மதீனாவுக்கான ஹிஜ்றத்
ஹிஜ்றத் என்பது இஸ்லாமிய வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும். இது நுபுவ்வத் 13ஆம் ஆண்டு நிகழ்ந்தது. இதன் முக்கியத்துவம் காரணமாக இதனை வைத்து உமர் (ரழி) அவர்கள் ஆண்டுக்கணிப்பை ஆரம்பித்தார்கள்.
ஹிஜ்றத்துக்கான காரணங்கள்
1. அல்லாஹ்வின் கட்டளை. நபி (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் கனவில் கண்டமை.
2. மக்காவில் இஸ்லாமியப் பிரச்சாரம் தேக்கநிலை அடைந்தமையும் குறைஷியரின் எதிர்ப்பு நடவடிக்கைகள் அதிகரித்தமையும்.
3. ஒரு முன்மாதிரியான இஸ்லாமிய சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு உகந்த சூழல் மக்காவில் காணப்படாமை. அதிகார வர்க்கத்தினரும் பழமைவாதிகளும் இதற்குப் பெரும் தடையாக அமைந்தமை.
4. சிலை வணக்கத்தையும் தமது மூடப் பழக்கவழக்கங்களையும் பாதுகாப்பதன் மூலம் குறைஷிக் காபிர்கள் தமது அரசியல், சமூக, பொருளாதார தனித்துவத்தைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சித்தமை.
5. அகபா உடன்படிக்கை மூலம் முஸ்லிம்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்தமையும் இஸ்லாமிய தஃவாவுக்காக ஒரு பொருத்தமான தளமாக மதீனா அடையாளம் காணப்பட்டமையும்.
மதீனாவில் ஹிஜ்றத் சாத்தியமடைவதற்கான காரணிகள்
1. மதீனா மக்கள் அறிவில் ஆர்வமுடையோராகவும் எளிதில் புரிந்துகொள்வோராகவும் நியாயமானவர்களாகவும் இருந்தமை.
2. மக்கா வாசிகளை விட மதீனா வாசிகள் கலாசார முன்னேற்றம் கொண்டவர்களாக இருந்தமை.
3.. மதீனாவில் யூத, கிறிஸ்தவர்கள் வாழ்ந்ததால் நபித்துவம் பற்றிய ஓரளவு அறிமுகமும் முன்னைய வேதங்கள் பற்றிய அறிவும் இருந்தமை. இதனால் இஸ்லாத்தை எடுத்துரைப்பது ஓரளவு இலகுவாக இருந்தமை.
4. மதீனாவில் நீண்டகாலமாக மோதிக்கொண்டிருந்த அவ்ஸ், கஸ்றத் கோத்திரத்தினரிடையே சமாதனாத்தை ஏற்படுத்திவைக்கக்கூடிய ஒரு சமாதானத் தூதுவர் தேவைப்பபட்டமை.
5. மக்காவின் தலைமைத்துவத்துக்கு ஈடாக அல்லது அதனை விட மேலான ஒரு தலைமைத்துவம் தம்மிடையே உருவாக வேண்டும் என மதீனாவாசிகள் விரும்பியமை.
6. மதீனாவுடனான இரத்த உறவு நபி (ஸல்) அவர்களுக்கு இருந்தமை. ஹாசிம் கஸ்றஜ் கோத்திரத்தில மணம் செய்திருந்தமை.
ஹிஜ்றத் ஒரு திட்டமிட்ட பயணம்
ஹிஜ்றத் என்பது நபி (ஸல்) அவர்கள் தனது உயிரைக் காத்துக்கொள்வதற்காக தப்பியோடிய ஒரு திடீர் முயற்சி அல்ல. அது நீண்டகாலமாகத் திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்ட ஒரு விவேகமான செயற்பாடாகும். இதற்கு சான்றாக பல்வேறு விடயங்களை முன்வைக்க முடியும்.
• ஒரு முழுமையான சமூதயா அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு பல இடங்களை நபியவர்கள் தேடியமையும் இறுதியில் மதீனாவை அதற்காகத் தெரிவு செய்தமையும்.
• மதீனாவுக்குச் செல்ல முன்னர் அங்கிருந்து வந்தவர்களோடு (அகபா) உடன்படிக்கைகளைச் செய்துகொண்டதோடு முஸ்அப் இப்னு உமைர் (ரழி) அவர்களை இஸ்லாமியப் பிரச்சாரத்துக்காக அனுப்பி வைத்தமை. இது மதீனாவில் ஒரு சாதகமான ஒரு சூழலை ஏற்படுத்தும் முன்னேற்பாடாக அமைந்தது.
