Monday, July 25, 2011

தரீக்கா

தரீக்காக்கள்
தோற்றம்
 ஆத்மீக ஞானிகளால் ஏற்படுத்தப்பட்ட இஸ்லாமிய ஆன்மீகப் பயிற்சி முறைகளை உள்ளடக்கிய ஓர் ஆன்மீக மரபே தரீக்கா எனப்படும்

பிக்ஹ் கலையில் ஒரு கட்டத்தில் மத்ஹப்கள் தோன்றியது போல் தஸவ்வுப் கலையில் ஒரு கட்டத்தில் தரீக்காக்கள் தோற்றம் பெற்றன.
அடிப்படைகள்

தரீக்காக்களை உருவாக்கிய ஆத்மீக ஞானிகள் இறைநெருக்கத்தை அடைய 4 படித்தரங்களை முன்வைத்தனர்.
1. ஷரீஆ  : இதுவே ஏனைய படித்தரங்களுக்கு அடிப்படையாகும்.
2. தரீக்கா : இறைநெருக்கத்தை அடையும் வழிமுறை
3. ஹகீகா : இறைவணக்கத்தில் ஆழ்ந்து ஈடுபடும் போது இறைநேசர்கள்    (வலிமார்கள்) தெய்வீக மெய்ம்மை
 நிலை உருவாகும்.
4. மஃரிபா  : ஹகீகா மூலம் இறை நேசர்கள் பெறும் பேரமுதம்.
தரீக்காவில் முக்கியம் பெறும் 4 விடயங்களாவன.
1. செய்கு (ஆன்மீக வழிகாட்டி)
2. முரீத் (சீடர்)
3. வழிமுறை
4. பைஅத் (ஷெய்கிடமிருந்து சீடர் பெறும் உறுதிமொழி)
தரீக்காக்களின் குறிக்கோள்
ஷரீஆவின் ஒளியில் மக்களுக்கு வழிகாட்டுவதே தரீக்காக்களின் பிரதான குறிக்கோள் ஆகும்.
தரீக்காவின் குறிக்கோள் இறைவழிகாட்டல்களை நிறைவேற்றுவதில் இன்பமும் சுவையும் ஏற்படுவதோடு விலக்கப்பட்ட கருமங்களில் அருவருப்பு ஏற்படும் நிலையை அடைவதாகும். (இமாம் இல்யாஸ் (ரஹி))
தரீக்காக்களில் பைஅத்
 இறைதூதரின் வழிமுறையைப் பின்பற்றி (பைஅதுல் அகபா) ஆன்மீக வழிகாட்டியான ஷெய்குவிடம் அவரைப் பின்பற்றும் சீடர்கள் இஸ்லாத்துக்கு முரணான சகல விடயங்களை, பித்அத்களை விட்டும் தவிர்ந்து வாழ்வதாகவும் உலக இன்பங்களில் மூழ்காது இஸ்லாத்துக்காக உழைப்பதாகவும் செய்துகொள்ளும் விசுவாசப் பிரமாணமே பைஅத் எனப்படுகின்றது.

இந்த பைஅத் மூலம் ஆத்மீக குருவுக்கும் சீடர்களுக்கும் ஒரு இறுக்கமான பிணைப்பு ஏற்படுவதோடு அவர்கள் ஒரு கட்டுக்கோப்பில் வாழவும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது.

தரீக்காக்களின் பங்களிப்புக்கள்
படைகளால் வெற்றிகொள்ளப்படாத பல நாடுகளில் இஸ்லாம் பரவ தரீக்காக்கள் பெரும் பங்களித்துள்ளன.
இந்தோனேசியா, சீனா. இந்துசமுத்திரத் தீவுகளில் இஸ்லாத்தைப் பரப்புவதில் ஆன்மீக குருக்களிடம் இருந்து பயிற்சி பெற்ற சீடர்கள் இவ்விடங்களுக்கெல்லாம் சென்று பெரிதும் உழைத்துள்ளனர். (இமாம் அப்துல் காதிர் ஜீலானி)

கொடூரமான தாத்தாரியர் படையை வெற்றிகொண்டு அவர்களை இஸ்லாமியர்களாக மாற்றுவதிலும் தரீக்காக்கள் பெரும் பங்களிப்புச் செய்துள்ளன.
ஸலாஹுத்தீன் ஐயூபி, நிஸாமுல் முல்க் தூர்ஸி போன்ற சிறந்த பொறுப்புள்ள ஆட்சியாளர்களை தரீக்காக்கள் உருவாக்கியுள்ளன.

ஜிஹாத் மற்றும் சுதந்திரப் போராட்டங்களும் தரீக்காக்களால் வலுப்பெற்றுள்ளன. (இந்தோனேசியா)
பிரதான தரீக்காக்கள்
1. காதிரிய்யா  : அப்துல் காதிர் ஜீலானி ஹி 565 (ஜீலான்)
2. ஷஷுஹரவர்திய்யா : ஷிஹாபுத்தீன் ஷஷுஹரவர்தி ஹி 632
3. ரிபாஇய்யா  : செய்யித் அஹ்மத் அல் கபீர் அர் ரிபாஈ - பஸறா
4. ஷாதுலிய்யா  : நூருத்தீன் அஹ்மத் அஷ் ஷாதுலி – மொரோக்கோ
5. நக்ஷபந்திய்யா  : பஹாஉத்தீன் நக்ஷபந்தி – புகாரா
6. ஜிஸ்திய்யா  : குவாஜா அபூ இஸ்ஹாக் ஜிஸ்தி – சிரியா

தொகுப்பு: எம். ஆர். ஹிஷாம் முஹம்மத்


1 comment: