைகளாகக் கூர்ப்படைந்தன என இவர்கள் வாதிடுகின்றனர். இந்த மாறுதல்கள்களுக்கான காரணங்களை அவர்கள் இப்படி விளக்குகிறார்கள்.
1) இயற்கைத் தேர்வு விதி
அதனை எளிதாக நாம் விளக்குவதாக இருந்தால் சூழலுக்குப் பொருத்தமான (இயைபாக்கம் அடையக் கூடிய) உயிரினங்கள் பிழைத்துக்கொள்ளும். இவை தவிர்ந்த பலவீனமான உயிரினங்கள் அழிந்துபோகும் என்று நாம் சொல்லலாம். உதாரணமாக ஒரு மான் கூட்டத்தை எடுத்துக் கொள்வோம். அவை அடிக்கடி வேட்டையாடும் விலங்குகளால் தாக்கப்படுகின்றன. இச்செயல் தொடந்து நடக்கும் போது மான்கள் வேகமாக ஓடத் தொடங்கும். அப்போது மிக வேகமாக ஓடத்தக்க மான்கள் மாத்திரம் பிழைத்துக் கொள்ளும். படிப்படியாகப் பலவீனமான மெதுவாக ஓடும் மான்கள் வேட்டையாடப்பட்டு முற்றாக அழிந்துபோய்விடும். நல்ல ஆரோக்கியமான பலமான மான்கள் மட்டும் எஞ்சும். எனவே காலப்போக்கில் இயைபாக்கம் அடையக் கூடிய மான்கள் மட்டும் உயிர்வாழும். இது வரை நாம் இங்கே சொன்னது உண்மைதான். ஆனால் இதற்கும் கூர்ப்புக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. இதற்கு மாற்றமாக பரிணாமவாதம் இந்த மான் இனம் இன்னும் படிப்படியாக வளர்ச்சியுற்று இன்னோர் உயிரினமாக- உதாரணமாக ஒட்டகச் சிவிங்கியாக- மாறிவிடும் என்கிறது. இது எவ்வளவு தவறானது என்பதை நாம் இலகுவில் விளங்கிக்கொள்ளலாம். மான்கள் எவ்வளவு வேகமாக ஓடினாலும் அதன் கழுத்து எவ்வளவு நீண்டாலும் பரவாயில்லை. ஆனால் அது எப்படி சிங்கமாக சிவிங்கியாக இன்னொரு உயிரினமாக மாற்றமடையும்? இப்படியான சம்பவங்களை நாம் மாயா ஜாலக் கதைகளிலேதான் காணலாம். அங்கே ஒரு தவளை அழகிய இளவரசனாக மாறும். இந்தக் கதையெல்லாம் நடைமுறையில் நிகழுமா?
2) விகாரம்
விகாரம் என்பது உயிரினங்களின் உடம்பில் ஏற்படும் பயங்கரமான மாற்றத்தைக் குறிக்கும். இந்த விகாரத்துக்குக் காரணம் கதிர்வீச்சு இரசாயனப் பதார்த்தங்கள் என்பனவாம். உண்மையில் கதிர்வீச்சு இரசாயனப் பதார்த்தங்கள் என்பன அனேகமாக உயிரினங்களுக்குத் தீங்கையே விளைவிக்கின்றன. 60 வருடங்களுக்கு முன்னர் நடந்த இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஜப்பானில் ஹிரோஷிமா நகரில் அணுக்குண்டு வீசப்பட்டது. இந்த அணுக்குண்டு வெளியிட்ட கதிர் வீச்சுக்கள் சுற்றியுள்ள பகுதியில் பரவியதால் மக்களுக்கு மிகவும் கொடூரமான பாதிப்புக்கள் ஏற்பட்டன. இக் கதிர்வீச்சுக் காரணமாக பல்வேறு உயிரிழப்புக்கள் கடும் காயங்கள் உருக்குலைவுகள் எனப் பல பாதிப்புக்கள் நேர்ந்தன.
இப்படித்தான் ஒரு நாள் ஒரு மீன் விகாரத்துக்கு உட்படுகின்றது. அது ஹிரோஷிமா மக்கள் எதிர்கொண்ட ஒரு கதிர்வீச்சு போன்றது. இந்த விகாரத்தின் காரணமாக மீனின் உடம்பில் சில மாற்றங்கள் ஏற்பட்டு அது ஒரு முதளையாக மாறிவிடுகின்றது. அதாவது மீனின் உடம்பில் உள்ள கலங்களில் அமைந்திருக்கும் நிறமூர்த்தங்களில் ஏற்படும் மாற்றம் காரணமாக அடுத்துவரும் சந்ததிகளில் விதவிதமான விகாரங்கள் ஏற்பட்டு இறுதியில் முற்றிலும் வித்தியாசமான இன்னோர் உயிரியாக அது மாறிவிடுகின்றது. இது எவ்வளவு அபத்தமான வாதம்! நாம் ஏற்கனவே பார்த்தது போன்று விகாரம் என்பது எப்போதும் உயிரனங்களுக்கு தீங்கு விளைவி;ப்பதாகவே இருந்துவந்துள்ளது. இதன் மூலம் ஒன்றில் உயிரினங்கள் அழந்துபோகவோ முடமாகவோஇ பலவீனமாகவோ மாறிவிடும்.
