ஹுதைபியா உடன்படிக்கை
மதீனா நகரில் வாழ்ந்த முஸ்லிம்களுடனும் யுதர்களுடனும் தமதுரிமைகள், கடமைகள் பற்றிய நபி (ஸல்) அவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தமே மதீனா சாசனம் எனப்படுகின்றது. மதீனாவில் அப்போது பிரதானமாக முஸ்லிம்கள், யூதர்கள், காபிர்கள், கிறிஸ்தவர்கள் என்போர் காணப்பட்டனர்.
பின்னணி
• யூதர்ளுடனான ஒரு பிணைப்பை ஏற்படுத்தல்.
மதீனாவில் அவ்ஸ், கஸ்றஜ் இடையேயும் முஹாஜிர், அன்ஸார் இடையேயும் இணைப்பு ஏற்பட்டதுபோல் அங்கு கணிசமாக வாழ்ந்த யூதர்களுடனும் ஒரு பிணைப்பை ஏற்படுத்திய வேண்டிய தேவை ஏற்பட்டமை. இந்த யூதர்களுள் பனூ கைனுகா, பனூ நழ்ர், பனூ குறைழா (மொத்தம்: 11) போன்ற முக்கியமான கோத்திரங்கள் அடங்கும். இந்த யூதர்கள் தம்மிலிருந்து இறுதி நபி தமக்கு சார்பான ஒருவராகத் தோன்றுவார் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர்.
• முஸ்லிம்களை, இஸ்லாமிய அரசைப் பலப்படுத்தல்.
அருகில் இருந்த மக்கா குறைஷியருடன் முஸ்லிம்களுக்கு கடும் பகை இருந்ததால் அவர்களின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்புப் பெற வேண்டிய தேவை முஸ்லிம்களுக்கு இருந்தது. இதற்கு யூதர்கள் துணைபோகக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் விழிப்பாக இருந்தார்கள்.
• யூதர்களின் நிலை
யூதர்களும் இவ்வுடன்படிக்கையில் கையொப்பம் இடுவதன் ஊடாக கிறிஸ்தவர்களுக்கெதிராக ஒரு கூட்டணியை உருவாக்கலாம் என்றும் இறுதி நபியை தமக்கு சார்பாக மாற்றிக்கொள்ளலாம் என்றும் எதிர்பார்த்தனர்.
• அப்துல்லாஹ் பின் உபையின் நிலைப்பாடு
அவ்ஸ், கஸ்றஜ் இடையிலான பூஆத் யுத்தம் முடிவுற்றதைத் தொடர்ந்து அப்துல்லாஹ் பின் உபையிக்கு மதீனா தலைமைத்துவம் ஏகமனதாக ஒப்படைக்கப்படவிருந்தது. எனவே இவனது தலைமையில் ஏற்படக் கூடிய கிளர்ச்சியை முன்கூட்டியே தவிர்க்கவேண்டி தேவையும் காணப்பட்டது.
நோக்கங்கள் - இலட்சியங்கள்
• இஸ்லாமிய சமூகத்தையும், இஸ்லாமிய அரசையும் அங்கீகரிக்கச்
செய்கின்ற முயற்சியாக இது அமைந்தது.
• மதீனாவில் வாழ்ந்த குடிமக்கள் சகலரினதும் உரிமைகளையும்
பாதுகாத்தல், கடமைகளை நிர்ணயித்தல்.
• இஸ்லாமிய அரசின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல்.
• முஹாஜிர்களின் பொருளாதார இழப்பை ஈடுசெய்து முன்னேற்றல்.
• வேறுபட்ட பிரிவினரிடையே உடன்பாடு காணுதல்
• சமூக, அரசியல் செயற்றிட்டங்களை முன்னெடுத்தல்
முக்கியத்துவம்
• நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் அரசியல் துறையில் பெறப்பட்ட மிகப்பெரும் சாதனையாக இது கருதப்படுகின்றது. இதன் மூலம் நபி (ஸல்) அவர்களின் அரசியல் தலைமை சகலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
• இஸ்லாமிய அரசுக்கான ஓர் அரசியல் யாப்பாக இது வடிவமைக்கப்பட்டது.
• இரத்தம் சிந்தாமலேயே ஒரு பசுமைப் புரட்சியை செய்வதற்கு இது வழிவகுத்தது.
• இன, நிற, மத வேறுபாடின்றி மனிதனின் அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் வழங்கிய முதல் சாசனமாக இதுவே அமைந்தது. பிரித்தானியாவில் மக்னா காட்டா உடன்படிக்கை கூட ஆறு நூற்றாண்டுகளுக்குப் பின்னரே (1215) மேற்கொள்ளப்பட்டது.
• இஸ்லாமிய அரசை உருவாக்கத் தேவையான ஆட்புல எல்லைகளைக் கொண்ட (வுநசசவைழசல) பிரதேசம் ஒன்று இதன் மூலம் உருவாகியது.
• மதீனா அரசைப் பாதுகாக்கும் பொறுப்பு சகலரிடமும் விடப்பட்டது.
நிபந்தனைகள்
இவை பற்றி ஸீறா இப்னு ஹிஷாமில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 44 நிபந்தனைகளில் 23 வரையானவை முஹாஜிர் அன்ஸார்களோடும் ஏனையவை யூத, கிறிஸ்தவர்களோடும் தொடர்புபட்டவை. அவற்றுள் சில:
1. இவ்வுடன்படிக்கையில் கைச்சாத்திடுவோர் அனைவரும் ஒரே நாட்டவராகக் கருதப்படுவர்.
2. ஒவ்வொருவருக்கும் சமய சுதந்திரம் உண்டு.
3. உடன்படிக்கை செய்துகொண்ட யூதர்களைப் பாதுகாப்பது முஸ்லிம்களின் கடமை.
4. தமக்கிடையே ஏற்படும் கருத்து முரண்பாடுகளில் தீர்வுகாண அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நாடவேண்டும்.
5. மதீனாவை இரத்தம் சிந்தாத புனித பூமியாக அங்கீகரித்தல் வேண்டும்
6. போரிடுவதானாலும் உடன்படிக்கை செய்வதானாலும் இரு தரப்பினரும் கலந்தாலோசித்தே செய்ய வேண்டும்.
7. மக்கா குறைஷியருக்கோ ஆதரவாளர்களுக்கோ புகலிடம் வழங்கக்கூடாது.
8. குற்றமிழைத்தோர், அல்லது உடன்படிக்கை மீறுவோர் யாராயினும் தண்டிக்கப்படுவர்.
9. முஸ்லிம்களும் யூதர்களும் நட்புடன் வாழ வேண்டும்.
10. தத்தம் கோத்திரக் குற்றவாளிகள் செலுத்த வேண்டிய நட்டஈட்டுத் தொகையை செலுத்துவது அக்கோத்திரத்தைச் சேர்ந்தது.
No comments:
Post a Comment