Tuesday, October 30, 2012

இஜ்திஹாத் - الإجتهاد

இஜ்திஹாத் - الإجتهاد
இஜ்திஹாத் என்றால் என்ன?
மொழிக் கருத்து: இஜ்திஹாத் என்பது ஜஹ்த் - கஷ்டப்படுதல், ஜுஹ்த் - முயற்சி செய்தல் என்பவற்றிலிருந்து தோன்றியது. முழு முயற்சியையும் செலவிடுதல் என்பது இஜ்திஹாத் என்பது குறிக்கும்.
இஸ்லாமிய வழக்கில்: குர்ஆன், ஸுன்னாவில் நேரடியாகத் தீர்வு காணப்படாத ஒரு பிரச்சினைக்கு ஓர் இஸ்லாமிய சட்டவறிஞர் ஷரீஆ மூலாதாரங்களையும் சட்டவாக்க வழிமுறைகளையும் பின்பற்றி தீர்வு காண முற்படுதல் இஜ்திஹாத் எனப்படும்.
இப்பணி ஸஹாபாக்கள் காலத்திலிருந்து இடம்பெற்று வந்துள்ளது.

இஜ்திஹாதுக்கான ஆதாரங்கள்
குர்ஆன்    'அவர்கள் அதனை (பிரச்சினையை) தூதரிடமோ, அவர்களிலுள்ள அதிகாரிகளிடமோ தெரிவித்தால், அவர்களில் அதை ஊகித்து அறியக் கூடியவர்கள் அதை நன்கு விசாரித்துக்கொள்வார்கள்' (4:83)
'அன்றியும் தம் காரியங்களை தம்மிடமே கலந்தாலோசித்துக் கொள்வர்' (42:38)

ஸுன்னா    'தீர்ப்பு சொல்பவர் இஜ்திஹாத் செய்து அது சரியாக அமைந்தால் அவருக்கு இரண்டு கூலிகள் உண்டு. அவர் இஜ்திஹாத் செய்து அது தவறாக அமைந்தால் அவருக்கு ஒரு கூலி உண்டு' (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரழி) அவர்களை யமனுக்கு அனுப்பி வைக்கும் போது குர்ஆனிலோ, ஹதீஸிலோ தீர்வு காணப்படாத ஒரு பிரச்சினையை எவ்வாறு எதிர்கொள்வீர் என வினவப்பட்டபோது, முஆத் (ரழி) அவர்கள் என் அறிவுக்குட்பட்ட வரை இஜ்திஹாத் செய்து தீர்வு சொல்வேன் என்றார்கள். இதனை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்து பிரார்த்தித்தார்கள்.

பனூ குறைழாவில் வைத்தே அஸர் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என நபி (ஸல்)அவர்கள் சில ஸஹாபாக்களைப் பணித்த சம்பவம். இதிலே நபி(ஸல்)அவர்கள் இரு குழுக்களினதும் முடிவை அங்கீகரித்தமை.

இஜ்மாஃ    எல்லா மத்ஹப்களும் இஜ்திஹாதை சட்ட மூலாதாரமாக ஏற்றுக்கொண்டுள்ளன. அவை இவ்விடயத்தில்  ஏகோபித்த முடிவைக் கொண்டுள்ளன.

பகுத்தறிவு    குர்ஆனில் பல கருத்துக்கிடம்பாடான பல விடயங்கள் உள்ளதால் அவற்றுள் ஒரு கருத்தைத் தெரிவு செய்யவேண்டிய தேவை உள்ளமை.

தீர்வு சொல்லப்படாத புதிய பிரச்சினைகளுக்கு பிரதான சட்ட மூலாதாரங்கள் அடிப்படையில் இஜ்திஹாத் செய்து முடிவு செய்ய வேண்டியுள்ளமை.

இஜ்திஹாதின் எல்லை
குர்ஆன், ஸுன்னா தெளிவாக, திட்டவட்டமாகத் தீர்வு சொன்ன விடயங்ளில் இஜ்திஹாத் இடம்பெற முடியாது.
உம்: அகீதா, இபாதா, ஹுதூத், கப்பாறா, அக்லாக்...
இவ்வகையில் இஜ்திஹாத் பின்வரும் பகுதிகளில் இடம்பெறும்.
1.    பல கருத்துக்கு இடம்பாடான வசனங்கள். (உம்: தயம்முமில் صعيد எனும் சொல்)
2.    சட்ட வசனங்கள் (நஸ்) இடம்பெறாத புதிய பிரச்சினைகள் (உம்: பரிசோதனைக் குழாய்க் குழந்தை)

இஜ்திஹாதின் வகைகள்
இஜ்திஹாத் ஜுஸ்ஈ الإجتهاد الجزئي   
•    ஒரு குறிப்பிட்ட துறையில் மாத்திரம் இஜ்திஹாத் செய்ய ஆற்றல் கொண்ட ஒரு முஜ்தஹிதின் தீர்ப்பு.
•    உம்: வங்கியியல் , தனியார் சட்டம்..  
 இஜ்திஹாத் குல்லி الإجتهاد الكلي
•    அனைத்து துறைகளிலும் இஜ்திஹாத செய்யும் ஆற்றல் கொண்ட ஒரு முஜ்தஹிதின் தீர்ப்பு.
•    இவர் ஒரு துறையில் அன்றி சகல துறைகளிலும் இஜ்திஹாத் செய்வார். (முஆமலாத், முனாகஹாத்..)

ஒரு முஜ்தஹிதுக்கான தகுதிகள்
1.    முஸ்லிமாக, பருவவயதடைந்தவராக இருத்தல்
2.    அல் குர்ஆன் பற்றிய ஆழமான அறிவு. (ஸபபுன் நுஸூல், மக்கி மதனி,
       நஸ்க், முஹ்கம், முதஷாபிஹ்..)
3.    அஸ் ஸுன்னா பற்றிய ஆழமான அறிவு. (உஸூலுல் ஹதீஸ், 
       முஸ்தலஹுல் ஹதீஸ், அஸ்பாபு வுரூதில் ஹதீஸ்...)
4.    முன்னைய இஜ்மாஃ பற்றிய அறிவு. (அல் இஜ்மா: இப்னுல் முன்திர்,
       மராதிபுல் இஜ்மா: இப்னு ஹஸ்ம்..)
5.    அறபு மொழிப் புலமை. (இலக்கணம், இலக்கியம், அணியிலக்கணம்..)
6.    உஸூலுல் பிக்ஹ் பற்றிய அறிவு. (சட்டவாக்க முறைகள், சட்ட விதிகள்..)
7.    ஷரீஆவின் நோக்கங்கள் ( الشريعةمقاصد(   பற்றிய தெளிவு. (நல்லவை சேரல்,
      தீயவை தவிர்த்தல்.)
8.    சமகால உலகு, மக்கள், சூழ்நிலைகள் பற்றிய அறிவு.
9.    தக்வா, நீதி, நேர்மை இருத்தல்.

குர்ஆனும் தனி மனித உருவாக்கமும்

தனி மனித உருவாக்கத்தில் குர்ஆனின் பங்கு.
01) ஒவ்வொரு தனிமனிதனும் குர்ஆனையே முழு முதல் வழிகாட்டியாகக் கொள்ளவேண்டும் என அது கூறுகின்றது.
மனிதன் இயல்பிலேயே குறையறிவு கொண்டவனாக இருக்கின்றான். அவனுக்கு இறைவழிகாட்டல் என்றும் இன்றியமையாதது. அது அவனது ஆன்மீக, லௌகீக வாழ்வுக்கு வழிகாட்டுகின்றது. குர்ஆன் முஃமின்களின் வழிகாட்டி என்பது குர்ஆனின் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
02) மனிதன் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை ஒழுங்காக நிறைவேற்ற வேண்டும் என குர்ஆன் பணிக்கின்றது.
இவை ق الله حقو   எனப்படுகின்றன. தொழுகை, நோன்பு, திக்ர், குர்ஆன் ஓதல் என பல விடயங்கள் இதில் அடங்குகின்றன. இவற்றின் மூலம் மனிதன் ஆன்மீக ரீதியான பலத்தைப் பெற்றுக்கொள்கின்றான்.
03) மனிதன் மனிதனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை முறையாகச் செய்யுமாறு குர்ஆன் பணிக்கின்றது.
இக்கடமைகள் حقوق العباد    எனப்படுகின்றன. பெற்றோரை மதித்தல், உறவுகளைப் பேணல், அயலாரை நேசித்தல் என நிறைய விடயங்கள் இதில் அடங்குகின்றன. தாய் தந்தையருக்கு சீ என்று கூடக் கூறக் கூடாது எனக் குர்ஆன் கூறுகின்றது. (17:24)
ஸஹாபாக்கள் இவ்விரு கடமைகளிலும் சமநிலை பேணியுள்ளார்கள். இதனால் தான் அவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டார்கள்;:
'இரவிலே துறவிகளாகவும் பகலிலே குதிரைவீரர்களாகவும் அவர்கள் இருப்பார்கள்'
04) தன்னையும் தன்னைச் சார்ந்துள்ள குடும்பத்தையும் நேர்வழிப்படுத்துவது தனிமனிதனின் பொறுப்பு என்கின்றது.
இதனால் தான் குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:
'நீங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்..'(66:6)
05) தனிமனிதனுக்கான சிறந்த ஒழுக்கப் பண்பாடுகளை குர்ஆன் போதிக்கின்றது.
அல்லாஹ்வின் அடியார்களின் பண்புகள் பற்றிக் குறிப்பிடும்போது குர்ஆன்,
அவர்கள் அறிவீனர்கள் பேசினால் ஸலாம் கூறி ஒதுங்கிச் சென்றுவிடுவார்கள் என்கின்றது

Thursday, March 22, 2012

ஹுதைபியா உடன்படிக்கை




ஹுதைபியா உடன்படிக்கை 

மதீனா நகரில் வாழ்ந்த முஸ்லிம்களுடனும் யுதர்களுடனும் தமதுரிமைகள், கடமைகள் பற்றிய நபி (ஸல்) அவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தமே மதீனா சாசனம் எனப்படுகின்றது. மதீனாவில் அப்போது பிரதானமாக முஸ்லிம்கள், யூதர்கள், காபிர்கள், கிறிஸ்தவர்கள் என்போர் காணப்பட்டனர்.

பின்னணி
யூதர்ளுடனான ஒரு பிணைப்பை ஏற்படுத்தல்.
மதீனாவில் அவ்ஸ், கஸ்றஜ் இடையேயும் முஹாஜிர், அன்ஸார் இடையேயும் இணைப்பு ஏற்பட்டதுபோல் அங்கு கணிசமாக வாழ்ந்த யூதர்களுடனும் ஒரு பிணைப்பை ஏற்படுத்திய வேண்டிய தேவை ஏற்பட்டமை. இந்த யூதர்களுள் பனூ கைனுகா, பனூ நழ்ர், பனூ குறைழா (மொத்தம்: 11) போன்ற முக்கியமான கோத்திரங்கள் அடங்கும். இந்த யூதர்கள் தம்மிலிருந்து இறுதி நபி தமக்கு சார்பான ஒருவராகத் தோன்றுவார் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர்.
முஸ்லிம்களை, இஸ்லாமிய அரசைப் பலப்படுத்தல். 
அருகில் இருந்த மக்கா குறைஷியருடன் முஸ்லிம்களுக்கு கடும் பகை இருந்ததால் அவர்களின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்புப் பெற வேண்டிய தேவை முஸ்லிம்களுக்கு இருந்தது. இதற்கு யூதர்கள் துணைபோகக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் விழிப்பாக இருந்தார்கள்.
யூதர்களின் நிலை 
யூதர்களும் இவ்வுடன்படிக்கையில் கையொப்பம் இடுவதன் ஊடாக கிறிஸ்தவர்களுக்கெதிராக ஒரு கூட்டணியை உருவாக்கலாம் என்றும் இறுதி நபியை தமக்கு சார்பாக மாற்றிக்கொள்ளலாம் என்றும் எதிர்பார்த்தனர்.
அப்துல்லாஹ் பின் உபையின் நிலைப்பாடு
அவ்ஸ், கஸ்றஜ் இடையிலான பூஆத் யுத்தம் முடிவுற்றதைத் தொடர்ந்து அப்துல்லாஹ் பின் உபையிக்கு மதீனா தலைமைத்துவம் ஏகமனதாக ஒப்படைக்கப்படவிருந்தது. எனவே இவனது தலைமையில் ஏற்படக் கூடிய கிளர்ச்சியை முன்கூட்டியே தவிர்க்கவேண்டி தேவையும் காணப்பட்டது.