இந்தப் பரிணாமவாதிகளின் வாதத்தைப் பின்வரும் உதாரணத்துக்கு ஒப்பிடலாம். நாம் ஒரு கோடாரியை எடுத்து கறுப்பு வெள்ளைத் தொலைக் காட்சிப் பெட்டி ஒன்றைத் தகர்க்கின்றௌம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அது அப்போது ஒரு வர்ணத் தொலைக்காட்சியாக மாறிவிடுமா? ஒரு போதும் இல்லை. நிச்சயமாக அது உடைந்து தகர்ந்து போய்விடும். இப்படித்தான் திடீரென நிகழும் விகாரம் ஒருபோதும் உயிரினத்துக்கு நன்மை பயக்காது.
நிலைமாறும் வடிவம் என்றால் என்ன?
பரினாமவாதிகள் கண்டுபிடித்த இன்னுமோர் பொய்தான் “நிலைமாறும் வடிவம்”. இது சிலபோது “இடைக் கடப்பு வடிவம்” என்றும் இவர்களால் அழைக்கப்படுவதுண்டு.
உயிரினங்கள் எல்லாம் இன்னொன்றில் இருந்து கூர்ப்பு அடைந்தன முதல் உயிரினம் தற்செயலாகத் தோற்றம் பெற்றது என்றும் அதிலிருந்து இன்னொரு உயிரினமும் அதிலிருந்து பிரிதொரு உயிரினமும் வளர்ச்சி கண்டது என்றெல்லாம் நம்புமாறு பரினாமவாதிகள் எங்களைக் கேட்கின்றனர். உதாரணமாக மீன் இனம் நட்சத்திர மீன் வகையிலிருந்து கூர்ப்படைந்தது என்கின்றனர் இவர்கள். இதன் கருத்து ஒருநாள் திடீரென ஏற்பட்ட விகாரத்தினால் நட்சத்திர மீனின் ஒரு கையை அது இழந்தது. பின்னர் அடுத்து வந்த மில்லியன் கணக்கான வருடங்களில் அதன் ஏனைய கால்களையும் படிப்படியாக இழந்து அவ்விடத்தில் செட்டைகள் தாமாகவே முளைக்கத் தொடங்கின. இதே கால கட்டத்தில் ஒரு மீனுக்கு எவை எவையெல்லாம் அவசியமோ அந்த மாற்றங்கள் எல்லாம் ஏற்பட்டன. இப்படி ஒரு நட்சத்திர மீன் சாதாரண மீன் வடிவைப் பெற்றது என்றால் இது ஒரு அதீத கற்பனையாகத் தெரியவில்லையா?
இந்த நிலைமாறும் பருவத்தில் வாழ்ந்த கற்பனை ஜீவிகள் கூர்ப்புப் படிமுறையில் “இடை அங்கிகள்” (ஐவெநசஅநனயைவந ளுpநஉநைள) எனப்படுகின்றன. உதாரணமாக நட்சத்திர மீனுக்கும் சாதாரண மீனுக்கும் இடைப்பட்ட பருவம். அல்லது குரங்குக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட பருவம். இந்தப் பரினாமவாதத்தின்படிஉயிரினங்கள் எல்லாம் பதாங்கத்துக்குரிய (எநளவபையைட) அல்லது முழுமைபெறாத அரைகுறையான ஒரு கட்டத்தைத் தாண்டியிருக்க வேண்டும். இப்படி விகாரமான முழுமைபெறாத அரைகுறை உயிரிகள் பற்றி இதுவரை எந்தத் தடயமும் கிடைக்கப்பெறவில்லை. இவர்கள் கூறும் “இடை அங்கிகள்” இன் உயிர்ச்சுவட்டு ஆதாரங்கள் உலகின் எப்பாகத்திலும் இதுவரை கண்டெடுக்கப்படவில்லை.
குரங்கிலிருந்து மனிதனா?
மனிதன் அல்லாஹ்வின் மிக உன்னதமான சிருஷ்டி. அந்த மனிதனைக் குரங்குகளின் வழித்தோன்றல் என்பது நம்மையே நாம் தாழ்த்திக்கொள்வதாகவல்லவா இருக்கும்? இந்தப் பரிணாமவாதிகள் யூத எனப்படும் வால் இல்லாக் குரங்களிலிருந்து மனிதன் தோன்றினான் என்கிறார்கள். இவ்வாறு இவர்கள் கூறுவதற்கு சிறுபிள்ளைத் தனமான காரணங்கள் சில உள்ளன.
