புதுவருடம் சொல்லும் செய்தி.
அன்பின் இஸ்லாமிய சொந்தங்களே..
முஹர்ரம்.. இது முஸ்லிம்களின் புதுவருடம். அன்னியக் கலாசாரங்களில் கரைந்துபோகாத இறை விசுவாசிகளின் தனித்துவம் மிக்க வருட உதயம். புனித மாதம் என அல்லாஹ்வினால் பிரகடனப்பட்ட அருள் மிகு மாதம். இஸ்லாம் என்ற விருட்சம் உலகெலாம் கிளைவிட்டுத் தலைத்தோங்க அடித்தளமாக அமைந்த, அன்றைய முஸ்லிம்களின் உச்ச கட்டத் தியாகத்தை உலகறியச்செய்த ஹிஜ்றத்தை நினைவு கூறும் மாதம். கொடுங்கோலன் பிர்அவ்னிடமிருந்து நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவரது சமுதாயமும் விடுதலை பெற்ற மாதம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருமைப் பேரன் ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு ஷஹீதாகிய மாதம். இப்படி இஸ்லாமிய வரலாற்றிலே எத்தனையோ மைல்கற்களை எமது நினைவலைகளில் மீண்டும் ஒரு முறை மீட்டிப்பார்க்க வைக்க எம்மைத் தேடி வந்துள்ளது முஹர்ரத்தோடு தொடங்கும் இஸ்லாமியப் புதுவருடம்!
பல சோகங்களுக்குள்ளும் ரணங்களுக்குள்ளும் சிக்கித் தவிக்கும் உலக முஸ்லிம்களுக்கு நம்பிக்கையையும் கூடவே பல எதிர்பார்ப்புகளையும் சுமந்துகொண்டு மலர்கிறது இப்புத்தாண்டு. பட்டாசு கொழுத்தி, புத்தாடை அணிந்து கொண்டாடுவதற்காய் ஒன்றும் புத்தாண்டு எம்மிடம் வரவில்லை. எம்மைக் கடந்து சென்ற வருடத்தை ஒரு முறை மீள்பரிசீலனை செய்யவும் அதிலிருந்து பெற்ற அனுபவங்கள், படிப்பினைகள் மூலம் மலர்கின்ற புது வருடத்தை எப்படி அழகாகத் திட்டமிட்டுக் கழிப்பது பற்றிச் சிந்திக்கவும் அல்லாஹ் எமக்களித்த வாய்ப்பாகவல்லவா நாம் இதனைக் கருதவேண்டும்?
கடந்த வருடத்தில் அல்லாஹ்வுடனான எமது உறவுகள் எப்படி இருந்தன? அவனது கட்டளைகளை வாழ்வில் எடுத்தநடப்பதில் எந்தளவு கரிசனை காட்டினோம்? அவன் தடுத்த விடயங்களில் இருந்து எந்தளவுக்கு நாம் தூரமாக இருந்தோம்? அவனது கொள்கையை இம்மண்ணில் உயர்ந்தோங்கச் செய்வதற்காக நாம் என்னென்ன செய்தோம்? ஏனைய முஸ்லிம் சகோதரர்களோடு சீரான உறவை வைத்திருந்தோமா? அவர்களது கஷ்ட நஷ்டங்களில் முன்னேற்றத்தில் எந்தளவு நாம் பங்கெடுத்தோம்? அவர்களது இன்னல்களைத் தீர்க்க எம்மால் இயன்ற எந்த முயற்சிகளைச் செய்தோம்? எமது சமூகத்தின் இருப்பையே ஆட்டம் காணச் செய்யும் பயங்கரமான பிரச்சினைகளில் நாம் எந்தளவு கவனம் செலுத்தினோம்?
இப்படி இன்னோரன்ன வினாக்களை நாம் எம்மிடத்தில் கேட்டுக்கொள்ளவேண்டிய தருணம் இது. எமது தவறுகளைஇ குறைகளை நாம் முதலில் இனம்காணவேண்டும். பின்னர் அவற்றுக்கு நியாயம் கூறுவதை விட்டுவிட்டு அவற்றைத் திருத்திக்கொண்டு எமது எதிர்காலத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். கடந்த தவறுகள், பிழைகள், பொடுபோக்குகள் அனைத்தில் இருந்தும் மீட்சி பெறுவதற்கு ஒரு திடசங்கட்பத்தை இப்புத்தாண்டில் நாம் எம்மில் ஏற்படுத்திக்கொள்வோம்.
விடியலுக்கு முன்னுள்ள நேரம்தான் மிகவும் இருள்மிக்கது, பயங்கரமானது. இது உலக நியதி! எனவே இன்று நாலா புறமும் சூழ்ந்துள்ள சூழ்ச்சிகளும் அநியாயங்களும் கெடுபிடிகளும் எம்மை விட்டு அகழும் காலம் நெருங்கிவிட்டது. அந்த விடியல் மீட்சி சீக்கரம் கிடைப்பதற்காய் நாமும் அயராது உழைப்போம்! இதற்கான உறுதியை இப்புத்தாண்டில் நாம் எம்முள் செதுக்கிக்கொள்வோம்!
எதிர்காலம் எமதே!

No comments:
Post a Comment