நோக்கங்கள் - இலட்சியங்கள் 
இஸ்லாமிய சமூகத்தையும், இஸ்லாமிய அரசையும் அங்கீகரிக்கச்
        செய்கின்ற முயற்சியாக இது அமைந்தது.
மதீனாவில் வாழ்ந்த குடிமக்கள் சகலரினதும் உரிமைகளையும்
        பாதுகாத்தல், கடமைகளை நிர்ணயித்தல்.
இஸ்லாமிய அரசின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல்.
முஹாஜிர்களின் பொருளாதார இழப்பை ஈடுசெய்து முன்னேற்றல்.
வேறுபட்ட பிரிவினரிடையே உடன்பாடு காணுதல்
சமூக, அரசியல் செயற்றிட்டங்களை முன்னெடுத்தல்

முக்கியத்துவம்  
நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் அரசியல் துறையில் பெறப்பட்ட மிகப்பெரும் சாதனையாக இது கருதப்படுகின்றது. இதன் மூலம் நபி (ஸல்)  அவர்களின் அரசியல் தலைமை சகலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இஸ்லாமிய அரசுக்கான ஓர் அரசியல் யாப்பாக இது வடிவமைக்கப்பட்டது.
இரத்தம் சிந்தாமலேயே ஒரு பசுமைப் புரட்சியை செய்வதற்கு இது வழிவகுத்தது.
இன, நிற, மத வேறுபாடின்றி மனிதனின் அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் வழங்கிய முதல் சாசனமாக இதுவே அமைந்தது. பிரித்தானியாவில் மக்னா காட்டா உடன்படிக்கை கூட ஆறு நூற்றாண்டுகளுக்குப் பின்னரே (1215) மேற்கொள்ளப்பட்டது.
இஸ்லாமிய அரசை உருவாக்கத் தேவையான ஆட்புல எல்லைகளைக் கொண்ட (வுநசசவைழசல) பிரதேசம் ஒன்று இதன் மூலம் உருவாகியது.
மதீனா அரசைப் பாதுகாக்கும் பொறுப்பு சகலரிடமும் விடப்பட்டது.

நிபந்தனைகள் 
இவை பற்றி ஸீறா இப்னு ஹிஷாமில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 44 நிபந்தனைகளில் 23 வரையானவை முஹாஜிர் அன்ஸார்களோடும் ஏனையவை யூத, கிறிஸ்தவர்களோடும் தொடர்புபட்டவை. அவற்றுள் சில:
1. இவ்வுடன்படிக்கையில் கைச்சாத்திடுவோர் அனைவரும் ஒரே நாட்டவராகக் கருதப்படுவர்.
2. ஒவ்வொருவருக்கும் சமய சுதந்திரம் உண்டு.
3. உடன்படிக்கை செய்துகொண்ட யூதர்களைப் பாதுகாப்பது முஸ்லிம்களின் கடமை.
4. தமக்கிடையே ஏற்படும் கருத்து முரண்பாடுகளில் தீர்வுகாண அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நாடவேண்டும்.
5. மதீனாவை இரத்தம் சிந்தாத புனித பூமியாக அங்கீகரித்தல் வேண்டும்
6. போரிடுவதானாலும் உடன்படிக்கை செய்வதானாலும் இரு தரப்பினரும் கலந்தாலோசித்தே செய்ய வேண்டும்.
7. மக்கா குறைஷியருக்கோ ஆதரவாளர்களுக்கோ புகலிடம் வழங்கக்கூடாது.
8. குற்றமிழைத்தோர், அல்லது உடன்படிக்கை மீறுவோர் யாராயினும் தண்டிக்கப்படுவர்.
9. முஸ்லிம்களும் யூதர்களும் நட்புடன் வாழ வேண்டும்.
10. தத்தம் கோத்திரக் குற்றவாளிகள் செலுத்த வேண்டிய நட்டஈட்டுத் தொகையை செலுத்துவது அக்கோத்திரத்தைச் சேர்ந்தது.

மதீனாவுக்கான ஹிஜ்றத்



மதீனாவுக்கான ஹிஜ்றத்  

ஹிஜ்றத் என்பது இஸ்லாமிய வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும். இது நுபுவ்வத் 13ஆம் ஆண்டு நிகழ்ந்தது. இதன் முக்கியத்துவம் காரணமாக இதனை வைத்து உமர் (ரழி) அவர்கள் ஆண்டுக்கணிப்பை ஆரம்பித்தார்கள்.

ஹிஜ்றத்துக்கான காரணங்கள் 

1. அல்லாஹ்வின் கட்டளை. நபி (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் கனவில் கண்டமை.
2. மக்காவில் இஸ்லாமியப் பிரச்சாரம் தேக்கநிலை அடைந்தமையும் குறைஷியரின் எதிர்ப்பு நடவடிக்கைகள் அதிகரித்தமையும்.
3. ஒரு முன்மாதிரியான இஸ்லாமிய சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு உகந்த சூழல் மக்காவில் காணப்படாமை. அதிகார வர்க்கத்தினரும் பழமைவாதிகளும் இதற்குப் பெரும் தடையாக அமைந்தமை.
4. சிலை வணக்கத்தையும் தமது மூடப் பழக்கவழக்கங்களையும் பாதுகாப்பதன் மூலம் குறைஷிக் காபிர்கள் தமது அரசியல், சமூக, பொருளாதார தனித்துவத்தைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சித்தமை.
5. அகபா உடன்படிக்கை மூலம் முஸ்லிம்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்தமையும் இஸ்லாமிய தஃவாவுக்காக ஒரு பொருத்தமான தளமாக மதீனா அடையாளம் காணப்பட்டமையும்.

மதீனாவில் ஹிஜ்றத் சாத்தியமடைவதற்கான காரணிகள் 

1. மதீனா மக்கள் அறிவில் ஆர்வமுடையோராகவும் எளிதில் புரிந்துகொள்வோராகவும் நியாயமானவர்களாகவும் இருந்தமை.
2. மக்கா வாசிகளை விட மதீனா வாசிகள் கலாசார முன்னேற்றம் கொண்டவர்களாக இருந்தமை.
3.. மதீனாவில் யூத, கிறிஸ்தவர்கள் வாழ்ந்ததால் நபித்துவம் பற்றிய ஓரளவு அறிமுகமும் முன்னைய வேதங்கள் பற்றிய அறிவும் இருந்தமை. இதனால் இஸ்லாத்தை எடுத்துரைப்பது ஓரளவு இலகுவாக இருந்தமை.
4. மதீனாவில் நீண்டகாலமாக மோதிக்கொண்டிருந்த அவ்ஸ், கஸ்றத் கோத்திரத்தினரிடையே சமாதனாத்தை ஏற்படுத்திவைக்கக்கூடிய ஒரு சமாதானத் தூதுவர் தேவைப்பபட்டமை.
5. மக்காவின் தலைமைத்துவத்துக்கு ஈடாக அல்லது அதனை விட மேலான ஒரு தலைமைத்துவம் தம்மிடையே உருவாக வேண்டும் என மதீனாவாசிகள் விரும்பியமை.
6. மதீனாவுடனான இரத்த உறவு நபி (ஸல்) அவர்களுக்கு இருந்தமை. ஹாசிம் கஸ்றஜ் கோத்திரத்தில மணம் செய்திருந்தமை.

ஹிஜ்றத் ஒரு திட்டமிட்ட பயணம்

ஹிஜ்றத் என்பது நபி (ஸல்) அவர்கள் தனது உயிரைக் காத்துக்கொள்வதற்காக தப்பியோடிய ஒரு திடீர் முயற்சி அல்ல. அது நீண்டகாலமாகத் திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்ட ஒரு விவேகமான செயற்பாடாகும். இதற்கு சான்றாக பல்வேறு விடயங்களை முன்வைக்க முடியும்.
ஒரு முழுமையான சமூதயா அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு பல இடங்களை நபியவர்கள் தேடியமையும் இறுதியில் மதீனாவை அதற்காகத் தெரிவு செய்தமையும்.
மதீனாவுக்குச் செல்ல முன்னர் அங்கிருந்து வந்தவர்களோடு (அகபா) உடன்படிக்கைகளைச் செய்துகொண்டதோடு முஸ்அப் இப்னு உமைர் (ரழி) அவர்களை இஸ்லாமியப் பிரச்சாரத்துக்காக அனுப்பி வைத்தமை. இது மதீனாவில் ஒரு சாதகமான ஒரு சூழலை ஏற்படுத்தும் முன்னேற்பாடாக அமைந்தது.
ஹிஜ்றத் செய்வதற்கு அல்லாஹ்வின் கட்டளை வரும் வரை நபி (ஸல்) காத்திருந்தமை.
ஹிஜ்றத்துக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் ஏற்பாடு செய்யுமாறு அபூ பக்ர் (ரழி)அவர்களுக்கு நபியர்கள் பொறுப்பு அளித்தமை.
குறைஷிக் காபிர்களின் அடைக்கலப் பொருட்களை ஒப்படைப்பதற்கு அலி(ரழி)அவர்களை நியமித்தமை.
அப்துல்லாஹ் பின் அர்கத் எனும் முஸ்லிம் அல்லாத ஒரு தேர்ச்சி பெற்ற ஒருவரை வழிகாட்டியாக ஹிஜ்றத்தின் போது நியமித்தமை.
குறைஷியருடைய நடவடிக்கைகளை அறியவும் உணவைப் பெற்றுக்கொள்ளவும் ஏற்கனவே ஏற்பாடு செய்தமை. (அஸ்மா (ரழி))
உணவு கொண்டுவருவோரின் பாதச் சுவடுகளை அழிப்பதற்கான ஆமிர் பின் ஸுஹைரா எனும் இடையரை நியமித்தமை.
நேரடியாக மதீனாவுக்குச் செல்லாமல் ஸவ்ர் குகையில் தங்கிவிட்டுச் சென்றமையும் புதியதொரு பாதையில் சென்றமையும்.

ஹிஜ்றத்தின் முக்கியத்துவம் 

1. இஸ்லாமிய சட்டங்கள், வழிபாடுகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன.
அதான், கிப்லா மாற்றம்
ஜமாஅத், ஜும்ஆ தொழுகைகள்
ரமழான், நோன்பு, ஸகாத், ஹஜ்...
2. இஸ்லாமிய தஃவா முறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன.
வேதக்காரர்களை நோக்கி பிரச்சாரம் பலமாக முன்னெடுக்கப்பட்டது.
3. சமுதாய அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டமை.
அவ்ஸ், கஸ்றஜ் உறவு, முஹாஜிர், அன்ஸார் பிணைப்பு,
        வேதக்காரருடனான உறவு
4. இஸ்லாமிய அரசு ஒன்று உருவாக்கப்படல்.
        நபி (ஸல்) அவர்கள் ஆன்மீகத் தலைவராக மட்டுமன்றி அரசியல்    
        தலைவராகவும் மாறி மதீனாவைத் தலைநகராகக் கொண்டு
       ஆட்சிசெய்யும் நிலை தோன்றியது. குர்ஆன், ஸுன்னா அரசயில் யாப்பாக  
        மாற்றப்படுகின்றது.
5. குர்ஆன் எதிர்பார்க்கும் முன்மாதிரியான முஸ்லிம் உம்மத்
        உருவாக்கப்பட்டல் .
6. முஸ்லிம்களுக்கிருந்த கெடுபிடிகள், அச்சுறுத்தல்கள் நீங்கி சுதந்திரமாக
        இஸ்லாத்தைப் பின்பற்றச் சந்தர்ப்பம் கிடைத்தல்.