ஒன்று குரங்குகள் மனதனை உருவத்தில் ஒத்ததாக இருப்பது. அப்படியாயின் மனதனைப் போல் கிளி பேசுகிறது. மனிதனது கண்களை ஒத்த கண்கள் ஒக்டோபஸ்களுக்கு உள்ளன. நாய், பூனை என்பன மனிதனைப் போல் கட்டளைகளைப் பின்பற்றுகின்றன. இதற்காக மனிதன் நாயிலிருந்து, பூனையிலிருந்து, கிளியிலிருந்து, ஒக்டோபஸிலிருந்து தோன்றினான் என்று கூற முடியுமா?
அடுத்து இவர்கள் இக்கருத்தை நிறுவுவதற்காக முன்வைக்கும் உயிர்ச்சுவட்டு ஆதராங்களைப் பார்ப்போம். இவர்கள் மனிதனது பரணாம வளர்ச்சிக் கட்டங்களாகக் காட்டும் படங்களும் போலியானவையே. உலகில் பல வித்தியாசமான இனங்கள் வெவ்வேறு பகுதிகளில் வாழ்கின்றனர். இவ்வினத்தவர்கள் ஒருவருக்கொருவர் தோற்றத்திலும் நிறத்திலும் மிகவும் வித்தியாசமானவர்கள். உதாரணமாக எஸ்கிமோக்கள் ஆபிரிக்கர்கள், சீனர்கள்,அபோரிஜீன்ஸ்கள் எனப் பல்வேறு இனங்கள் உலகில் உள்ளனர். இவர்களில் எஸ்கிமோக்கள் மிகவும் சிறியவர்கள். அபோரிஜீன்ஸ்களுடைய மண்டையோடு ஒப்பீட்டளவில் சிறியது. இப்படி வித்தியாசமான இனங்களின் சுவடுகளின் மண்டையோடுகளை வைத்துக்கொண்டு இவை மனிதன் குரங்கிலிருந்து மாறும் நிலைப் பருவத்துக்குச் சொந்தமானது என்று கூறி உலகை ஏமாற்றமுனைகின்றனர் இந்தப் பரிணாமவாதிகள். இதுவரை இவர்களால் அரைகுறை மனிதக் குரங்கின் தடயங்களை உலகின் எந்த மூலைமுடுக்கிலாவது கண்டெடுக்கமுடியவில்லை.
உண்மை தெளிவானது!
இப்படிப் பரினாமவாதிகள் சோடித்துக் கூறும் இந்தக் “கதை”களை எல்லாம் அறிவு பூர்வமாகவும் தர்க்க ரீதியாகவும் இலகுவாகத் தகர்த்தெறிந்துவிடமுடியும். இவை எல்லாவற்றுக்கும் மேலாகஇ இந்த டார்வினின் போலிவாதங்களை எல்லாம் அல்-குர்ஆன் முழுமையாக மறுக்கின்றது. அல்லாஹ் இருக்கின்றான் என்பதற்காக அல்குர்ஆன் முன்வைக்கும் ஆதாரங்கள்இ அத்தாட்சிகள் முன் இந்தப் பொய்கள் எல்லாம் எப்பெறுமானமும் அற்றுப் போய்விடுகின்றன.
ஆகவேஇ உயிரினங்கள் ஒருபோதும் இன்னொன்றிலிருந்து வளர்ச்சி பெறவில்லை. உயிரினங்கள் ஒவ்வொன்றையும் அல்லாஹ் அதற்கே உரிய தனிப் பண்புகளோடு படைத்தான். அவை ஒரு போதும் அரைகுறை வளர்ச்சிக் கட்டத்தைத் தாண்டி வரவில்லை. அல்லாஹ் எதனையும் ப+ரணமாகப் படைப்பவன். அவனது படைப்பில் எவ்விதக் குறைபாடும்இ குளறுபடியும் நிகழ்வதில்லை. ஓர் உயிரினத்தில் இருந்துதான் இன்னொரு உயிரினத்தைப் படைக்க வேண்டும் என்ற வறுமையும் அவனுக்கு இல்லை. அவன் இல்லாமையில் இருந்து படைப்பவன். அவன் எந்தவொன்றையும் படைக்க நாடினால் ஒரு வார்த்தையே போதுமானது. அவன் தான் வானங்கள் பூமி உயிரினங்கள் அனைத்தையும் நுணுக்கமான திட்டமிடலுடன் படைத்துக் காப்பவன். எனவே இந்தத் தெளிவான உண்மையை விட்டும் மக்களைத் திசைதிருப்ப முயலும் கூர்ப்புக் கொள்கை போன்ற நச்சுக் கருத்துக்களிலிருந்து நாமும் விடுபட்டு எம் சமூகத்தையும் பாதுகாப்போம்.
“வானங்கள் பூமி அனைத்தையும் படைத்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்” (ஸூறா பாதிர்)
நன்றி : ஹாரூன் யஹ்யா