சிந்தனைகள்
1. புகழும் போது பகிரங்கமாகப் புகழ். தூற்றும் பொழுது தனியே தூற்று. ஒருவர் நல்லதொரு செயல் செய்துவிட்டால் பலர் பேர் முன்னிலையில் மனந்திறந்து பாராட்டவேண்டும். அதேநேரம் ஒருவர் தவறு செய்துவிட்டால் அதனை எல்லோர் முன்னிலையிலும் பகிரங்கப்படுத்தி அவரை அவமானப்படுத்தாமல் தனியே சுட்டிக்காட்ட வேண்டும். ஒருவரது குறையை பல பேர் முன்னிலையில் எடுத்துச்சொல்வதால் அவர் திருந்தமாட்டார். அவர் அதனால் பாதிக்கப்பட்டு மென்மேலும் தவறுசெய்ய முற்படுவார். அதேபோன்று நாம் மற்றவர்களது சாதனைகளை, வெற்றிகளை மனந்திறந்து பாராட்ட வேண்டும். பொறாமைப்படக் கூடாது. இது பெரிய, பண்பட்ட உள்ளங்களால் மட்டுமே முடியும்.

2. நேற்று என்பது காலாவதியான காசோலையாகும்.
நாளை என்பது திகதியிடப்பட்ட காசோலையாகும்.
இன்று என்பது கையிலுள்ள காசாகும். அதனை நீ பயன்படுத்திக்கொள்.
நேற்றை நினைத்துக் கவலைப்படுவதும் நாளை நடக்கப்போவதை நினைத்து அவதிப்படுவதும் புத்திசாலித்தனமாகாது. இன்றைய நாட்களை ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுத்தி வெற்றிபெற முயற்சிக்க வேண்டும். நேற்று என்பது மரணித்துவிட்ட ஒன்று . நாளை என்பது இன்னமும் பிறக்காத ஒன்று. இன்று மட்டுமே எங்கள் கைவசம் உள்ளது. அதனைத் திட்டமிட்டுக் கழிப்பதால்தான் விமோசனம் கிடைக்கும்.
3. நாம் எவ்வளவு காலம் வாழ்வது என்பது முக்கியமல்ல. எப்படி வாழ்கின்றௌம் என்பது தான் முக்கியம்.
ஒருவர் எத்தனை வருடங்கள் வாழ்ந்தார் என்பது சாதனையல்ல. தன் வாழ்நாளில் எதனையெல்லாம் சாதித்தார் என்பதுதான் சாதனையாகும். நாம் பிறருக்காக வாழும்போது ஒரு கொள்கைக்காக வாழும் போதுதான் எமது வாழ்வு அர்த்தமுள்ளதாகின்றது. எமக்காகவும் எமது குடும்பத்துக்காகவும் மட்டும் வாழ்ந்தவர்களை வரலாறு வாழ்ந்தவர்கள் என்று வரவு வைப்பதில்லை. எனவே நாம் வாழ்ந்ததற்கு அடையாளமாக எதையேனும் உலகில் சாதித்துவிட்டுச் செல்ல வேண்டும்.

4. மதம் என்பது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல. அது நடத்தையாகும்.
மதம் என்பது வெறும் நம்பிக்கைகள் மட்டுமல்ல. அது எமது வாழ்வில் ஒவ்வொரு அம்சத்திலும் பிரதிபளிக்க வேண்டும். செயற்பாடுகளில் மதப் போதனைகள் வெளிப்படவேண்டும். இல்லாதபோது மதம் என்பது கோசமாக மட்டுமே அமையும். நல்ல நடத்தைகளோ முன்மாதிரியான பழக்கவழக்கங்களோ இல்லாதவரிடத்தில் மதம் என்பது போலியாகவே இருக்கும்.

5. தேவைகள் குறைந்தவன்தான் செல்வந்தனாவான்.
அதிக பணத்தை சம்பாதிப்பவன் செல்வந்தன் அல்லன். பணக்காரன் கூட தேவைகள் அதிகரிக்கும்போது ஏழையாகின்றான். அதேவேளை ஓர் ஏழை கூட தேவைகளைக் குறைத்துக்கொள்ளும் போது செல்வந்தன் ஆகின்றான். ஆகவே ஆசைகளைக் குறைத்துக்கொள்ளும் போது மனிதன் செல்வந்தனாகின்றான் நிம்மதி பெறுகின்றான். இதனால் தான் உளத்திருப்திதான் ஒருவனிடமுள்ள உண்மையான செல்வம் என பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

6. அறிவில் மிகச் சிறந்தது உன்னை நீ அறிந்துகொள்வதே.
ஒவ்வொருவரும் தான் யார் தனக்குள்ள ஆற்றல்கள் என்ன, திறமைகள் என்ன, பலவீனங்கள் என்ன என்பதைப் புரிந்துகொள்வதே மிக மிக முக்கியமானதாகும். மற்றவர்களைப் பற்றி அறிவதை விட தன்னைப் பற்றிச் சரியாக அறிவதுதான் மிகக் கடினமானது என்பார்கள். தன்னை அறிந்தவனால் தான் பல விடயங்களை இலகுவில் சாதிக்க முடியும். வெற்றிபெறவும் முடியும்.

