Monday, July 25, 2011

நிலாக் கவிதை

நிலவே நானும் உனைப் பாடுகிறேன்
நிலவோடு நடந்துகொண்டு
நிலவொளியில் நனைந்துகொண்டு
நிலவையே ரசித்துக்கொண்டு
நிலவுக்குத் தூதுவிட்டேன்
நிலவே
நீ எப்படி பெண்ணானாய்?
கவிதைக்குக் கருவானாய்?
பெண்மைக்கு ஒப்பானாய்?
அழகுக்கு நிகரானாய்?
பெண்ணாக உருவகிப்போர்
உனைப் பற்றித் தெரியவில்லை
அழகுக்கு அர்த்தம்சொல்வோர்
உனை ஒன்றும் அறியவில்லை.
உனது அழகெல்லாம்
தூரத்தில் இருப்பவர்க்கே
உனதருகில் வந்துவிட்டால்
காவேரியும் கதிகலங்கும்
உன் முகத்தின் குழிகளையோ
ஈரமில்லா நெஞ்சத்தையோ
சுவாசமில்லா இதயத்தையோ
பெண்மையென்று சொல்லலாமோ?
உந்தன் வெளிச்சம் ஒன்றும்
உன்னால் வந்ததல்ல
கதிரவனின் தயவால்
கடன்வாங்கிய எழிலன்றௌ?
உனைப் பற்றிக் கவிசொல்வோர்
உனை ஒன்றும் மெச்சவில்லை
உன் பெயரை சிலேடையாக்கி
உருவகிப்பர் வேறெதையோ.
உனைப்பார்த்து எனக்கொன்றும்
கிஞ்சிற்றும் பொறாமையில்லை
உனைப்பாட வந்தவர் பலர்
உருப்படியாய் சொல்லவில்லை.
நீ எமக்கு விளக்கானாய்
காலத்தின் கருவியானாய்
நம்பூமிக்கு துணையானாய்
மலர்களுக்கு நட்பானாய்.
கடலுக்கு எழுச்சியானாய்
அண்ணலுக்கு அற்புதமானாய்
இரவில் திரியும் உயிர்களுக்கு
இலவசமின் குமிழானாய்
நிலவே
உனைக் காணும் போதெல்லாம்
உனைப்படைத்த வல்லமையை
துதிக்காமல் இருப்பதற்கு
இறக்கவில்லை இதயமின்னும்.

ஹிசாம் ராஸிக்

No comments:

Post a Comment