ஹிஜ்றத் உணர்த்தும் படிப்பினைகள் 
1. நபி  (ஸல்) தன்னிகரற்ற தலைமைத்துவம் ஹிஜ்றத்தில்
        வெளிப்படுகின்றது.  பொருத்தமான சந்தர்ப்பத்தில் பொருத்தமான முடிவு
        எடுத்தல்.
2. சில விடயங்களை இரகசியமாகவும் இராஜதந்திரமாகவும் நடத்தல்.
        தனது ஹிஜ்றத்தை நபியவர்கள் இறுதிவரை இரகசியமாக
        வைத்திருந்தமை.
3. ஏதிரிகளிடம் இருந்து தப்புவதற்காக பல்வேறு தந்திரோபாயங்களை
        மேற்கொள்ளல்.  ஸவ்ர் குகையில தங்குதல், பாதையை மாற்றுதல்.
4. ஸஹாபாக்களின் ஈடிணையற்ற தியாகத்தை இது பறைசாற்றுகின்றது.
        அலீ (ரழி)அபூ பக்ர் (ரழி)
5. திட்டமிடல் என்பது இஸ்லாத்தில் இன்றியமையாதது. இதனை நபி (ஸல்)
        அவர்கள் தனது வாழ்வில் எப்போது கடைப்பிடித்துள்ளார்கள்.
6. அல்லாஹ் மீது உண்மையான தவக்குல் வைத்தல். ஸவ்ர் குகை சம்பவம்.
7. இஸ்லாமிய தஃவாவில் பெண்களின் பங்களிப்பு (அஸ்மா(ரழி))

பத்ர் யுத்தம்



பத்ர் யுத்தம் 

முஸ்லிம்களுக்கும் குறைஷிக் காபிர்களுக்கும் ஹிஜ்றி இரண்டாம் ஆண்டில் ரமழான் 17ம் நாள் நடந்த முதல் போரே பத்ர் யுத்தமாகும். நபி (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட முதல் போராகவும் இது (غزوة ) அமைந்தது. நபி (ஸல்)  அவர்கள் பிரதானமாக 11 யுத்தங்களிலும் மொத்தமாக 26 யுத்தங்களிலும் கலந்துகொண்டுள்ளார்கள்.

யுத்தத்துக்கான காரணிகள் 
• முஸ்லிம்களை வலுக்கட்டாயப்படுத்தியேனும் போருக்குள் நுழைவிப்பதற்கு குறைஷியர் மேற்கொண்ட நடவடிக்கைகள்
     உம்றா செய்ய வருவோரை இம்சித்தல்.
     தோட்டங்களுக்குத் தீ மூட்டல்
     மந்தைகளைக் கொள்ளையடித்தல்.
     மதீனாவில் இருந்த முனாபிக்களைத் தூண்டி முஸ்லிம்களை அங்கிருந்து  
    வெளியேற்ற முயற்சித்தல்
.
மதீனாவுக்குச் சென்ற பிறகும் முஸ்லிம்களை நிம்மதியாக வாழ விடுவதற்கு குறைஷிக் காபிர்கள் விரும்பாமை. (கொலைசெய்தல், இம்சித்தல், சொத்துக்களை அபகரித்தல்) இதனால் எதிர்ப்புணவர்வுகள் வலுப்பெற்றன.

நபி (ஸல்) அவர்களை எப்படியேனும் பலிதீர்க்க வேண்டும் என்ற வெறி குறைஷியரிடம் புரையோடிப்போய்க் கிடந்தமை.

முஸ்லிம்களின் கடவுள் கொள்கை குறைஷியரின் கடவுள் கொள்கையை மிகைத்துவிடும் என்ற பயம் குறைஷியரிடம் இருந்தமை.

குறைஷித் தலைவர்கள் தமது அதிகாரத்தை இழந்துவந்தமை. (அபூ ஸுப்யான், வலீத் பின் முகீரா)

இஸ்லாத்தின் துரிதமாக எழுச்சி கண்டமையும் அது பரவியமையும் காபிர்களிடையே காழ்ப்புணர்வை ஏற்படுத்தியது.
மக்காவின் செல்வாக்கு குறைவடைந்து மதீனாவின் செல்வாக்கும் முக்கியத்துவமும் அதிகரித்தமை.
மதீனாவில் நபி (ஸல்)  அவர்கள் தொடர்ந்து நிலைகொண்டால் மதீனா ஊடாக சிரியா நோக்கிச் செல்லும் மக்கா வியாபாரிகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என காபிர்கள் அஞ்சியமை.
நபி (ஸல்)  அவர்கள் தமது ஆதரவாளர்களுடன் படைதிரட்டி வந்து மக்காவைத் தாக்கலாம் என குறைஷிக் காபிர்கள் கருதியமை.
நபி (ஸல்) அவர்களின் கண்காணிக்குழுவினரின் (ஸரிய்யா) நடவடிக்கைகள்.

இவ்வாறான ஸரிய்யாக்கள் (சிறு படைப்பிரிவுகள்) மக்கா-சிரியா இடையே வியாபாரம் செய்த கள்வர் கோஷ்டிகளை இடைமறித்து அவர்களது பொருட்களைக் கைப்பற்றினர்.
இது குறைஷிக் காபிர்களை எச்சரிப்பதற்காகவும் முஸ்லிம்களைப் பற்றிய பலத்தை மதீனா வாசிகளுக்கு உணர்த்தவுமாய் அமைந்தது.

மக்கா – மதீனா எல்லைப் பகுதியில் நக்லா எனும் இடத்தில் அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் தலைமையில் 12 பேர் இதில் ஈடுபடுத்தப்படல். கண்காணிப்புக்காக மாத்திரம் அனுப்பப்பட்ட இக்குழுவினர் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மோதலில் உமர் பின் ஹழ்றமி தலைமையிலான படையினரைத் தாக்கப்பட்டு உமர் பின் ஹழ்ரமி என்ற முஷ்ரிக் கொலைசெய்துவிடல். ரஜப் மாதத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் குறைஷியரின் வெறி உணர்வைத் தூண்டக் காரணமாய் அமைந்தது. எனவே குறைஷியர் போர் ஆயத்தங்களில் ஈடுபட்டனர்.

உடனடிக்காரணமும் முஸ்லிம்களின் ஆயத்தமும்.
ஷாமிலிருந்து மக்கா நோக்கிச் சென்று கொண்டிருந்த அபூ ஸுப்யானின் வர்த்தகக் குழு வழிமறிக்குமாறு நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களைப் பணித்தார்கள். குறைஷியரைப் பயமுறுத்தவே அன்றி யுத்தம் செய்யும் நோக்கில் இதனை நபியவர்கள் செய்யவில்லை. அபூ ஸுப்யான் பாதுகாப்புக் கோரி மக்காவுக்குத் தூதனுப்ப இச் செய்தி மிகைப்படுத்தப்பட்டு மக்காவில் பரவியது. அத்துடன் அபூ ஸுப்யானின் குழுவும் தப்பிச் சென்றுவிட்டது. இதன் பின்னர் அபூ ஜஹ்ல் தலைமையில் குறைஷிக் காபிர்கள் முஸ்லிம்களை எதிர்க்க பத்ர் எனும் இடத்தில் தங்கினர். இதனால் முஸ்லிம்கள் இப்படையை எதிர்கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது.

நபி (ஸல்) அவர்கள் இந்த யுத்தத்தில் ஈடுபடுவது குறித்து அன்ஸார்களின் கருத்தையே அதிகம் எதிர்பார்த்தார்கள். அவர்கள் முழுமையாக ஜிஹாத் புரிய ஒத்துழைக்க முன்வந்தார்கள்.

பத்ரில் முகாமிடுவதில் நபி (ஸல்) அவர்கள் ஹப்பாப் இப்னுல் முன்திரின் (ஸல்) ஆலோசனையை ஏற்றார்கள்.

ஸஃத் பின் முஆத் (ரழி) நபி (ஸல்)  அவர்களுக்கு பின்வரிசையில் ஒரு பல்லாக்கு அமைக்கப்படவேண்டும் என்று ஆலோசனை கூறினார்கள்.

பத்ர் களமும் ஆள், ஆயுதப் பலமும்

முஸ்லிம்கள்
மொத்தம்: 313 பேர் (207 அன்ஸாரிகள்)
கவசங்கள் : 06
குதிரை வீரர்கள் : 03, குதிரைகள்: 02
ஒட்டகைகள்: 70

குறைஷிக் காபிர்கள்
மொத்தம்: 1000 பேர்
கவசம் அணிந்தோர்: 600 பேர்
குதிரை வீரர்கள் : 100 பேர்
ஒட்டகைகள்: 700

முஸ்லிம்களின் வெற்றிக்கான காரணிகள் 
நபி (ஸல்) அவர்களின் சிறந்த வழிகாட்டலும் தலைமைத்துவமும்.
ஜிஹாத் பற்றிய இஸ்லாத்தின் போதனைகள்
உறுதியான ஈமான்.
       ஈமானோடு போரிடுவோருக்கு நிச்சயம் அல்லாஹ்வின் உதவி கிட்டும்  
       என்ற நம்பிக்கை.
       நீங்கள் அவர்களைக் கொல்லவில்லை. மாறாக அல்லாஹ்வே  
       அவர்களைக் கொன்றான். (குர்ஆன்)
எதிரிகளின் பலவீனம்

பத்ர் வெற்றியின் விளைவுகள் 
மதீனாவில் இஸ்லாமிய ஆட்சி ஸ்திரம் அடைந்தமை.
முஹம்மத் (ஸல்) அவர்களின் தலைமைத்துவம் அங்கீகரிக்கப்படல்.
குறைஷியர் மீதமிருந்த கண்ணியம், செல்வாக்கையும் இழக்க நேரிடல்.
முஸ்லிம்களைப் பற்றிய அச்சம் எதிரிகளுக்கு ஏற்பட்டமை.
தொடர்ந்து வந்த வெற்றிகளுக்கும் இது அடிப்படையாக அமைந்தமை.
யுத்த ஒழுக்கங்கள், கனீமத் சட்டங்கள் போன்றவை பற்றிய தெளிவு
        ஏற்படல்.
அல்லாஹ் எப்போதும் முஸ்லிம்களுடன் இருப்பான் என்ற அசைக்க
        முடியாத நம்பிக்கை அவர்களிடம் ஏற்பட்டது.

பத்ர் வெற்றியின் முக்கியத்துவம் 
காபிர்களுக்கு எதிரான முதல் போராட்டமும் முதல் வெற்றியும்.
சத்தியத்துக்கும் அசத்தியத்துக்கும் இடையில் நிகழ்ந்த போhரட்டம்.
        இத்தினத்தை குர்ஆன் யவ்முல் புர்கான் يوم الفرقانஎன அழைக்கின்றது.
இஸ்லாத்தின் எதிர்காலத்தைத் தீர்மானித்த போராட்டம்

பத்ரில் கள உயிரிழப்புக்கள்  
அபூ ஜஹ்ல், வலீத், உத்பா, ஸய்பா, வலீத் போன்ற தலைவர்கள் உட்பட 70
       இற்கும் அதிகமான காபிர்கள்.
முஸ்லிம்களில் 16 பேர் ஷஹீத் ஆயினர்.

மக்கா வெற்றி



மக்கா வெற்றி
மக்கா மீது முஸ்லிம்கள் படையெடுத்ததற்கான காரணியும் பின்னணியும்

முஸ்லிம்களோடு பாதுகாப்பு ஒப்பந்தம் செய்திருந்த பனூ குஸாஆக்களை குறைசிக் காபிர்களும் பனூ பக்ர் கூட்டத்தினரும் தாக்கி 20 பேரைக் கொலை செய்ததன் மூலம் ஹுதைபிய்யா உடன்படிக்கையை குறைசிக் காபிர்கள் மீறினர்.  இதன் பின்னர் நபி (ஸல்) அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளைப் புறக்கணித்து தாமாகவே உடன்படிக்கையிலிருந்து வெளியேற முன்வந்தமை.

இவ்வுடன்படிக்கை மீறப்பட்டதன் பின்னர் அபூ ஸுப்யான் குறைஷியர் சார்பாக நபி (ஸல்) அவர்களுடன் சமாதானம் பேசுவதற்காக வந்தார். ஆயினும் நபி(ஸல்)  அவர்கள் எந்தவொன்றும் அவருடன் பேசவில்லை. பின்னர் அபூபக்ர் (ரழி)  உமர் (ரழி), அலி (ரழி)  ஆகியோரை அனுகியும் எதுவும் பயனளிக்கவில்லை.

பின்னர் நபி (ஸல்)  அவர்கள் மிக இரகசியமான முறையில் திடீரென தம் படையினருடன் மக்கா நுழையத் திட்டமிட்டார்கள். இச் செய்தியை மக்காவில் இருந்த தம் உறவினர் நலன் கருதி ஹாதிம் இப்னு அபீ பல்தா ஒரு பெண் ஊடாக இந்த இரகசியத்தை எழுதித் தூதாக அனுப்பி வைத்தார். இது வஹி மூலம் நபி (ஸல்)  அவர்களுக்கு உணர்த்தப்பட்டு அது தடுத்து நிறுத்தப்பட்டது. ஹாதிமுக்கு பத்ரில் கலந்து கொண்ட ஒரே காரணத்துக்காக மன்னிப்பு வழங்கப்பட்டது.