• ஹிஜ்றத் செய்வதற்கு அல்லாஹ்வின் கட்டளை வரும் வரை நபி (ஸல்) காத்திருந்தமை.
• ஹிஜ்றத்துக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் ஏற்பாடு செய்யுமாறு அபூ பக்ர் (ரழி)அவர்களுக்கு நபியர்கள் பொறுப்பு அளித்தமை.
• குறைஷிக் காபிர்களின் அடைக்கலப் பொருட்களை ஒப்படைப்பதற்கு அலி(ரழி)அவர்களை நியமித்தமை.
• அப்துல்லாஹ் பின் அர்கத் எனும் முஸ்லிம் அல்லாத ஒரு தேர்ச்சி பெற்ற ஒருவரை வழிகாட்டியாக ஹிஜ்றத்தின் போது நியமித்தமை.
• குறைஷியருடைய நடவடிக்கைகளை அறியவும் உணவைப் பெற்றுக்கொள்ளவும் ஏற்கனவே ஏற்பாடு செய்தமை. (அஸ்மா (ரழி))
• உணவு கொண்டுவருவோரின் பாதச் சுவடுகளை அழிப்பதற்கான ஆமிர் பின் ஸுஹைரா எனும் இடையரை நியமித்தமை.
• நேரடியாக மதீனாவுக்குச் செல்லாமல் ஸவ்ர் குகையில் தங்கிவிட்டுச் சென்றமையும் புதியதொரு பாதையில் சென்றமையும்.
ஹிஜ்றத்தின் முக்கியத்துவம்
1. இஸ்லாமிய சட்டங்கள், வழிபாடுகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன.
• அதான், கிப்லா மாற்றம்
• ஜமாஅத், ஜும்ஆ தொழுகைகள்
• ரமழான், நோன்பு, ஸகாத், ஹஜ்...
2. இஸ்லாமிய தஃவா முறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன.
• வேதக்காரர்களை நோக்கி பிரச்சாரம் பலமாக முன்னெடுக்கப்பட்டது.
3. சமுதாய அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டமை.
• அவ்ஸ், கஸ்றஜ் உறவு, முஹாஜிர், அன்ஸார் பிணைப்பு,
வேதக்காரருடனான உறவு
4. இஸ்லாமிய அரசு ஒன்று உருவாக்கப்படல்.
நபி (ஸல்) அவர்கள் ஆன்மீகத் தலைவராக மட்டுமன்றி அரசியல்
தலைவராகவும் மாறி மதீனாவைத் தலைநகராகக் கொண்டு
ஆட்சிசெய்யும் நிலை தோன்றியது. குர்ஆன், ஸுன்னா அரசயில் யாப்பாக
மாற்றப்படுகின்றது.
5. குர்ஆன் எதிர்பார்க்கும் முன்மாதிரியான முஸ்லிம் உம்மத்
உருவாக்கப்பட்டல் .
6. முஸ்லிம்களுக்கிருந்த கெடுபிடிகள், அச்சுறுத்தல்கள் நீங்கி சுதந்திரமாக
இஸ்லாத்தைப் பின்பற்றச் சந்தர்ப்பம் கிடைத்தல்.
ஹிஜ்றத் உணர்த்தும் படிப்பினைகள்
1. நபி (ஸல்) தன்னிகரற்ற தலைமைத்துவம் ஹிஜ்றத்தில்
வெளிப்படுகின்றது. பொருத்தமான சந்தர்ப்பத்தில் பொருத்தமான முடிவு
எடுத்தல்.
2. சில விடயங்களை இரகசியமாகவும் இராஜதந்திரமாகவும் நடத்தல்.
தனது ஹிஜ்றத்தை நபியவர்கள் இறுதிவரை இரகசியமாக
வைத்திருந்தமை.
3. ஏதிரிகளிடம் இருந்து தப்புவதற்காக பல்வேறு தந்திரோபாயங்களை
மேற்கொள்ளல். ஸவ்ர் குகையில தங்குதல், பாதையை மாற்றுதல்.
4. ஸஹாபாக்களின் ஈடிணையற்ற தியாகத்தை இது பறைசாற்றுகின்றது.
அலீ (ரழி)அபூ பக்ர் (ரழி)
5. திட்டமிடல் என்பது இஸ்லாத்தில் இன்றியமையாதது. இதனை நபி (ஸல்)
அவர்கள் தனது வாழ்வில் எப்போது கடைப்பிடித்துள்ளார்கள்.
6. அல்லாஹ் மீது உண்மையான தவக்குல் வைத்தல். ஸவ்ர் குகை சம்பவம்.
7. இஸ்லாமிய தஃவாவில் பெண்களின் பங்களிப்பு (அஸ்மா(ரழி))
No comments:
Post a Comment