7. தற்புகழ்ச்சி என்பது ஒருவனுக்கான பரிந்துரை ஆகாது.
ஒருவர் தன்னைப் பற்றிப் புகழ்ந்துரைப்பதை யாரும் நம்பமாட்டார்கள். இது நாகரிகமான செயல் அல்ல. புகழ் என்பது மற்றவர்கள் மூலம் பரப்பப்படவேண்டும். பூக்களின் வாசனையைக் காற்றுதான் பரப்புகின்றது. பூக்கள் ஒருபோதும் பரப்புவதில்லை என்கிறார் கவிஞர் வைரமுத்து. தன்னைப் பற்றி அதிகம் புகழ்பவர்கள் மற்றவர்களால் வெறுக்கப்படுகிறார்கள். விற்காத பொருளுக்குத்தான் விளம்பரம் செய்வார்கள். இதுபோன்றுதான் சமூகத்தில் எடுபடாதவர்கள் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டு தமக்கெனதொரு இடத்தைத் தேட முயற்சிப்பார்கள். தற்புகழ்ச்சி பாடுபவர்களை இறைவன் கூட வெறுக்கின்றான்.

8. வெற்றி என்பது பல தோல்விகளின் பின் வருவதாகும்.
முதல் முயற்சி எப்போதும் வெற்றியைத் தருவதில்லை. ஒரு வெற்றிக்குப் பின்னால் பல தோல்விகள் இருந்துள்ளதை நாம் வரலாற்றிலே கற்றுக்கொள்கின்றௌம். எனவே நாம் தோல்விகளைக் கண்டு துவண்டுவிடக் கூடாது. ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கான பாடமும் படிப்பினையுமாகும். தோல்விகளால் கிடைக்கும் அனுபவங்களைக் கொண்டு வெற்றியை நோக்கித் தளர்வடையாமல் பயணிப்பவனே புத்திசாளியாவான்.

9. நான் வாழ்வதற்கு என் தந்தைக்குக் கடமைப்பட்டுள்ளேன். நான் நன்றாக வாழ்வதற்கு எனது ஆசிரியருக்குக் கடமைப்பட்டுள்ளேன்.
இது உலகின் பல பகுதிகளை ஆட்சிசெய்த மாமன்னன் மகா அலக்ஸாண்டருடைய வாக்கு. ஒவ்வொரு மனிதனுடைய எதிர்கால வெற்றியிலும் ஆசிரியர்கள் பங்கெடுக்கின்றார்கள். ஆசிரியர்களின் வழிகாட்டலும், அர்ப்பணிப்பும் தாம் நல்ல தலைவர்களையும் சாதனையாளர்களையும் உருவாக்குகின்றன. இதனை யாரும் மறந்துவிடக் கூடாது. தமக்கு ஏணியாக நின்ற ஆசிரியர்களை எப்போதும் கண்ணியப்படுத்த வேண்டும். இதனால் தான் கலீபா அலி (ரழி) அவர்கள், எனக்கு ஒரே ஒரு எழுத்தைச் சொல்லித் தந்தாலும் அவருக்கு நாம் அடிமைபோல் இருப்பேன் என்றார்கள்.

10. உண்மை பொய்யை விட விசித்தரமானது.
பொய் சொல்வதை விட உண்மையைக் கூறும்போதுதான் மக்கள் புதுமையாகவும் ஆச்சரியமாகவும் பார்ப்பார்கள். அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள முன்வர மாட்டார்கள். அதனைச் சிலபோது கடுமையாக எதிர்ப்பார்கள். பொய் அதிக முழக்கத்துடன் ஒலிப்பதால் அது உண்மையாகாது. உண்மை மெதுவாக ஒலிப்பதால் அது பொய்யாகவும் மாட்டாது. நாம் உணர்ச்சிவசப்படாமல் அறிவைப் பயன்படுத்தி நிதானமாக நின்று எது உண்மை எது பொய் என்பதைத் தெரிந்து செயற்படல் வேண்டும்.