பின் திட்டமிட்டபடி நபி (ஸல்) அவர்கள் 10 000 பேருடன் மக்கா நோக்கிப் படையெடுத்துச் சென்றார்கள். இச்சந்தர்ப்பத்தில் அபூ ஸுப்யான் (ஸல்)இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். பின் நபி(ஸல்) அவர்கள் அபூ ஸுப்யானின் வீட்டிலோ அல்லது தத்தமது வீடுகளிலோ அல்லது கஃபாவிலோ தஞ்சம் புகுந்தவர்கள் பாதுகாப்புப் பெற்றுவிட்டார் எனப் பிரகடனம் செய்தார்கள். இப்பிரகடனத்தை அபூ ஸுப்யான் (ரழி) குறைசியரிடம் போய் அறிவித்தார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் மக்காவில் நுழைந்தார்கள். எவரும் எதிர்த்துப் போராட முன்வராததால் இரத்தம் சிந்தாமலேயே மக்கா முஸ்லிம்களால் வெற்றி கொள்ளப்பட்டது. பின் கஃபாவில் இருந்த சிலைகளை நபி(ஸல்) அவர்கள் உடைத்தெரிந்தார்கள். பிலால் (ரழி) அவர்கள் தொழுகைக்காக அதான் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கினார்கள். அப்துல் உஸ்ஸா, இக்ரிமா பின் அபீ ஜஹ்ல் போன்ற ஒரு சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

முஸ்லிம்கள் படையைக் குறைசியர் எதிர்கொண்ட விதம் 
குறைசியர் தம் நகர எல்லையில் முஸ்லிம் வீரர்களை எதிர்பாராத விதமாக எதிர்கொண்டமை.
இந் நிலையில் முஸ்லிம்களோடு போரிடுகின்ற சக்தி குறைசியரின் காணப்படாமை.
இக்ரிமா. ஸப்வான், ஸுஹைல் தலைமையிலான குறைசியரின் எதிர்ப்புக்களும் காலித் பின் வலீத் (ரழி) தலைமையிலான முஸ்லிம் படை தாக்கப்பட்டமையும்.

மக்கா வெற்றியின் பின்னர் குறைசிகளை நபி (ஸல்) அவர்கள் எதிர்கொண்ட விதம்
தம் சகோதரர்களாக மதித்து அவர்களை விடுதலை செய்தமை

கடும் எதிரிகள் சிலருக்கு மரண தண்டனை வழங்கியமை. அவர்களில் சிலருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டமை.

ஹிஜ்றத்தின் போது விட்டுச் சென்ற பின் பெற்றுக்கொண்ட மக்காவாசிகளின் சொத்துக்களை மீளப் பெறாமை.

மக்கா வெற்றியின் விளைவுகள்
கஃபா சிலைவணக்கத்திலிருந்தும் தூய்மையாக்கப்பட்டமை. தௌஹீத் கோட்பாடு நிலைபெற்றமை.

மக்காவாசிகள் பலரும் மக்காவைச் சூழவிருந்த பல கோத்திரங்களும் இஸ்லாத்தை ஏற்றமை.

ஹுனைன் கோத்திரத்தை வெற்றி கொள்ள வாய்ப்புக் கிடைத்தமை

அறேபியர் நபி(ஸல்) தலைமையில் ஐக்கியப்பட்டமை.

ஹஜ்ஜதுல் விதாஃ



ஹஜ்ஜதுல் விதாஃ

இது ஹி 10 இல் தனது முதலும் இறுதியுமான ஹஜ்ஜின் போது அறபா மைதானத்தில் நிகழ்த்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையாகும்.
இவ்வுரையில் முக்கியமாக பின்வரும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

1. அல்லாஹ்வுக்கு மாத்திரமே அடிமையாக வாழ்தல்
மனிதன் மனிதனையோ அல்லது ஏனைய வஸ்துக்களையோ வணங்கும் இழிநிலையிலிருந்து நீங்க வேண்டும்.
2. மனித சமத்துவம்
அறபி, அஜமியை விடவோ அஜமி அறபியை விடவோ மேலானவர் அல்லர்.
அனைவரும் ஆதமின் பிள்ளைகள். ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவர்.
3. அடிமைகளை கண்ணியமாக நடத்தல்
அடிமைத்துவத்தைப் படிப்படியாக ஒழிக்கவேண்டும். அவ் வகையில் உணவு, உடை என்பவற்றையெல்லாம் அவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும்.
4. பழிக்குப் பழி கிடையாது.
பழைய கொலைகளுக்காகப் பழி வாங்கும் உரிமை யாருக்கும் இல்லை என்று பிரகடனப்படுத்தியமை. ரபீஆ பின் ஹர்ஸின் மகனின் இரத்தப் பழியை ரத்துச் செய்தமை.
5. வட்டி ரத்துச் செய்யப்பட்டமை.
வறிய மக்களின் இரத்தத்தை உறிஞ்சக் கூடாது. இவ்வகையில அப்பாஸ் இன் வட்டியை முதலில் ரத்துச் செய்தமை.
6. பெண்கள் உரிமை வலியுறுத்தப்படல்.
உங்கள் மீது அவர்களுக்கும் அவர்கள் மீது உங்களுக்கும் உரிமை உண்டு என பெண் உரிமைகளை உறுதி செய்தமை.
7. முஸ்லிம்களின் உயிர், உடமை, மானம் பாதுகாக்கப்படவேண்டும்.
இந்த நாள், மாதம், இடம் எவ்வளவு கண்ணியமோ அதே போன்று முஸ்லிமின் உயிர், உடமை, மானம் பாதுகாக்கப்பட வேண்டும்.
8. குர்ஆன், ஸுன்னாவைப் பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டமை.
உங்களிடம் இரு வியடங்களை விட்டுச் செல்கின்றேன். அவற்றைப் பற்றிப் பிடித்துக்கொள்ளும் வரை நீங்கள் வழிதவற மாட்டீர்கள் என குர்ஆனையும் ஸுன்னாவையும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டமை.
9. இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்யுமாறு பணித்தமை.
இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு இச் செய்தியை எடுத்துரைக்க வேண்டும் என்றும் அவர்கள் வந்தவர்களை விட அதிகம் உணர்ச்சிபெறக் கூடியவர்களாக இருக்கலாம் என்றும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டமை.

கவிதை எழுதுங்கள் ..


கவிதை எழுதுங்கள் ..

ஹிஷாம் றாஸிக்


கவிதை எழுதுங்கள்
எல்லோருக்கும் புரியும்படி
எளிமையாய் எழுதுங்கள்.

கவிதை எழுதுங்கள்
காதல் ஒன்றையே
கருப்பொருளாக்காதீர்கள்.

கவிதை எழுதுங்கள்.
முதுகெலும்பற்ற தலைமைகளுக்கு
முதுகு சொறியாதீர்கள்.

கவிதை எழுதுங்கள்
உண்மையைப் பொய்யாக்கி
பொய்களை மெய்யாக்காதீர்கள்

கவிதை எழுதுங்கள்
திரைபோட்ட ரகசியங்களை
திரைகிழித்துக் காட்டாதீர்கள்.

நிலவும் பெண்ணும் தாம்
கவிதையின் ஊற்றுக்கள் அல்ல.

கற்பனையும் பொய்களும் தாம்
கவிதைக்கு அணிகலன்கள் அல்ல.

இலக்கணம் மட்டும் தான்
கவிதைக்கு வரம்பு அல்ல.

கவிதை எழுதுங்கள்.

இக்பாலின் கவிதைகள்
பாகிஸ்தானை உருவாக்கியதே.

ஹஸ்ஸானின் கவிதைகள்
அண்ணலுக்காய் சவால் விட்டதே.

அலீ சொன்ன கவிதைகள்
அழியாமல் வழிகாட்டுதே.

கவிதை எழுதுங்கள்



கவிதையால் ...
பூக்களையும் முகர முடியும்
போர்களையும் ஜெயிக்க முடியும்.

கவிதையால் அழிந்த சமூகமும் உண்டு
கவிதையே வரலாறான தேசமும் உண்டு

கவிதையால் எழுந்த நாகரிகமும் உண்டு
கவிதைக்குள் சமாதியான சரித்திரமும் உண்டு

கவிதை எழுதுங்கள்

உங்கள் கவிவரிகள்
உரமாகட்டும் நம் எழுச்சிக்கு.
உயிராகட்டும் நம் மாற்றத்துக்கு.
வரமாகட்டும் இளம் சந்ததிக்கு.
வளமாகட்டும் நம் இலக்கியத்துக்கு.

உங்கள் கவிவரிகள் ஒவ்வொன்றும்
ஒவ்வொரு துப்பாக்கி ரவைகள்.
வெறும் விட்டில்களை இலக்குவைத்து
வீணாக்கி விடாதீர்கள்.

நம்மவரின் அவலங்களை
நாம் வேண்டும் மாற்றங்களை
நாம் வந்த பாதைகளை
நயமாக எழுதிவைப்போம்.


Monday, March 5, 2012

Question on Quran (Tamil)

