இஜ்திஹாத் - الإجتهاد
இஜ்திஹாத் என்றால் என்ன?
மொழிக் கருத்து: இஜ்திஹாத் என்பது ஜஹ்த் - கஷ்டப்படுதல், ஜுஹ்த் - முயற்சி செய்தல் என்பவற்றிலிருந்து தோன்றியது. முழு முயற்சியையும் செலவிடுதல் என்பது இஜ்திஹாத் என்பது குறிக்கும்.
இஸ்லாமிய வழக்கில்: குர்ஆன், ஸுன்னாவில் நேரடியாகத் தீர்வு காணப்படாத ஒரு பிரச்சினைக்கு ஓர் இஸ்லாமிய சட்டவறிஞர் ஷரீஆ மூலாதாரங்களையும் சட்டவாக்க வழிமுறைகளையும் பின்பற்றி தீர்வு காண முற்படுதல் இஜ்திஹாத் எனப்படும்.
இப்பணி ஸஹாபாக்கள் காலத்திலிருந்து இடம்பெற்று வந்துள்ளது.
இஜ்திஹாதுக்கான ஆதாரங்கள்
குர்ஆன் 'அவர்கள் அதனை (பிரச்சினையை) தூதரிடமோ, அவர்களிலுள்ள அதிகாரிகளிடமோ தெரிவித்தால், அவர்களில் அதை ஊகித்து அறியக் கூடியவர்கள் அதை நன்கு விசாரித்துக்கொள்வார்கள்' (4:83)
'அன்றியும் தம் காரியங்களை தம்மிடமே கலந்தாலோசித்துக் கொள்வர்' (42:38)
ஸுன்னா 'தீர்ப்பு சொல்பவர் இஜ்திஹாத் செய்து அது சரியாக அமைந்தால் அவருக்கு இரண்டு கூலிகள் உண்டு. அவர் இஜ்திஹாத் செய்து அது தவறாக அமைந்தால் அவருக்கு ஒரு கூலி உண்டு' (ஸஹீஹுல் புகாரி)
நபி (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரழி) அவர்களை யமனுக்கு அனுப்பி வைக்கும் போது குர்ஆனிலோ, ஹதீஸிலோ தீர்வு காணப்படாத ஒரு பிரச்சினையை எவ்வாறு எதிர்கொள்வீர் என வினவப்பட்டபோது, முஆத் (ரழி) அவர்கள் என் அறிவுக்குட்பட்ட வரை இஜ்திஹாத் செய்து தீர்வு சொல்வேன் என்றார்கள். இதனை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்து பிரார்த்தித்தார்கள்.
பனூ குறைழாவில் வைத்தே அஸர் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என நபி (ஸல்)அவர்கள் சில ஸஹாபாக்களைப் பணித்த சம்பவம். இதிலே நபி(ஸல்)அவர்கள் இரு குழுக்களினதும் முடிவை அங்கீகரித்தமை.
இஜ்மாஃ எல்லா மத்ஹப்களும் இஜ்திஹாதை சட்ட மூலாதாரமாக ஏற்றுக்கொண்டுள்ளன. அவை இவ்விடயத்தில் ஏகோபித்த முடிவைக் கொண்டுள்ளன.
பகுத்தறிவு குர்ஆனில் பல கருத்துக்கிடம்பாடான பல விடயங்கள் உள்ளதால் அவற்றுள் ஒரு கருத்தைத் தெரிவு செய்யவேண்டிய தேவை உள்ளமை.
தீர்வு சொல்லப்படாத புதிய பிரச்சினைகளுக்கு பிரதான சட்ட மூலாதாரங்கள் அடிப்படையில் இஜ்திஹாத் செய்து முடிவு செய்ய வேண்டியுள்ளமை.
இஜ்திஹாதின் எல்லை
குர்ஆன், ஸுன்னா தெளிவாக, திட்டவட்டமாகத் தீர்வு சொன்ன விடயங்ளில் இஜ்திஹாத் இடம்பெற முடியாது.
உம்: அகீதா, இபாதா, ஹுதூத், கப்பாறா, அக்லாக்...
இவ்வகையில் இஜ்திஹாத் பின்வரும் பகுதிகளில் இடம்பெறும்.
1. பல கருத்துக்கு இடம்பாடான வசனங்கள். (உம்: தயம்முமில் صعيد எனும் சொல்)
2. சட்ட வசனங்கள் (நஸ்) இடம்பெறாத புதிய பிரச்சினைகள் (உம்: பரிசோதனைக் குழாய்க் குழந்தை)
இஜ்திஹாதின் வகைகள்
இஜ்திஹாத் ஜுஸ்ஈ الإجتهاد الجزئي
• ஒரு குறிப்பிட்ட துறையில் மாத்திரம் இஜ்திஹாத் செய்ய ஆற்றல் கொண்ட ஒரு முஜ்தஹிதின் தீர்ப்பு.
• உம்: வங்கியியல் , தனியார் சட்டம்..
இஜ்திஹாத் குல்லி الإجتهاد الكلي
• அனைத்து துறைகளிலும் இஜ்திஹாத செய்யும் ஆற்றல் கொண்ட ஒரு முஜ்தஹிதின் தீர்ப்பு.
• இவர் ஒரு துறையில் அன்றி சகல துறைகளிலும் இஜ்திஹாத் செய்வார். (முஆமலாத், முனாகஹாத்..)
ஒரு முஜ்தஹிதுக்கான தகுதிகள்
1. முஸ்லிமாக, பருவவயதடைந்தவராக இருத்தல்
2. அல் குர்ஆன் பற்றிய ஆழமான அறிவு. (ஸபபுன் நுஸூல், மக்கி மதனி,
நஸ்க், முஹ்கம், முதஷாபிஹ்..)
3. அஸ் ஸுன்னா பற்றிய ஆழமான அறிவு. (உஸூலுல் ஹதீஸ்,
முஸ்தலஹுல் ஹதீஸ், அஸ்பாபு வுரூதில் ஹதீஸ்...)
4. முன்னைய இஜ்மாஃ பற்றிய அறிவு. (அல் இஜ்மா: இப்னுல் முன்திர்,
மராதிபுல் இஜ்மா: இப்னு ஹஸ்ம்..)
5. அறபு மொழிப் புலமை. (இலக்கணம், இலக்கியம், அணியிலக்கணம்..)
6. உஸூலுல் பிக்ஹ் பற்றிய அறிவு. (சட்டவாக்க முறைகள், சட்ட விதிகள்..)
7. ஷரீஆவின் நோக்கங்கள் ( الشريعةمقاصد( பற்றிய தெளிவு. (நல்லவை சேரல்,
தீயவை தவிர்த்தல்.)
8. சமகால உலகு, மக்கள், சூழ்நிலைகள் பற்றிய அறிவு.
9. தக்வா, நீதி, நேர்மை இருத்தல்.