Q1) குர்ஆன் என்பதற்கு என்ன பொருள்?
A) ஓதுதல்! (that which is recited; or that which is dictated in memory form)
Q2) குர்ஆன் யாரால் அருளப்பட்டது?
A) அகிலங்கள் அனைத்தையும் படைத்த அல்லாஹ்வால் அருளப்பட்டது
Q3) குர்ஆன் எந்த இரவில் அருளப்பட்டது?
A) லைலத்துல் கத்ர் இரவில்
Q4) குர்ஆன் யார் மூலமாக அருளப்பட்டது
A) கண்ணியமிக்க வானவர் ஜிப்ரயீல் (அலை) அவர்களின் மூலமாக.
Q5) குர்ஆன் எந்த தூதருக்கு அருளப்பட்டது?
A) இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு.
Q6) முதன் முதலாக குர்ஆன் எந்த இடத்தில் வைத்து அருளப்பட்டது?
A) மக்காவிலுள்ள ஹிரா குகையில் அருளப்பட்டது
Q7) எந்த கலிபாவின் ஆட்சிக் காலத்தில் குர்ஆன் எழுத்து வடிவில் தொகுக்கப்பட்டது?
A) அபூபக்கர் (ரலி) அவர்களின்ஆட்சிக்காலத்தில்
Q8) எந்த கலிபாவின் ஆட்சிக் காலத்தில் குர்ஆன் முதன் முதலாக பிரதியெடுக்கப்பட்டது?
A) உதுமான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்.
Q9) கலிபா உதுமான் அவர்களின் காலத்தில் பிரதியெடுக்கப்பட்ட குர்ஆன் தற்போது எங்கிருக்கிறது?
A) ஒன்று தாஸ்கண்டிலும், மற்றொன்று துர்கியின் இஸ்தான்புல் அருங்காட்சியகத்தில் உள்ளது.
Q10) அல்லாஹ்விடத்தில் உயர்ந்த அந்தஸ்து உடையவர்கள் யார் என குர்ஆன் கூறுகிறது?
A) தக்வா (இறையச்சம்) உடையவர்கள்
Q11) குர்ஆனில் மிகப்பெரிய அத்தியாயம் எது?
A) சூரத்துல் பகரா (இரண்டாவது அத்தியாயம்)
Q13) குர்ஆனில் மிகச் சிறிய அத்தியாயம் எது?
A) சூரத்துல் கவ்ஸர் (108 வது அத்தியாயம்)
Q14) குர்ஆனை பாதுகாப்பது யார் பொறுப்பில் உள்ளது?
A) அதை இறக்கிய இறைவனே அதன் பாதுகாவலன் ஆவான்.
Q15) நபி (ஸல்) அவர்களின் எத்தனையாவது வயதில் முதன் முதலாக குர்ஆன் அருளப்பட்டது?
A) 40 ஆவது வயதில்
Q16) குர்ஆனுக்கு இருக்கும் மற்ற பெயர்களில் சிலவற்றைக் கூறுக:
A) அல்-ஃபுர்கான், அல்-கிதாப், அத்-திக்ர், அல்-நூர், அல்-ஹூதா
Q17) இறைவன் நம்மோடு இருக்கிறான் என கூறிய நபி யார்?
A) முஹம்மது (ஸல்) அத் தவ்பா(9:40)
Q18) ஜின்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியுமா?
A) ஜின்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியாது. அஸ் ஸபா(34:14) மற்றும் அல் ஜின்னு(72:10)
Q19) குர்ஆனில் மூன்றில் ஒரு பகுதி என சிறப்பித்துக் கூறப்பட்ட சூரா எது?
A) சூரத்துல் இக்லாஸ் (112 வது அத்தியாயம்)
Q20) குர்ஆனில் எத்தனை அத்தியாயங்கள் இருக்கிறது?
A) 114 அத்தியாயங்கள்
Q21) நபி முஸா (அலை) அவர்களோடு இறைவன் பேசிய பள்ளத்தாக்கின் பெயர் என்ன?
A) துவா பள்ளத்தாக்கு. அந் நாஜிஆத்(79:16), தாஹா(20:12). இது தூர் மலையின் அடிவாரத்தில் உள்ளது. (19:52)
Q22) அல்-குர்ஆனை மனனம் செய்த முதல் மனிதர் யார்?
A) முஹம்மது நபி (ஸல்) அவர்கள்
Q23) நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் குர்ஆனில் எத்தனை முறை இடம் பெற்றுள்ளது?
A) முஹம்மது (ஸல்) என நான்கு முறையும், அஹ்மது என ஒரு முறையும் இடம் பெற்றுள்ளது.
Q24) இறைவனை வணங்குவதற்காக கட்டப்பட்ட முதல் இறையில்லம் எது என குர்ஆன் கூறுகிறது?
A) கஃபா
Q25) எதிர்கால சந்ததியினருக்கு அத்தாட்சியாக விட்டு வைக்கப்பட்டுள்ளவற்றில் இரண்டைக் கூறுக:
A) நூஹ் (அலை) அவர்களின் கப்பல் (54:15), மற்றும் பிர்அவ்னின் உடல் (10:92)
Q26) நூஹ் நபியின் கப்பல் எங்கு ஒதுங்கியது என குர்ஆன் கூறுகிறது?
A) ஜூதி மலையில் (11:44 )
Q27) குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே ஒரு ஸஹாபியின் பெயர் என்ன?
A) ஜைத் பின் ஹாரித் (ரலி) அஹ்ஜாப் (33:37)
Q28) ஷைத்தான் எந்த இனத்தைச் சேர்ந்தவன் என குர்ஆன் குறிப்பிடுகிறது?
A) ஜின் இனம்
Q29) இஸ்ராயிலின் வழித்தோன்றல்களுக்கு கடமையாக்கப்பட்ட வணக்கங்கள் என குர்ஆன் குறிப்பிடுபவை எவைகளை?
A) தொழுகை மற்றும் ஜக்காத்
Q30) ‘பிஸ்மில்லாஹ்’ கூறி ஆரம்பம் செய்யப்படாத சூரா எது?
A) சூரத்துத் தவ்பா
Q31) ‘பிஸ்மில்லாஹ்’ இரண்டு முறை வரும் சூரா எது?
A) சூரத்துந் நம்ல் -எறும்புகள் (27:30)
Q32) குர்ஆன் முழுவதுவதுமாக இறக்கியருளப்பட எத்தனை வருடங்கள் ஆனது?
A) 23 வருடங்கள்
Q33) தொழுகையில் அவசியம் ஓதப்பட வேண்டிய சூரா எது?
A) அல்-பாத்திஹா
Q34) துஆ (பிரார்த்தனை) என குறிப்பிடப்படும் சூரா எது?
A) அல்-பாத்திஹா
Q35) திருமறையின் தோற்றுவாய் என குறிப்பிடப்படும் சூரா எது?
A) அல்-பாத்திஹா
Q36) குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்ட ஒரே ஒரு பெண்மணி யார்?
A) மர்யம் (அலை)
Q37) நபிமார்களின் பெயரால் எத்தனை சூராக்கள் இருக்கின்றன?
A) 6 சூராக்கள் (யூனுஸ், ஹூத், யூசுப், இப்ராஹீம், நூஹ், முஹம்மது (ஸல்))
Q38) ஆயத்துல் குர்ஸி குர்ஆனில் எந்த பாகத்தில், சூராவில் உள்ளது?
A) மூன்றாவாது பாகத்தின் ஆரம்பத்தில், இரண்டாவது அத்தியாயத்தின் 255 ஆவது வசனம்.
Q39) அல்-குர்ஆனில் இறைவனின் திருநாமங்களாக எத்தனை பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது?
A) 99 பெயர்கள்
Q40) மதினா வேறெந்த பெயரில் குர்ஆனில் குறிப்பிடப்படுகிறது?
A) யத்ரிப் (33:13)
Q41) பனி இஸ்ராயில் என யாரை குர்ஆன் குறிப்பிடுகிறது?
A) யாகூப் (அலை) அவர்களின் சந்ததியினர்களை
Q42) ஈமான் கொணடவர்களுக்கு உதாரணமாக அல்லாஹ் தன் திருமறையில் கூறும் இரு பெணமணிகள் யாவர்?
A) பிர்அவ்னின் மனைவி (66:11), இம்ரானின் புதல்வி மர்யம் (அலை) (66:12)
Q43) காபிர்களுக்கு உதாரணமாக இறைவன் தன் திருமறையில் கூறும் இரு பெண்கள் யாவர்?
A) நூஹ் (அலை) அவாகளின் மனைவி (66:10), லூத் (அலை) அவர்களின் மனைவி (66:10)
அல்லாஹ் நூஹ் நபியின் மனைவியை காபிர் என்று கூறியிருக்க, நம்மவர்கள் திருமண துஆக்களில் நூஹ் நபியின் மனைவி போல் வாழ்க என்று வாழ்த்துகிறார்கள். நூஹ் நபிக்கு பாரிஸா என்று நல்ல மனைவியும் இருந்ததாக இதற்கு ஒரு கடடுக் கதையையும் கூறுகிறார்கள். இது குர்ஆனிலோ, ஹதீஸிலோ ஆதாரமில்லாத வெறும் யூதக் கடடுக்கதைகளாகும்.
Q44) உள்ளங்கள் எவ்வாறு அமைதி பெறுகிறது என அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்?
A) அல்லாஹ்வை நினைவு கூறுவதன் முலம் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன. (13:28)
Q45) நபி ஈஸா (அலை) அவாகள் செய்ததாக இறைவன் குறிப்பிடும் அற்புதங்கள் யாவை?
A) 1) குழந்தையில் பேசியது, 2) களிமண்ணினால் பறவையை செய்து, இறைவனின் அனுமதியைக் கொண்டு உயிர் கொடுத்தல், 3) பிறவிக் குருடனுக்குப் பார்வையளித்தல், 4) வெண்குஷ்ட ரோகியைக் குணப்படுத்துதல், 5) இறந்தவரை அல்லாஹ்வின் உத்தரவு கொண்டு உயிர் பெறச் செய்தல் (5:110), 6) பிறா உண்பதை வீடடில் உள்ளவற்றை பார்க்காமலே அறிவித்தல் (3:49)
Q46) சுவனத்தில் இருக்காது என்று இறைவன் குறிப்பிடுவது எவை?
A) 1) பசி, 2) நிர்வானம், 3) தாகம், 4) வெயில் (20:118,119)
Q47) வீரமுள்ள செயல் என குர்ஆன் எதைக் கூறுகிறது?
A) எவரேனும் (பிறர் செய்யும் தீங்கை) பொறுத்துக் கொண்டு மன்னித்து விடடால் அது மிக உறுதியான (வீரமுள்ள) செயலாகும். (42:43), (31:17), (3:186)
Q48) நபி முஸா (அலை) அவர்கள் கற்பாறையில் அடித்த போது எத்தனை நீர் ஊற்றுக்கள் பீறிட்டு எழுந்ததாக இறைவன் கூறுகிறான்?
A) பன்னிரணடு நீர் ஊற்றுகள் பீறிடடு எழுந்தது. (2:60) & (7:160)
Q49) தொழாதவர்களுக்காக இறைவன் சித்தப்படுத்தி வைத்திருப்பதாகக் கூறும் நரகத்தின் பெயர் என்ன?
A) ஸகர் என்ற நரகம். அல் முத்தஸ்ஸிர்(74:41,42,43)
Q50) இறைவன் என்னோடு இருக்கிறான் என்று கூறிய நபி யார்?
A) முஸா (அலை) அஷ் ஷுஃரா(26:62)

Monday, February 27, 2012

இஸ்லாத்தில் நேரத்தின் முக்கியத்துவம்

    அல்லாஹ் குர்ஆனில் பல இடங்களில் நேரத்தின் மீதும் காலத்தின் மீதும் சத்தியம் செய்துள்ளான்.
    வல் அஸ்;ர்
    வல் லைல்
    வந் நஹார்
    வழ் ழுஹா

    நேரத்தை வலியுறுத்தி பல ஹதீஸ்கள் வந்துள்ளன.
    யாருடைய நேற்று இன்றுபோல் இருக்கின்றதோ அவன் ஏமாளியாவான்..

    நேரத்தைத் திட்டமிட்டுப் பயன்படுத்துமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
    அறிவுடையவன் தன் நேரத்தை நான்கு பகுதிகளாக வகுத்துக்கொள்வான். ஒரு பகுதி நேரத்தில் தன் இரட்சகனை வணங்குவான். அடுத்த பகுதியில் தன்னை சுயவிசாரணை செய்வான். மூன்றாம் பகுதியில் அல்லாஹ்வின் படைப்புக்கள் பற்றி சிந்திப்பான். நான்காம் பகுதியில் தன் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வான். (ஹதீஸ்)

    இஸ்லாமியக் கடமைகள் பல நேரம் அல்லது காலம் வரையறுக்கப்பட்டதாகவே அமைந்துள்ளன.
    தொழுகை, நோன்பு, ஹஜ்..

    ஒருவன் தன் காலத்தை எப்படிக்கழித்தான் என்பது மறுமையில் கேட்கப்படும் முக்கிய கேள்வி

    உலகத்தில் திருப்பிப் பெறமுடியாத செல்வம், அருள் நேரம். இது ஒரு அமானிதம் ஆகும்.

    நேரத்தை வீணடித்தல் அல்லாஹ்வின் அருட்கொடையைப் புறக்கணித்தல் ஆகும்.

    நேரத்தின் முக்கியம் பற்றி பல இஸ்லாமிய அறிஞர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்
    நேரம் கூரிய வால் போன்றது. அதை நீ வெட்டாவிட்டால் அது உன்னை வெட்டிவிடும்.
        நேரத்தைவிடக் கடமைகள் அதிகமானது. (ஹஸன் அல்-பன்னா ரஹ்.)
    மனிதா நீ நாட்களால் உருவானவன். ஒவ்வொரு நாளும் கழியும் போது உன்னில் xரு பகுதி அழிந்துவிடுகின்றது. (ஹஸனுல் பஸரீ ரஹ்.)
    நான் ஒரு கூட்டத்தினரைச் சந்தித்தேன். அவர்கள் தங்கள் செல்வத்தில் காட்டும் அக்கரையை விட நேரத்தைப் பயன்படுத்துவதில் அக்கரை காட்டுகின்றார்கள். (ஹஸனுல் பஸரீ ரஹ்.)

    முஹாஸபா எனும் சுயவிசாரனையில் ஒருவர் தினமும் ஈடுபடுவதன் மூலம் நேரத்தைச் சிறப்பாகப் பயன்படுத்த இஸ்லாம் தூண்டுகின்றது.


Sunday, February 26, 2012

பரிணாமத்தின் அபத்தம்!

 எம்.ஆர். ஹிஷாம் முஹம்மத்

பரிணாமம் என்ற பெயரில்…

உலகில் வாழும் உயிரினங்கள் அனைத்தையும் அவற்றிற்குரிய சிறப்பான பண்புகளைக் கொடுத்து  மாபெரும் சக்தி கொண்டவனான அல்லாஹ் படைத்தான் என நாம் விசுவாசிக்கின்றோம். இது எமது விசுவாசம் மட்டுமல்ல. எமது பகுத்தறிவுக்கு உடன்பாடானதும் எமது இயல்புக்கு ஒத்ததுமான விடயமுமாகும். எம்மை அழகாகப் படைத்து  எம்மைச் சுற்றி உள்ள அனைத்தையும் எமக்கென வசப்படுத்தித் தந்த அந்த ஏக இறைவனை ஏற்றுள்ளோம். அவனுக்கு நன்றி செலுத்தி  வழிப்பட்டு நடப்பது எமது தலையாய பொறுப்பு எனவும் நாம் அறிகின்றௌம்.

     இது இவ்வாறிருக்க படைத்த இறைவனை விட்டும் மக்களை அந்நியப்படுத்தி அவர்களை வெறும் சுயநலமிகளாக மாற்றுவதற்காக திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு பயங்கரமான கொள்கையே கூர்ப்புக் கொள்கை ஆகும். ஆரம்பத்தில் எளிமையான அங்கிகள் தோன்றி பின்னர் அவை விகாரமடைந்து தற்போதுள்ள நிலையைப் பெற்றன என்றும் இச்செயற்பாடுகள் அனைத்தும் தாமாகவே எந்தவொரு சக்தியின் உதவியுமின்றி நடந்தேறின என்றும் இந்த வாதம் குறிப்பிடுகின்றது. இந்தக் கொள்கை நாம் விசுவாசிக்கும் அல்-குர்ஆன், அஸ்-ஸுன்னா என்பவற்றுக் முற்றிலும் முரணானது. அதுமட்டுமன்றி எமது பகுத்தறிவுக்கும் மாற்றமானது. ஆயினும் படைத்தல் கொள்கையை விட இந்தக் கூர்ப்புக் கொள்கைக்கே அதிக சான்றுகள் உள்ளன என்று கூறி இன்றைய வி(அ)ஞ்ஞானம் மக்களிடத்தல்  திணிக்க முற்படுகின்றது. இக் கொள்கைத் திணிப்பு எமது நாட்டில் உள்ள பாடத்திட்டத்தில்  கூட பெரும் பங்கு வகிக்கிறது. (உதாரணம்:  கூர்ப்பு- தரம் 11 விஞ்ஞானமும் தொழிநுட்பமும்) பாடப்புத்தகங்களில் இக் கூர்ப்புக் கொள்கையின் ஒரு பக்க வாதங்கள் மட்டுமே முன்வைக்கப்படுகின்றமைதான் இங்கு மிகவும் வருந்துதற்குரியது. எனவே இவற்றைப் படிக்கும் போது இக்கொள்கை பற்றிய நடுநிலையான கண்ணோட்டத்தை அறியாததால் அதன் போலித் தன்மையைப் புரியாததால் தம்மை அறியாமலேயே சிலபோது மாணவர்கள் இக்கொள்கையை உள்வாங்கிக்கொள்ள நேரிடும். அந்நியப் படைகளால் ஒரு சமூகம் ஆக்கிரமிக்கப்படுவதைவிட அபத்தமான சிந்தனைகளால் ஆக்கிரமிக்கப்படுவது மிகவும் கொடியது. ஏனெனில் அதிலிருந்து விடுபடுவது மிகவும் இலகுவான காரியம் அன்று. எனவே இப்படியான நச்சுக் கருத்துக்கள் எமது இளைய தலைமுறையில் ஆதிக்கம் செலுத்துவதை நாம் அனுமதிக்காமல் அவர்களது நம்பிக்கையை (அகீதா) பாதுகாப்பது ஒரு சமூகப் பொறுப்பாகும். அவர்களுக்குக் கூர்ப்புக் கொள்கையைச் சொல்லிக்கொடுப்பதில் தவறில்லை. ஆனால் அதனை நடுநிலையாக நின்று அதற்கான விமர்சனங்களையும் அல்-குர்ஆன், அஸ்-ஸுன்னா மற்றும் அறிவியல் ரீதியாக முன்வைத்து அதன் போலித்தன்மையை விளக்கவேண்டும். இதனை எமது பாடத் திட்டத்தினூடாக நுழைப்பது அசாத்தியமாயினும் அதற்கு வெளியே நின்று பல வழிகள் ஊடாக இதனைச் செய்ய முடியும். அப்படியான ஒரு சிறு முயற்சியே இக் கட்டுரை. இங்கு பரிணாம வாதத்துக்கான ஒரு சில மறுப்புக்கள் மாத்திரம் மிக எளிமையான முறையில் விளக்கப்படுகின்றது.

“கூர்ப்புக் கொள்கை”என்றால் என்ன?

     இறைவன் இருக்கின்றான் என்பதை விசுவாசிக்காதவர்களால் முன்வைக்கப்பட்ட ஒரு தவறான கருத்தே கூர்ப்புக் கொள்கையாகும். இக்கொள்கை சுமார் 150 வருடங்களுக்கு முன்னர் சார்ள்ஸ் டார்வின் என்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இயற்கை விஞ்ஞானியால்; முன்வைக்கப்பட்டது. இவரது பகுத்தறிவுக்கெட்டாத கொள்கையின் படி உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் தற்செயலாகத் திடீரெனத் தோன்றியவையாம். உதாரணமாக மீன்கள் திடீரென ஒரு நாள் ஊர்வன என்ற இனப்பரிமானத்தைப் பெற்றது. இன்னொரு நாள் அந்த ஊர்வன பறக்கத் தொடங்கிப் பறவைகளாயின. அதே போன்று குரங்குகள் மனிதர்களாக மாறின. இந்த வாதத்தில் எவ்வித உண்மையும் கிடையாது. ஒரே ஒரு உண்மை என்னவெனில் இந்த உலகத்தையும் அதில் உள்ள அனைத்து உயிரினங்களையும் படைத்தவன் அல்லாஹ் ஒருவனே. இவ்விடயத்தில் டார்வினும் அவரது சகாக்களும் ஒரு அப்பட்டமான பொய்யையே உலகறியச் செய்திருக்கிறார்கள். இதனை நவீன விஞ்ஞானமும் தலைமேல் தூக்கி வைத்து ஆராதித்து வருகின்றமைமாதான் வினோதமானது.

     உயிருள்ள உயிரற்ற அனைத்து பொருட்களினதும் மிகச் சிறிய பகுதி அணு எனப்படுகின்றது. அதாவது நாமும் எம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் பல மில்லியன் அணுக்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றௌம். பரிணாமவாதிகள்.  வெவ்வேறாக இருந்த அணுக்கள் தாமாகவே தீர்மானித்து ஒன்று சேர்ந்து உயிரினங்கள் தோற்றம் பெற்றன என்கின்றனர். ஒரு நாள் திடீரென்று ஏற்பட்ட பலத்த காற்று அல்லது புயல் இந்த அணுக்கள் ஒன்று சேரக் காரணமாக இருந்தது என இந்த மூடத்தனமான வாதம் சொல்கிறது.

     டார்வினின் கருத்துப்படி இந்த அணுக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கலங்கள் உருவாயின. எல்லா உயிரினங்களும் கலங்களால் ஆனவை என்பது நாம் அறிந்ததே. இந்தக் கலங்கள் ஒன்றிணைந்துதான் எமது உடம்பில் உள்ள கண்கள்,செவிகள்,இதயம்,  இரத்தம் என அனைத்தும் உருவாக்கப்பட்டுள்ளன.

     கலங்கள் மிகவும் சிக்கலான தொகுதிகள். ஒவ்வொரு கலமும் பல புன்னங்கங்களைக் கொண்டது. ஒரு கலத்தை நாம் ஒரு பாரிய தொழிற்சாலைக்கு ஒப்பிடலாம். அந்த வகையில் ஒரு கலத்தில் உற்பத்தியாளர்கள், பொருட்களை எடுத்துச் செல்வோர், நுளைவாயில், வெளியேறும் வாயில், உற்பத்தி நிலையம், தகவல் கொண்டுசெல்வோர் சக்திக் கட்டுப்பாட்டாளர் எனப் பலர் காணப்படுவர். இப்படியான ஒரு சிக்கலானதொரு தொழிற்சாலை எப்படித் தானாக உருவாக முடியும்? கற்கள், மண், சீமெந்து, நீர் என்பவையெல்லாம் சேர்ந்து திடீரென ஏற்பட்ட ஒரு புயலினால் ஒன்றிணைந்து ஒரு அங்க சம்பூரணமான தொழிற்சாலையாக மாறுவது எப்படி சாத்தியமாகும்? இது ஒருபோதும் முடியாது. இல்லை. இது சாத்தியம் என்று சொல்பவரை நாம் என்ன பெயர் கொண்டழைப்போம்? இதுபோன்றுதான் “கலங்கள் தற்செயலாக உருவாகின” என்று கூறுவோரின் நிலையும். இவர்கள் கூறும் வாதத்திற்;கு ஆதாரமாக ஏன் ஒரு சிறு பரிசோதனையைக் கூட இன்றைய பரிணாமவாதிகளால் நிகழ்த்திக் காட்ட முடியாது? உயிரில்லாத அணுக்கள் ஒன்று சேர்ந்தவுடன் உயிருள்ள ஒரு விலங்கு எப்படி உருவானது? இந்த வினாக்களுக்கு முன்னால் இந்த கூர்ப்பு வாதிகள் வாயடைத்துப் போகிறார்கள்.

கூர்ப்பு எப்படி நடைபெறுகிறதாம்?

    அல்லாஹ் எல்லா அங்கிகளையும் தனித்தனியே படைத்தான். ஒன்றிலிருந்து இன்னொன்றை அவன் கூர்ப்படையச் செய்யவில்லை. ஒவ்வொரு உயிரினமும் அவற்றிற்குரிய தனியான குணாதியசங்களோடு இருக்க வேண்டும் என்பதற்காகவே அவன் அப்படிச் செய்தான்.

     உயிரினங்கள் காலத்துக்குக் காலம் மாற்றமடைகின்றன. வளர்ச்சி பெறுகின்றன. இன்னுமோர் உயிரினமாகக் கூடக் கூர்ப்டைகின்றன என்கிறது பரிணாம வாதம். நாம் இன்று காணும் ஆமைகள், பல்லிகள் பாம்புகள் எல்லாம் பறவைகளாகக் கூர்ப்படைந்தன என இவர்கள் வாதிடுகின்றனர். இந்த மாறுதல்கள்களுக்கான காரணங்களை அவர்கள் இப்படி விளக்குகிறார்கள்.

1)  இயற்கைத் தேர்வு விதி
அதனை எளிதாக நாம் விளக்குவதாக இருந்தால் சூழலுக்குப் பொருத்தமான (இயைபாக்கம் அடையக் கூடிய) உயிரினங்கள் பிழைத்துக்கொள்ளும். இவை தவிர்ந்த பலவீனமான உயிரினங்கள் அழிந்துபோகும் என்று நாம் சொல்லலாம். உதாரணமாக ஒரு மான் கூட்டத்தை எடுத்துக் கொள்வோம். அவை அடிக்கடி வேட்டையாடும் விலங்குகளால் தாக்கப்படுகின்றன. இச்செயல் தொடந்து நடக்கும் போது மான்கள் வேகமாக ஓடத் தொடங்கும். அப்போது மிக வேகமாக ஓடத்தக்க மான்கள் மாத்திரம் பிழைத்துக் கொள்ளும். படிப்படியாகப் பலவீனமான மெதுவாக ஓடும் மான்கள் வேட்டையாடப்பட்டு முற்றாக அழிந்துபோய்விடும். நல்ல ஆரோக்கியமான பலமான மான்கள் மட்டும் எஞ்சும். எனவே காலப்போக்கில் இயைபாக்கம் அடையக் கூடிய மான்கள் மட்டும் உயிர்வாழும். இது வரை நாம் இங்கே சொன்னது  உண்மைதான். ஆனால் இதற்கும் கூர்ப்புக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. இதற்கு மாற்றமாக பரிணாமவாதம் இந்த மான் இனம் இன்னும் படிப்படியாக வளர்ச்சியுற்று இன்னோர் உயிரினமாக- உதாரணமாக ஒட்டகச் சிவிங்கியாக-  மாறிவிடும் என்கிறது. இது எவ்வளவு தவறானது என்பதை நாம் இலகுவில் விளங்கிக்கொள்ளலாம். மான்கள் எவ்வளவு வேகமாக ஓடினாலும் அதன் கழுத்து எவ்வளவு நீண்டாலும் பரவாயில்லை. ஆனால் அது எப்படி சிங்கமாக சிவிங்கியாக இன்னொரு உயிரினமாக மாற்றமடையும்? இப்படியான சம்பவங்களை நாம் மாயா ஜாலக் கதைகளிலேதான் காணலாம். அங்கே ஒரு தவளை அழகிய இளவரசனாக மாறும். இந்தக் கதையெல்லாம் நடைமுறையில் நிகழுமா?

2)  விகாரம்
விகாரம் என்பது உயிரினங்களின் உடம்பில் ஏற்படும் பயங்கரமான மாற்றத்தைக் குறிக்கும். இந்த விகாரத்துக்குக் காரணம் கதிர்வீச்சு  இரசாயனப் பதார்த்தங்கள் என்பனவாம். உண்மையில் கதிர்வீச்சு இரசாயனப் பதார்த்தங்கள் என்பன அனேகமாக உயிரினங்களுக்குத் தீங்கையே விளைவிக்கின்றன. 60 வருடங்களுக்கு முன்னர் நடந்த இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஜப்பானில் ஹிரோஷிமா நகரில் அணுக்குண்டு வீசப்பட்டது. இந்த அணுக்குண்டு வெளியிட்ட கதிர் வீச்சுக்கள் சுற்றியுள்ள பகுதியில் பரவியதால் மக்களுக்கு மிகவும் கொடூரமான பாதிப்புக்கள் ஏற்பட்டன. இக் கதிர்வீச்சுக் காரணமாக பல்வேறு உயிரிழப்புக்கள் கடும் காயங்கள் உருக்குலைவுகள் எனப் பல பாதிப்புக்கள் நேர்ந்தன.

     இப்படித்தான் ஒரு நாள் ஒரு மீன் விகாரத்துக்கு உட்படுகின்றது. அது ஹிரோஷிமா மக்கள் எதிர்கொண்ட ஒரு கதிர்வீச்சு போன்றது. இந்த விகாரத்தின் காரணமாக மீனின் உடம்பில் சில மாற்றங்கள் ஏற்பட்டு அது ஒரு முதளையாக மாறிவிடுகின்றது. அதாவது மீனின் உடம்பில் உள்ள கலங்களில் அமைந்திருக்கும் நிறமூர்த்தங்களில் ஏற்படும் மாற்றம் காரணமாக அடுத்துவரும் சந்ததிகளில் விதவிதமான விகாரங்கள் ஏற்பட்டு இறுதியில் முற்றிலும் வித்தியாசமான இன்னோர் உயிரியாக அது மாறிவிடுகின்றது. இது எவ்வளவு அபத்தமான வாதம்! நாம் ஏற்கனவே பார்த்தது போன்று விகாரம் என்பது எப்போதும் உயிரனங்களுக்கு தீங்கு விளைவி;ப்பதாகவே இருந்துவந்துள்ளது. இதன் மூலம் ஒன்றில் உயிரினங்கள் அழந்துபோகவோ முடமாகவோஇ பலவீனமாகவோ மாறிவிடும்.

     இந்தப் பரிணாமவாதிகளின் வாதத்தைப் பின்வரும் உதாரணத்துக்கு ஒப்பிடலாம். நாம் ஒரு கோடாரியை எடுத்து கறுப்பு வெள்ளைத் தொலைக் காட்சிப் பெட்டி ஒன்றைத் தகர்க்கின்றௌம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அது அப்போது ஒரு வர்ணத் தொலைக்காட்சியாக மாறிவிடுமா? ஒரு போதும் இல்லை. நிச்சயமாக அது உடைந்து தகர்ந்து போய்விடும். இப்படித்தான் திடீரென நிகழும் விகாரம் ஒருபோதும் உயிரினத்துக்கு நன்மை பயக்காது.

நிலைமாறும் வடிவம் என்றால் என்ன?

 பரினாமவாதிகள் கண்டுபிடித்த இன்னுமோர் பொய்தான் “நிலைமாறும் வடிவம்”. இது சிலபோது “இடைக் கடப்பு வடிவம்” என்றும் இவர்களால் அழைக்கப்படுவதுண்டு.

     உயிரினங்கள் எல்லாம் இன்னொன்றில் இருந்து கூர்ப்பு அடைந்தன முதல் உயிரினம் தற்செயலாகத் தோற்றம் பெற்றது என்றும் அதிலிருந்து இன்னொரு உயிரினமும் அதிலிருந்து பிரிதொரு உயிரினமும் வளர்ச்சி கண்டது என்றெல்லாம் நம்புமாறு பரினாமவாதிகள் எங்களைக் கேட்கின்றனர். உதாரணமாக மீன் இனம் நட்சத்திர மீன் வகையிலிருந்து கூர்ப்படைந்தது என்கின்றனர் இவர்கள். இதன் கருத்து ஒருநாள் திடீரென ஏற்பட்ட விகாரத்தினால் நட்சத்திர மீனின் ஒரு கையை அது இழந்தது. பின்னர் அடுத்து வந்த மில்லியன் கணக்கான வருடங்களில் அதன் ஏனைய கால்களையும் படிப்படியாக இழந்து அவ்விடத்தில் செட்டைகள் தாமாகவே முளைக்கத் தொடங்கின. இதே கால கட்டத்தில் ஒரு மீனுக்கு எவை எவையெல்லாம் அவசியமோ அந்த மாற்றங்கள் எல்லாம் ஏற்பட்டன. இப்படி ஒரு நட்சத்திர மீன் சாதாரண மீன் வடிவைப் பெற்றது என்றால் இது ஒரு அதீத கற்பனையாகத் தெரியவில்லையா?

     இந்த நிலைமாறும் பருவத்தில் வாழ்ந்த கற்பனை ஜீவிகள் கூர்ப்புப் படிமுறையில் “இடை அங்கிகள்” (ஐவெநசஅநனயைவந ளுpநஉநைள) எனப்படுகின்றன. உதாரணமாக நட்சத்திர மீனுக்கும் சாதாரண மீனுக்கும் இடைப்பட்ட பருவம். அல்லது குரங்குக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட பருவம். இந்தப் பரினாமவாதத்தின்படிஉயிரினங்கள் எல்லாம் பதாங்கத்துக்குரிய (எநளவபையைட) அல்லது முழுமைபெறாத அரைகுறையான ஒரு கட்டத்தைத் தாண்டியிருக்க வேண்டும். இப்படி விகாரமான முழுமைபெறாத அரைகுறை உயிரிகள் பற்றி இதுவரை எந்தத் தடயமும் கிடைக்கப்பெறவில்லை. இவர்கள் கூறும் “இடை அங்கிகள்” இன் உயிர்ச்சுவட்டு ஆதாரங்கள் உலகின் எப்பாகத்திலும் இதுவரை கண்டெடுக்கப்படவில்லை.

குரங்கிலிருந்து மனிதனா?

     மனிதன் அல்லாஹ்வின் மிக உன்னதமான சிருஷ்டி. அந்த மனிதனைக் குரங்குகளின் வழித்தோன்றல் என்பது நம்மையே நாம் தாழ்த்திக்கொள்வதாகவல்லவா இருக்கும்? இந்தப் பரிணாமவாதிகள் யூத எனப்படும் வால் இல்லாக் குரங்களிலிருந்து மனிதன் தோன்றினான் என்கிறார்கள். இவ்வாறு இவர்கள் கூறுவதற்கு சிறுபிள்ளைத் தனமான காரணங்கள் சில உள்ளன.

     ஒன்று குரங்குகள் மனதனை உருவத்தில் ஒத்ததாக இருப்பது. அப்படியாயின் மனதனைப் போல் கிளி பேசுகிறது. மனிதனது கண்களை ஒத்த கண்கள் ஒக்டோபஸ்களுக்கு உள்ளன. நாய், பூனை என்பன மனிதனைப் போல் கட்டளைகளைப் பின்பற்றுகின்றன. இதற்காக மனிதன் நாயிலிருந்து, பூனையிலிருந்து, கிளியிலிருந்து,  ஒக்டோபஸிலிருந்து தோன்றினான் என்று கூற முடியுமா?

     அடுத்து இவர்கள் இக்கருத்தை நிறுவுவதற்காக முன்வைக்கும் உயிர்ச்சுவட்டு ஆதராங்களைப் பார்ப்போம். இவர்கள் மனிதனது பரணாம வளர்ச்சிக் கட்டங்களாகக் காட்டும் படங்களும் போலியானவையே. உலகில் பல வித்தியாசமான இனங்கள் வெவ்வேறு பகுதிகளில் வாழ்கின்றனர். இவ்வினத்தவர்கள் ஒருவருக்கொருவர் தோற்றத்திலும் நிறத்திலும் மிகவும் வித்தியாசமானவர்கள். உதாரணமாக எஸ்கிமோக்கள் ஆபிரிக்கர்கள், சீனர்கள்,அபோரிஜீன்ஸ்கள் எனப் பல்வேறு இனங்கள் உலகில் உள்ளனர். இவர்களில் எஸ்கிமோக்கள் மிகவும் சிறியவர்கள். அபோரிஜீன்ஸ்களுடைய மண்டையோடு ஒப்பீட்டளவில் சிறியது. இப்படி வித்தியாசமான இனங்களின் சுவடுகளின் மண்டையோடுகளை வைத்துக்கொண்டு இவை மனிதன் குரங்கிலிருந்து மாறும் நிலைப் பருவத்துக்குச் சொந்தமானது என்று கூறி  உலகை ஏமாற்றமுனைகின்றனர் இந்தப் பரிணாமவாதிகள். இதுவரை இவர்களால்  அரைகுறை மனிதக் குரங்கின் தடயங்களை உலகின் எந்த மூலைமுடுக்கிலாவது கண்டெடுக்கமுடியவில்லை.

உண்மை தெளிவானது!

     இப்படிப் பரினாமவாதிகள் சோடித்துக் கூறும் இந்தக் “கதை”களை எல்லாம் அறிவு பூர்வமாகவும் தர்க்க ரீதியாகவும் இலகுவாகத் தகர்த்தெறிந்துவிடமுடியும். இவை எல்லாவற்றுக்கும் மேலாகஇ இந்த டார்வினின் போலிவாதங்களை  எல்லாம் அல்-குர்ஆன் முழுமையாக மறுக்கின்றது. அல்லாஹ் இருக்கின்றான் என்பதற்காக அல்குர்ஆன் முன்வைக்கும் ஆதாரங்கள்இ அத்தாட்சிகள் முன் இந்தப் பொய்கள் எல்லாம் எப்பெறுமானமும் அற்றுப் போய்விடுகின்றன.

     ஆகவேஇ உயிரினங்கள் ஒருபோதும் இன்னொன்றிலிருந்து வளர்ச்சி பெறவில்லை. உயிரினங்கள் ஒவ்வொன்றையும்  அல்லாஹ் அதற்கே  உரிய தனிப் பண்புகளோடு படைத்தான். அவை ஒரு போதும் அரைகுறை வளர்ச்சிக் கட்டத்தைத் தாண்டி வரவில்லை. அல்லாஹ் எதனையும் ப+ரணமாகப் படைப்பவன். அவனது படைப்பில் எவ்விதக் குறைபாடும்இ குளறுபடியும் நிகழ்வதில்லை. ஓர் உயிரினத்தில் இருந்துதான் இன்னொரு உயிரினத்தைப் படைக்க வேண்டும் என்ற வறுமையும் அவனுக்கு இல்லை. அவன் இல்லாமையில் இருந்து படைப்பவன். அவன் எந்தவொன்றையும் படைக்க நாடினால் ஒரு வார்த்தையே போதுமானது. அவன் தான் வானங்கள் பூமி உயிரினங்கள் அனைத்தையும் நுணுக்கமான திட்டமிடலுடன் படைத்துக் காப்பவன். எனவே இந்தத் தெளிவான உண்மையை விட்டும் மக்களைத் திசைதிருப்ப முயலும் கூர்ப்புக் கொள்கை போன்ற நச்சுக் கருத்துக்களிலிருந்து நாமும் விடுபட்டு எம் சமூகத்தையும் பாதுகாப்போம்.

“வானங்கள் பூமி அனைத்தையும் படைத்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்” (ஸூறா பாதிர்)

நன்றி : ஹாரூன் யஹ்யா

ஸீறா தொடர்பான வினாக்கள்
01)    நபி (ஸல்) அவர்கள் எங்கே பிறந்தார்கள்?
02)    நபி (ஸல்) அவர்கள் எந்தக் கோத்திரத்தில் பிறந்தார்கள்?
03)    நபி (ஸல்) அவர்களின் தாய், தந்தை யாவர்?
04)    நபி (ஸல்) அவர்கள் பிறந்த வருடம் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
05)    நபி (ஸல்) அவர்கள் பிறந்த மாதம்  தினம் என்ன?
06)    நபி (ஸல்) அவர்களுக்குப் பாலூட்டிய செவிலித்தாய்மார்கள் யாவர்? .
07)    தாயின் மரணத்தின் பின் நபி (ஸல்) அவர்கள் யாரிடம் வளர்ந்தார்கள்? 
08)    பாட்டன் அப்துல் முத்தலிப் மரணித்ததின் பின் நபி (ஸல்) அவர்கள் யாரிடம் ஒப்படைக்கப்பட்டார்கள்?
09)    நபி (ஸல்) அவர்கள் சிறுவயதில் எந்தத் தொழிலில் ஈடுபட்டார்கள்? 
10)    நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் தஆலா சிறுவயதிலிருந்தே வீணான கேளிக்கைகளில் இருந்து பாதுகாத்தான் என்பதற்கு ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுக.
நபி (ஸல்) அவர்கள் இளைஞராக இருந்தபோது திருமண வைபவம் ஒன்று நடந்தது. இங்கே ஒரு பாடல் இசைக்கப்பட்டது. இதனைச் செவிமடுக்கவும் பார்க்கவும் நபி (ஸல்) அவர்கள் விரும்பினார்கள். ஆயினும் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு அதனைக் கேட்கவிடாமல் தூக்கத்தை ஏற்படுத்தினான்.
11)    நபி (ஸல்) அவர்களுக்கு நபிப்பட்டம் கிடைக்கும் முன்னரே சமூகத்தில் கௌரவமும் மதிப்பும் காணப்பட்டது என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுக.
கஃபாவைப் புனர்நிருமாணம் செய்ய முற்பட்டபோது ஹஜருல் அஸ்வத் கல்லை யார் வைப்பது என்பது சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சினையை மிகவும் கவனமாகத் தீர்த்து வைத்தார்கள். ஒரு துணி மீது ஹஜருல் அஸ்வத் கல்லை வைத்து கோத்திரத் தலைவர்களைத் தூக்க வைத்து பின்னர் அதனை நபி (ஸல்) அவர்கள் உரிய இடத்தில் வைத்தார்கள்.
12)    நபி (ஸல்) அவர்களின் இளமைக்காலத்திலேயே அவர்களுக்கு மக்காவாசிகள் வைத்த சிறப்புப் பெயர்கள் யாவை?
ஸாதிக் அமீன்
13)    நபி (ஸல்) அவர்கள் ஆடுமேய்த்ததைத் தொடர்ந்து என்ன தொழிலில் ஈடுபட்டார்கள்?
வியாபாரம் - ஆரம்பத்தில் அபூ தாலிபுடன் ஈடுபட்டார்கள். பின்னர் கதீஜா நாயகியின் வியாபாரத்தில் ஈடுபட்டார்கள்.
14)    நபி (ஸல்) அவர்கள் நபியாகத் தெரிவுசெய்யப்பட முன்னர் நடந்த அற்புதங்களில் ஒன்றைக் குறிப்பிடுக.
கதீஜா நாயகியின் வியாபாரத்தில் செல்லும் போது நபி (ஸல்) அவர்களைத் தொடர்ந்து மேகக் கூட்டம் வந்தமை.
15)    நபி (ஸல்) அவர்கள் தனது 25 ஆம் வயதில் முதன் முதலாக யாரைத் திருமணம் முடித்தார்கள்?
கதீஜா (ரழி) அவர்கள் (40 வயது)

16)    நபி (ஸல்) அவர்களுக்கு முதல் வஹி எப்போது இறங்கியது? தனது 40ஆம் வயதில்.
17)    நபி (ஸல்) அவர்களுக்கு எங்கே வைத்து வஹி இறங்கியது? ஹிறா குகையில்
18)    நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து வஹியை எடுத்துவந்தவர் யார்? ஜிப்றீல் (அலை)
19)    நபி (ஸல்) அவர்களுக்கு முதல் வஹி இறங்கிய சந்தர்ப்பத்தைக் குறிப்பிடுக.
நபி (ஸல்) அவர்கள் ஹிறாக் குகையில் இருந்த போது ஜிப்றீல் (அலை) அவர்கள் வந்து நபி (ஸல்) அவர்களை இறுக அணைத்து ஓதுவீராக ஓதுவீராக ஓதுவீராக என மூன்று முறை கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் மூன்று முறையும் எனக்கு ஓதத் தெரியாது என்றே குறிப்பிட்டார்கள். பின்னர் ஜிப்றீல் (அலை) அவர்கள் ஸூறா அலக் இன் முதல் ஐந்து வசனங்களையும் ஓதிக் காட்டி ஓதுமாறு குறிப்பிட்டார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களும் ஓதினார்கள். பின்னர் பதற்றத்தோடு வீடு சென்றார்கள். நபியவர்களை கதீஜா (ரழி) அவர்கள் ஆறுதல்படுத்தினார்கள்.
20)    முதன் முதலாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர் யார்? கதீஜா (ரழி)
21)    கதீஜா நாயகியின் பின்னர் இஸ்லாத்தை ஏற்றவர் யார்? அலி (ரழி)
22)    நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை இரகசியமாகப் பரப்புவதற்கு யாருடைய வீட்டைப் பயன்படுத்தினார்கள்? அர்கம் இப்னு அபில் அர்கம்
23)    நபி (ஸல்) அவர்கள் முதன் முதலாகப் பகிரங்கமான பிரச்சாரத்தை எங்கே இருந்து செய்தார்கள்? அச்சம்பவத்தைக் குறிப்பிடுக.
ஸபா மலையில் இருந்து. ஸபா மலையில் ஏறி குறைசிக் காபிர்களை நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். அவர்களை இஸ்லாத்தின் பால் அழைத்தார்கள். அப்போது அபூ லஹப் நபிகளாரைத் தூற்றினான். இவனை எதிர்த்து அல்லாஹ் ஸூறா லஹபை இறக்கிவைத்தான்.
24)    குறைசியரின் தொல்லைகள் அதிகரித்தபோது நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களில் சிலரை எங்கே ஹிஜ்றத் செல்லுமாறு பணித்தார்கள்? ஹபசா
25)    ஆமுல் ஹுஸ்ன் (துக்க ஆண்டு) என அழைக்கப்படுவது எது? நபி (ஸல்) அவர்களுடைய சிறிய தந்தை அபூ தாலிப் மனைவி கதீஜா (ரழி) ஆகியோர் மரணித்த வருடம்.
26)    நபி (ஸல்) அவர்கள் முதன் முதலாக எங்கே ஹிஜ்றத் செய்தார்கள்? தாஇப்
27)    உமர் (ரழி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற சம்பவத்தைச் சுருக்கமாகக் குறிப்பிடுக.
தங்கை பாத்திமா (ரழி) அவர்கள் குர்ஆன் ஓதக் கேட்டு இஸ்லாத்துக்கு வந்தமை.
28)    இஸ்றா,  மிஃறாஜ் ஆகியவை யாவை?
இஸ்றா என்பது நபி (ஸல்) அவர்கள் மக்காவில் கஃபாவிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு இரவுப் பயணம் மேற்கொண்டமை. மிஃறாஜ் என்பது மஸ்ஜிதுல் அக்ஸாவிலிருந்து விண்ணுலக யாத்திரை மேற்கொண்டமை.
29)    மிஃறாஜின் போது இடம்பெற்ற முக்கியமான நிகழ்வு எது? தொழுகை கடமையாக்கப்பட்டமை.
30)    மிஃறாஜ் எப்போது நடைபெற்றது? நுபுவ்வத் 10ஆம் வருடம்
31)    நபி (ஸல்) அவர்கள் மக்காவில் வைத்து மதீனாவாசிகளுடன் செய்துகொண்ட உடன்படிக்கைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? அகபா உடன்படிக்கைகள். (இரண்டு)
32)    மதீனாவின் பழைய பெயர் என்ன? யத்ரிப்
33)    நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்றத் சென்ற இரவு அவர்களின் படுக்கையில் உறங்கிய ஸஹாபி யார்? அலி (ரழி)
34)    நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்றத் செய்வதற்காகத் தெரிவுசெய்த நபித் தோழர் யார்? அபூ பக்ர் (ரழி)
35)    நபி (ஸல்) அவர்கள்; ஹிஜ்றத் செய்யும் வழியில் தங்கியிருந்த குகை எது? ஸவ்ர் குகை. (சம்பவத்தைக் குறிப்பிடுக)
36)    நபி (ஸல்) அவர்கள் தனது எத்தனையாவது வயதில் ஹிஜ்றத் செய்தார்கள்? 53ஆம் வயதில்
37)    ஹிஜ்றத்தின் போது நபி (ஸல்) அவர்களுக்கும் அபூ பக்ர் (ரழி) அவர்களுக்கும் தேவையான பயணப்பொதிகளைத் தயார்படுத்திக் கொடுத்த இரு ஸஹாபிப் பெண்களும் யாவர்? ஆயிசா (ரழி) அஸ்மா (ரழி)
38)    மதீனா சேர்ந்த நபியவர்களை மதீனத்துவாசிகள் எப்பாடலைப் பாடி வரவேற்றார்கள்? தலஅல் பத்ரு அலைனா…
39)    இஸ்லாமிய வரலாற்றில் நபி (ஸல்) அவர்களின் வருகையின் பின்னர் முதன் முதல் கட்டப்பட்ட பள்ளிவாசல் எது? மஸ்ஜிது குபா
40)    நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் கட்டிய பள்ளிவாசல் எவ்வாறு அழைக்கப்படுகின்றது? மஸ்ஜிதுன் நபவி
41)    முஸ்லிம்களின் முதலாவது கிப்லாவாக அமைந்தது எது? பைதுல் மக்திஸ்
42)    முஸ்லிம்களின் இரண்டாவது கிப்லா எது? கஃபா
43)    இஸ்லாமிய வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட முதல் போர் எது? பத்ர் யுத்தம் - ஹிஜ்றி 2 இல்
44)    பத்ர் யுத்தத்தில் கலந்துகொண்ட முஸ்லிம்கள், காபிர்கள் எத்தனை பேர்? 313 முஸ்லிம்கள், 1000 காபிர்கள்.
45)    உஹத் யுத்தம் எப்போது நடைபெற்றது? ஹிஜ்றி 3 இல்
46)    உஹத் யுத்தத்தில் கலந்து கொண்ட முஸ்லிம்கள்,  காபிர்கள் எத்தனைபேர்? 1000 முஸ்லிம்கள்,  3000 காபிர்கள்
47)    உஹத் யுத்தத்தில் முஸ்லிம்கள் பின்னடைவதற்குக் காரணமான விடயம் என்ன? முஸ்லிம்களில் சிலர் தலைதை;துவத்துக்குக் கட்டுப்படாமை.
48)    அஹ்ஸாப் யுத்தம் எப்போது நடைபெற்றது? ஹிஜ்றி 5ஆம் ஆண்டு.
49)    அஹ்ஸாப் யுத்தத்தில் பங்குகொண்ட முஸ்லிம்கள், காபிர்கள் எத்தனை பேர்? 3000 முஸ்லிம்கள்,  10000 காபிர்கள்
50)    அஹ்ஸாப் யுத்தத்தில் அகழி தோண்டுமாறு ஆலோசனை கூறிய ஸஹாபி யார்? ஸல்மானுல் பாரிஸி (ரழி)
51)    ஹுதைபிய்யா உடன்படிக்கை எப்போது நடைபெற்றது? ஹிஜ்றி 6 இல்
52)    ஹுதைபிய்யா உடன்படிக்கை யார் யாருக்கிடையில் நடைபெற்றது? முஸ்லிம்களுக்கும் குறைசிக் காபிர்களுக்கும் இடையில்
53)    ஹுதைபிய்யா உடன்படிக்கை மூலம் எத்தனை வருடப் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது? 10 வருடங்கள்
54)    மக்கா வெற்றி எப்போது நிகழ்ந்தது? ஹிஜ்றி 08 இல்
55)    மக்கா வெற்றியின் போது இஸ்லாத்தை ஏற்ற பலருள் இஸ்லாத்தின் முக்கிய எதிரியாகத் திகழ்ந்தவர் யார்? அபூ சுபியான்
56)    யூதர்களின் அட்டூழியங்களை ஒடுக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட யுத்தங்கள் இரண்டைத் தருக.
கைபர் யுத்தம்,  தபூக் யுத்தம்
57)    இறுதி ஹஜ் உபதேசம் எப்போது நடைபெற்றது? ஹிஜ்றி 10
58)    இறுதி ஹஜ் பேருரை எங்கு நடைபெற்றது? அறபா மைதானம் ஜபலுர் ரஹ்மா மலையடிவாரம்
59)    இறுதி ஹஜ் எவ்வாறு அழைக்கப்படுகின்றது? ஹஜ்ஜதுல் விதாஃ
60)    இறுதி ஹஜ்ஜில் நபி (ஸல்) அவர்கள் வலியூறுத்திய முக்கிய விடயங்கள் யாவை?
அனைவரது உரிமையூம் பாதுகாக்கப்படவேண்டும். வட்டி கூடாது. தொழுகையை நிலைநாட்டுங்கள்இ குர்ஆன்இ ஸஷுன்னாவைப் பின்பற்றுங்கள்.
61)    நபி (ஸல்) அவர்கள் எப்போது வபாத்தானார்கள்?
தனது 63ம் வயதில் மதீனாவில்.